சங்கீரணவணி
சங்கீரணவணி அல்லது சங்கீரண அணி என்பது பல்வேறு அணிகளை ஒரு செய்யுளுக்குள்ளே வைத்துப்புனைவதாகும்.
குறிப்பு
- "மொழியப் பட்ட அணிபல தம்முள்
- தழுவ வுரைப்பது சங்கீ ரணமே." --- என்கிறது தண்டியலங்காரம் 89-ம் பாடல்.
பொருள்
பின்வரும் பலவகையான பொருளணிகளில் இரண்டோ அதனினும் மேலோ சில அணிகளைக்கொண்டு செய்யுள் புனைந்தால் அது சங்கீரண அணி எனப்படும்.
பல அணிகள்
தண்டியலங்காரத்தில் பின் வரும் பல அணிகள் புலப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் சிலவற்றை ஒரே செய்யுளில் கலந்து ஆட்கொள்வதே சங்கீரணவணி.
- தன்மையணி
- உவமையணி
- உருவகவணி
- தீவக அணி
- பின்வருநிலையணி
- முன்னவிலக்கணி
- வேற்றுப்பொருள் வைப்பணி
- வேற்றுமையணி
- விபாவனை அணி
- ஒட்டணி
- அதிசய அணி
- தற்குறிப்பேற்ற அணி
- ஏதுவணி
- நுட்ப அணி
- இலேச அணி
- நிரல்நிறை அணி
- ஆர்வமொழியணி
- சுவையணி
- தன்மேம்பாட்டுரை அணி
- பரியாய அணி
- சமாகிதவணி
- உதாத்தவணி
- அவநுதியணி
- மயக்க அணி
- சிலேடையணி
- விசேட அணி
- ஒப்புமைக் கூட்டவணி
- ஒழித்துக்காட்டணி
- விரோதவணி
- மாறுபடுபுகழ்நிலையணி
- புகழாப்புகழ்ச்சியணி
- நிதரிசன அணி
- புணர்நிலையணி
- பரிவருத்தனை அணி
- வாழ்த்தணி
- பாவிக அணி