காதல் மன்னன் (திரைப்படம்)
காதல் மன்னன் (Kaadhal Mannan) 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அஜித் குமார், மானு, விவேக், ம. சு. விசுவநாதன், கரண் மற்றும் பலர் நடித்து வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்குனர் சரண் இயக்கியிருந்தார். இசையமைப்பாளர் பரத்வாஜின் இசையமைப்பில் வெளிவந்த இத்திரைப்படம் 1998-ம் ஆண்டு வெளிவந்து திரையில் வெற்றிகரமாக ஓடியது.
காதல் மன்னன் | |
---|---|
இயக்கம் | சரண் |
தயாரிப்பு | சுதிர் குமார் |
கதை | சரண் |
இசை | பரத்வாஜ் |
நடிப்பு | அஜித் குமார் மானு ம. சு. விசுவநாதன் விவேக் கரண் கிரிஷ் கர்னாட் |
ஒளிப்பதிவு | டி. விஜயகுமார் |
படத்தொகுப்பு | கணேஷ் குமார் |
வெளியீடு | மார்ச் 6, 1998 |
ஓட்டம் | 136 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச் சுருக்கம்
ருத்ரா (கிரிஷ் கர்னாட்), தனது இரண்டு மகள்களையும் மிகவும் கண்டிப்புடன் வளர்த்து வருகிறார். அவரது மூத்த மகள் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஒடிவிடவே, அவரது இரண்டாவது மகளான திலோத்தமா (மானு) மீது கண்டிப்பு இரட்டிப்பாகிறது. இந்நிலையில் ருத்ரா தனது நண்பனின் மகனான (கரண்) திலோத்தமாவை திருமணம் செய்ய நிச்சயம் செய்கிறார். நிச்சயம் செய்த பின்னர் சிவா (அஜித் குமார்) மீது திலோத்தமாவுக்கு காதல் வருகிறது. காதல் என்ற வார்த்தையையே பிடிக்காத தன் தந்தையிடம் தனது காதலை பற்றி சொல்ல முடியாமல் தவிக்கிறார். காதலர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்தாலும் அதை மற்றவரிடம் சொல்லாமல் தவிக்கிறார்கள். காதலர்கள் ஒருவருக்கொருவர் காதலை சொன்னார்களா, திலோத்தமாவின் தந்தை தனது மகளின் காதலை ஏற்றுக் கொண்டாரா, என்பதே இப்படத்தின் இறுதிக் காட்சியாகும்.
நடிகர்கள்
- அஜித்குமார் - சிவா
- மானு - திலோத்தமா
- ம. சு. விசுவநாதன் - அலங்கோலம் விஸ்வநாதன்
- விவேக் - ஒய்யா
- கரண் - ரஞ்சன்
- கிரிஷ் கர்னாட் - பிளாக் டாக் பாதுகாப்பு சேவை செயலாளர்
- கனல் கண்ணன் - வாடகை கார் ஓட்டுநர்
தயாரிப்பு
"ஒருவருடன் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிர்பாராதவிதமாக வேறு ஒரு நபரின் மீது காதல் வந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதை" என்கிறார் இயக்குநர் சரண். தமிழ் திரைப்படத் துறையில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ம. சு. விசுவநாதன் இந்த திரைப்படத்தில் தான் முதன்முதலாக நடிகராக அறிமுகமானார். அவருடன் அசாம் நடிகை மானு மற்றும் இசையமைப்பாளர் பரத்வாஜும் இந்த திரைப்படத்தில் தான் அறிமுகமானார்கள்.[1] படம் வெளியாவதற்கு முன்பாகவே இதன் பாடல்கள் அனைவராலும் விரும்பி கேட்கக்கூடிய பாடல்களாக அமைந்தன.[2] இத்திரைப்படத்தில் நடிக்க ம. சு. விசுவநாதன் முதலில் மறுத்து விட்டார். ஆனால் நடிகர் விவேக் மறுபடியும் வற்புறுத்தி அவரை இத்திரைப்படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்தார்.[3]
பாடல்கள்
பரத்வாஜ் இசையமைத்த முதல் திரைப்படமான இப்படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து, மற்றும் கவிஞர் வாலி ஆகியோர் எழுதியுள்ளனர்
எண் | பாடல் | பாடலாசிரியர் | பாடியவர்(கள்) |
---|---|---|---|
1 | உன்னைப் பார்த்த | வைரமுத்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
2 | வானும் மண்ணும் | ஹரிஹரன், சித்ரா | |
3 | திலோத்தமா | பரத்வாஜ், அனுபமா | |
4 | மெட்டுத் தேடி | வாலி | ம. சு. விசுவநாதன் |
5 | மாரிமுத்து மாரிமுத்து | வைரமுத்து | தேவா |
6 | கன்னிப் பெண்கள் | ஃபெபி, அதா அலி அஸாத் |
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130927193802/http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-3.htm.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-11-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105214513/http://articles.timesofindia.indiatimes.com/2010-01-04/news-interviews/28137960_1_audio-release-tamil-films-music.
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-news-1/dec-08-04/m-s-viswanathan-22-12-08.html