கேளடி கண்மணி

கேளடி கண்மணி (Keladi Kannmanii) என்பது 1990ஆவது ஆண்டில் வசந்த் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபல இந்திய பின்னணிப் பாடகரான எஸ். பி. பாலசுப்ரமணியம் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ராதிகா, ரமேஷ் அரவிந்த், கீதா, விவேக் ஆகியோர் இதர முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வசந்த் இயக்கிய முதல் திரைப்படமான இது 200 நாட்களைக் கடந்து ஓடிய வெற்றித் திரைப்படமாகும்.

கேளடி கண்மணி
இயக்கம்வசந்த்
தயாரிப்புஏ. சுந்தரம்
கதைஅனந்து
திரைக்கதைவசந்த்
இசைஇளையராஜா
நடிப்புஎஸ். பி. பாலசுப்ரமணியம்
ராதிகா
கீதா
ஜனகராஜ்
அஞ்சு
ரமேஷ் அரவிந்த்
விவேக்
பூர்ணம் விஸ்வநாதன்
ஒளிப்பதிவுரகுநாத ரெட்டி
படத்தொகுப்புகணேஷ் குமார்
கலையகம்விவேக் சித்ரா புரொடக்சன்சு
விநியோகம்விவேக் சித்ரா புரொடக்சன்சு
வெளியீடு27 சூலை 1990
ஓட்டம்147 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்6.7 கோடி

நடிகர்கள்

தயாரிப்பு

கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய வசந்த் இந்த திரைப்படத்தின் வாயிலாகவே தமிழ்த் திரைப்படத்துறையில் இயக்குநராக அறிமுகமானார்.[1] இப்படத்தில் ராதிகா அழும் காட்சியே, தான் இயக்கிய முதலாவது காட்சி என்று வசந்த் கூறுகிறார்.[2]

பெற்ற விருதுகள்

பாடல்கள்

இப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா ஆவார்.[3]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 என்ன பாடுவது எஸ். பி. பாலசுப்ரமணியம், இளையராஜா கங்கை அமரன் 04:43
2 கற்பூர பொம்மை ஒன்று பி. சுசீலா மு. மேத்தா 04:45
3 மண்ணில் இந்த காதலின்றி எஸ். பி. பாலசுப்ரமணியம் வரதராஜன் 04:13
4 நீ பாதி நான் பாதி கே. ஜே. யேசுதாஸ், உமா ரமணன் வாலி 04:40
5 தண்ணியிலே நனைஞ்சா உமா ரமணன் வாலி 04:41
6 தென்றல் தான் கே. ஜே. யேசுதாஸ், சித்ரா பிறைசூடன் 04:41
7 வாரணம் ஆயிரம் எஸ். ஜானகி ஆண்டாள் 02:45

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:வசந்த் இயக்கிய திரைப்படங்கள்

"https://tamilar.wiki/index.php?title=கேளடி_கண்மணி&oldid=32551" இருந்து மீள்விக்கப்பட்டது