காந்திமதி (நடிகை)

காந்திமதி (Ganthimathi, 30 ஆகத்து, 1945 - 9 செப்டம்பர், 2011) தமிழ் திரையுலகில் ஓர் பழம்பெரும் நடிகை. கிட்டத்தட்ட 350 திரைப்படங்களில் பல்வேறு மண்வாசனையுடன் கூடிய குணச்சித்திர வேடங்களில் நடித்து பரவலாக "காந்திமதி அக்கா" என அழைக்கப்பட்டவர்.[1]

காந்திமதி
பிறப்புஆகத்து 30, 1945 (1945-08-30) (அகவை 79)
மானாமதுரை, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு9 செப்டம்பர் 2011(2011-09-09) (அகவை 66)
தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர்

வாழ்க்கைக் குறிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் பிறந்த இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. தீனதயாளன் என்பவரும் மற்றொருவரும் இவரின் வளர்ப்பு பிள்ளைகள்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் கதையான யாருக்காக அழுதான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பல புகழ்பெற்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். 16 வயதினிலே, சின்னதம்பி பெரியதம்பி, கரகாட்டக்காரன், முத்து, மாணிக்கம், அகல் விளக்கு, வால்டர் வெற்றிவேல், போர்ட்டர் பொன்னுசாமி ஆகியவை இவர் நடித்த குறிப்பிடத்தக்க படங்கள்.

இந்தியப் பொதுவுடமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, அக்கட்சியின் மேடைகளில் பாடியும், புரட்சிகர நாடகங்களில் நடித்தும் வந்தார். முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த இவர், ஒரு கட்டத்தில் அதிமுகவில் இணைந்தார் [2]

மறைவு

சில காலமாக தனது உடல்நிலை காரணமாக திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்து வந்த காந்திமதி செப்டம்பர் 9, 2011 அன்று காலையில் தனது 65வது அகவையில் காலமானா‌ர்[3][4][5][6].

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=காந்திமதி_(நடிகை)&oldid=27828" இருந்து மீள்விக்கப்பட்டது