சமற்கிருத ஆதிக்கம் (நூல்)

சமற்கிருத ஆதிக்கம் என்னும் இந்த நூல் முதன் முதல் 1985 ஆம் ஆண்டில் திராவிடர் கழக (இயக்க)ப் பதிப்பாக வெளிவந்தது. இரண்டாம் பதிப்பு 2014 திசம்பரில் வெளிவந்தது.

நூலின் வரலாறு

பெரியார் திறந்த பல்கலைக் கழகத்தின் சார்பில் 1985 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 9, 10 தேதிகளில் சமற்கிருத மயமாக்கப்பட்டமை என்னும் பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் அறிஞர்கள் படித்த 22 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாக உருப்பெற்றது.

கட்டுரைகளும் ஆக்கியோரும்

  1. பண்பாடு சமற்கிருதமயமாக்கப்படுதல்--முனைவர் க. த. திருநாவுக்கரசு
  2. நமது பண்பாடு சமற்கிருதமயமாக்கப்பட்டமை--தி.வை. சொக்கப்பா
  3. தமிழ் முப்பால் மரபும் வடமொழி நாற்பால் மரபும்--முனைவர் தி.முருகரத்தனம்
  4. தமிழர் திருவிழாக்கள் சமற்கிருதமயமாக்கப்பட்டமை-திருக்கார்த்திகையும் தீபாவளியும்--முனைவர் தமிழண்ணல்
  5. சமற்கிருத மயமாக்கப்பட்ட தமிழிலக்கணம்--பெ.திருஞானசம்பந்தன்
  6. தமிழ்ச் சொற்கள் சமற்கிருதமயமாக்கப்பட்டமை-தமிழ் அரசு--முனைவர் தமிழண்ணல்
  7. கணக்கு வழக்கு எங்கே?--இராம.சுப்பிரமணியன்
  8. தமிழ்ச் சித்தர்கள் இலக்கியங்களில் வடமொழி ஆட்சி --முனைவர் இரா. மாணிக்கவாசகம்
  9. தமிழ்மொழியில் வடசொற்கள் புகுந்தமை --முனைவர் சி. பாலசுப்பிரமணியன்
  10. சமுதாய வாழ்வில் வடமொழி மேலாண்மை--முனைவர் பொற்கோ
  11. இசை, ஆடற்கலைகள் சமற்கிருத மயமாக்கப்பட்டமை--ப.தண்டபாணி
  12. இசையுலகில் வடமொழி ஆதிக்கம்--முனைவர் சேலம் எஸ் செயலட்சுமி
  13. சித்த மருத்துவத்தில் வடமொழிக் கலப்பு--முனைவர் ப.சிற்சபை
  14. சமயப் மெய்ப்பொருளியல்களில் சமற்கிருதம்--முனைவர் தெ. ஞானசுந்தரம்
  15. சைவ சமயமும் மெய்ப்பொருளியலும் சமற்கிருதமயமாக்கப்பட்டமை --எஸ்.கெங்காதரன்
  16. தமிழர் சமய நெறிகள் சமற்கிருதமயமாக்கப்பட்டமை--மதுரை குரு மகாசன்னிதானம்
  17. வேத மொழியும் பேத மொழியும்--கரூர் பி.ஆர்.குப்புசாமி
  18. சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் --கு. வெ. கி. ஆசான்
  19. சமுதாய வாழ்க்கை சமற்கிருதமயமாக்கப்பட்டமை--தி.இராமதாஸ்
  20. சங்க அரசியல் சமற்கிருதமயமாதல் --திருமதி மீனாட்சி முருகரத்தனம்
  21. தமிழக வரலாற்றில் ஆரியம் விளைத்த அழிவுகள் --பேராசிரியர் ந. க. மங்கள முருகேசன்
  22. நில உரிமைகளில் சமற்கிருத வழக்கு--முனைவர் அ. இராமசாமி
  23. தந்தை பெரியார் கருத்தரங்க தொடக்க உரை--முனைவர் வ. ஐ. சுப்பிரமணியம்
  24. தலைமை உரை--நீதியரசர் பி.வேணுகோபால்
  25. முனைவர் மா. நன்னன் அறிமுகவுரை
  26. மானமிகு கி. வீரமணி வரவேற்புரை

சான்று