சட்டம் என் கையில்

சட்டம் என் கையில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

சட்டம் என் கையில்
திரைப்பட விளம்பர சுவரொட்டி
இயக்கம்டி. என். பாலு
தயாரிப்புடி. என். பாலு
(பாலு சினி ஆர்ட்ஸ்)
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீபிரியா
சுருளி ராஜன்
சத்யராஜ்
ஒளிப்பதிவுஎன். கே. விசுவநாதன்
படத்தொகுப்புவி. ராஜகோபால்
வெளியீடுசூலை 14, 1978 (1978-07-14)
நீளம்3998 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சத்யராஜ் நடித்த முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்தை இந்தி மொழியில் 1982 இல் இயக்குநர் டி. ராமராவ் ஏ தோ கமால் ஹோகயா (yeh To Kamaal Ho Gaya) எனும் பெயரில் கமல்ஹாசன், பூனம் தில்லான் ஆகியோரை வைத்து மீண்டும் படமாக்கினார்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகளை எழுதியிருந்தார்.

எண். பாடல் பாடகர்(கள்) நீளம் (நி:வி)
1 "ஆழக் கடலில்" மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி 4:08
2 "சொர்க்கம் மதுவிலே" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:34
3 "ஒரே இடம்" பி. சுசீலா 4:40
4 "கடை தேங்காயோ" மலேசியா வாசுதேவன் 4:35
5 "மேரா நாம் அப்துல்லா" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:10

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சட்டம்_என்_கையில்&oldid=32975" இருந்து மீள்விக்கப்பட்டது