கிங் காங் (நடிகர்)
கிங் காங் ( பிறப்பு சங்கர் ) என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். கிங் காங்கின் நடனம் இடம்பெற்ற அதிசயப் பிறவி (1990) படத்தின் துண்டுக் காட்சி லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் இணையத்தில் வைரல் ஆனது.[3][4]
கிங் காங் | |
---|---|
பிறப்பு | ஏ. சங்கர் 18 ஆகத்து 1971[1] வரதராஜபுரம், தமிழ்நாடு, இந்தியா[2] |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1985-தற்போது வரை |
பெற்றோர் | ஏழுமலை, காசியம்மாள் |
வாழ்க்கைத் துணை | கலா |
தொழில்
கிங் காங் தமிழ் படங்களில் முதன்மையாக நகைச்சுவை துணை வேடங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் தோன்றிய இவர் நடனக் கலைஞராக மேடை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.[5] ரஜினிகாந்திற்கு முன்னால் கிங் காங் நடனமாடிய அதிசயப் பிறவி (1990) திரைப்படத்தின் துண்டுக் காட்சி 2000 களின் பிற்பகுதியில் " லிட்டில் சூப்பர்ஸ்டார் " என்ற பெயரில் பிரபலமான இணைய வைரல் கானொளியாக மாறியது.
2007 ஆம் ஆண்டில், இவர் வறுமையில் வாடுவதாக செய்திகள் வந்தன.[6] இதன் பிறகு இவர் மீண்டும் பட வாய்ப்புகள் பெற்று படங்களில் தோன்றத் தொடங்கினார். குறிப்பாக போக்கிரியில் ஒரு நடனக் காட்சியில் தோன்றினார். பின்னர் வடிவேலுவுடன் நகைச்சுவைக் காட்சிகளில் கருப்பசாமி குத்தகைதாரர் (2007) மற்றும் கந்தசாமி (2009) ஆகியவற்றில் தோன்றினார். நடிகை சகீலாவுக்கு ஜோடியாக ஒன்னற குள்ளன் என்ற பெயரிலான குறைந்த செலவில் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் எடுக்கபட்ட திரைப்படத்தில் இவர் பணியாற்றத் தொடங்கினார். ஆனால் படம் வெளியிடப்படாமல் உள்ளது.[7]
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1988 | நெத்திஅடி | ||
1988 | ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் | ||
1988 | யமுடிக்கி மொகுடு | தெலுங்கு படம் | |
1989 | அன்புக்கட்டளை | ||
1989 | கில்லாடி ஜோகி | கன்னட படம் | |
1990 | ராஜா விக்ரமரகா | தெலுங்கு படம் | |
1990 | அதிசயப் பிறவி | நடனக் கலைஞர் | |
1991 | கிழக்கு கரை | ||
1992 | சின்ன பசங்க நாங்க | ||
1993 | சின்ன ஜமீன் | ||
1994 | சின்னபுள்ள | ||
1994 | ஊழியன் | ||
1994 | கண்டுகல்லி | கன்னட படம் | |
1994 | கரனா மொகுடு | தெலுங்கு படம் | |
1995 | ஜமீன் கோட்டை | பாண்டி | |
1996 | கட்டபஞ்சாயத்து | ||
1996 | பாஞ்சாலங்குறிச்சி | ||
1996 | டேக் இட் ஈசி ஊர்வசி | ||
1997 | சக்தி | ||
1997 | கூங்காட் | இந்தி படம் | |
1998 | நாம் இருவர் நமக்கு இருவர் | ||
1998 | தினந்தோறும் | ||
1998 | புதுக்குடித்தனம் | அருவா வேலு | |
1999 | சிவன் | நட்டு | |
1999 | பிவி தம்பர் .1 | இந்தி படம் | |
2000 | தேரா ஜாதூ சல் கயா | இந்தி படம் | |
2000 | கண்ணால் பேசவா | ||
2000 | நாகலிங்கம் | ||
2000 | நீ எந்தன் வானம் | ||
2002 | எச்2O | கன்னடப் படம் | |
2003 | காதல் கிறுக்கன் | வேலையாள் | |
2005 | கிச்சா வயசு 16 | ||
2006 | கை வந்த கலை | அலுவலக உதவியாளர் | |
2006 | வாத்தியார் | ||
2007 | போக்கிரி | சரக்குந்து ஓட்டுநர் | |
2007 | கருப்பசாமி குத்தகைதாரர் | ||
2007 | பிறகு | சமரசத்தின் உதவியாளர் | |
2008 | இந்திரலோகத்தில் நா. அழகப்பன் | ||
2008 | காசிமேடு கோவிந்தன் | கோவிந்தனின் நன்பன் | |
2008 | முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு | ||
2009 | கந்தசாமி | திருடன் | |
2009 | சிரித்தால் ரசிப்பேன் | கத்திக் குத்து பாண்டியன் | |
2010 | கச்சேரி ஆரம்பம் | ||
2010 | சுறா | போலி காவல் அதிகாரி | |
2013 | சென்னை எக்ஸ்பிரஸ் | வழிப்போக்கன் | இந்தி படம் |
2014 | தெனாலிராமன் | ||
2014 | விலாசம் | ||
2015 | மகாராணி கோட்டை | சாமி | |
2016 | சுட்டபழம் சுடாதபழம் | ||
2016 | சும்மாவே ஆடுவோம் | ||
2016 | பயம் ஒரு பயணம் | ||
2018 | நரி வேட்டை |
குறிப்புகள்
- ↑ "E.Kingkong (a.k.a) Shankar | Official Site of South Indian Artists Association, Nadigar Sangam, Tamil Nadigar Sangam". http://www.nadigarsangam.org/member/e-kingkong-a-k-a-shankar/. பார்த்த நாள்: 8 April 2020.
- ↑ "Profile of King Kong|Lakshmansruthi Orchestra" இம் மூலத்தில் இருந்து 27 September 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190927024151/http://www.lakshmansruthi.com/king-kong/profile.asp. பார்த்த நாள்: 8 April 2020.
- ↑ "King kong Filmography, King kong Movies, King kong Films — Filmibeat". http://www.filmibeat.com/celebs/king-kong/filmography.html.
- ↑ Priya Prakashan. "Go bananas with Rajinikanth and Little Superstar dancing sensation!" இம் மூலத்தில் இருந்து 25 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140425100906/http://www.india.com/stream/go-bananas-with-rajinikanth-and-little-superstar-dancing-sensation-43756/.
- ↑ "Dance, music programmes steal the show in Tiruchi" இம் மூலத்தில் இருந்து 23 December 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151223092313/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/dance-music-programmes-steal-the-show-in-tiruchi/article1946471.ece.
- ↑ "Struggle of an actor" இம் மூலத்தில் இருந்து 26 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151126022757/http://www.indiaglitz.com/struggle-of-an-actor-tamil-news-35425.html.
- ↑ "King Kong turns hero in Onnara Kallan!". http://www.filmibeat.com/tamil/news/2010/king-kong-turns-hero-190410.html.