கல்முனை தேர்தல் தொகுதி

கல்முனை தேர்தல் தொகுதி (Kalmunai Electorate) என்பது ஆகத்து 1947 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நகர், பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, இசுலாமாபாத், கல்முனைக்குடி, சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியது.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் கல்முனைத் தேர்தல் தொகுதி அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் உறுப்பினர் கட்சி காலம்
1947 மு. ச. காரியப்பர் ஐக்கிய தேசியக் கட்சி 1947-1952
1952 ஏ. எம். மெர்சா சுயேட்சை 1952-1956
1956 மு. ச. காரியப்பர் இலங்கைத் தமிழரசுக் கட்சி 1956-1960
1960 இலங்கை சனநாயகக் கட்சி 1960-1960
1960 எம். சி. அகமது இலங்கைத் தமிழரசுக் கட்சி 1960-1965
1965 மு. ச. காரியப்பர் சுயேட்சை 1965-1970
1970 எம். சி. அகமது இலங்கை சுதந்திரக் கட்சி 1970-1977
1977 அப்துல் ரசாக் மன்சூர் ஐக்கிய தேசியக் கட்சி 1977-1989

1947 தேர்தல்கள்

1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[2]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  மு. ச. காரியப்பர் ஐக்கிய தேசியக் கட்சி சாவி 6,886 51.17%
கே. கணபதிப்பிள்ளை யானை 3,592 26.69%
எம். ஏ. எல். காரியப்பர் கை 2,978 22.13%
தகுதியான வாக்குகள் 13,456 100.00%
நிராகரிக்கப்பட்டவை 406
மொத்த வாக்குகள் 13,862
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 22,753
வாக்குவீதம் 60.92%

1952 தேர்தல்கள்

24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[3]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
ஏம். எம். மெர்சா சுயேட்சை நட்சத்திரம் 6,078 42.69%
எம். ஏ. ஐ. காரியப்பர் தராசு 4,414 31.01%
  மு. ச. காரியப்பர் ஐக்கிய தேசியக் கட்சி சாவி 3,744 26.30%
தகுதியான வாக்குகள் 14,236 100.00%
நிராகரிக்கப்பட்டவை 228
மொத்த வாக்குகள் 14,464
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 22,120
வாக்குவீதம் 65.39%

1956 தேர்தல்கள்

5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[4]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  மு. ச. காரியப்பர் இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] வீடு 9,464 47.80%
எம். ஏ. அப்துல் மஜீத் மரம் 6,095 30.78%
  என். ரி. பிரான்சிஸ் சேவியர் லங்கா சமசமாஜக் கட்சி சாவி 4,242 21.42%
தகுதியான வாக்குகள் 19,801 100.00%
நிராகரிக்கப்பட்டவை 183
மொத்த வாக்குகள் 19,984
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 27,841
வாக்குவீதம் 71.78%

தேர்தல் முடிவடைந்த ஆறு மாதங்களுக்குள் எம். எஸ். காரியப்பர் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி அரசுக் கூட்டணியில் இணைந்தார்.[6]

1960 (மார்ச்) தேர்தல்கள்

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  மு. ச. காரியப்பர் இலங்கை சனநாயகக் கட்சி[8] குடை 5,743 41.27%
  எஸ். இசட். எம். எம். மௌலானா இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] வீடு 5,520 39.67%
எம். சி. அகமது சேவல் 1,280 9.20%
எம். ஏ. எல். காரியப்பர் ஏணி 1,153 8.29%
சி. காதர் மொகிதீன் Pot 219 1.57%
தகுதியான வாக்குகள் 13,915 100.00%
நிராகரிக்கப்பட்டவை 189
மொத்த வாக்குகள் 14,104
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 17,762
வாக்குவீதம் 79.41%

1960 (சூலை) தேர்தல்கள்

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[9]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  எம். சி. அகமது இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] வீடு 7,616 57.41%
மு. ச. காரியப்பர் அகில இலங்கை இசுலாமிய ஐக்கிய முன்னணி சூரியன் 5,651 42.59%
தகுதியான வாக்குகள் 13,267 100.00%
நிராகரிக்கப்பட்டவை 138
மொத்த வாக்குகள் 13,405
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 17,762
வாக்குவீதம் 75.47%

1965 தேர்தல்கள்

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[10]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
மு. ச. காரியப்பர் சுயேட்சை குடை 6,726 35.26%
  எஸ். இசட். எம். எம். மௌலானா இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] வீடு 6,235 32.69%
எம். சி. அகமது சுயேட்சை சேவல் 5,838 30.61%
  சி. அப்துல் காதர் மொகிதீன் ஐக்கிய தேசியக் கட்சி யானை 275 1.44%
தகுதியான வாக்குகள் 19,074 100.00%
நிராகரிக்கப்பட்டவை 173
மொத்த வாக்குகள் 19,247
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 22,363
வாக்குவீதம் 86.07%

1965 இடைத்தேர்தல்

6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த சில மாதங்களில் மு. ச. காரியப்பர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை இழந்தார். இதனை அடுத்து கல்முனைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் வருமாறு:[11]

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  எம். சி. அகமது இலங்கை சுதந்திரக் கட்சி கை 10,599 48.98%
  எஸ். மசூர் மௌலானா இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] வீடு 9,345 43.19%
எம். ஏ. எல். காரியப்பர் சுயேட்சை குடை 1,237 5.72%
முத்தையா மாணிக்கம் சுயேட்சை விளக்கு 457 2.11%
தகுதியான வாக்குகள் 21,638 100.00%
நிராகரிக்கப்பட்டவை 93
மொத்த வாக்குகள் 21,731
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 23,295
வாக்குவீதம் 86.07%

1970 தேர்தல்கள்

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[12]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  எம். சி. அகமது இலங்கை சுதந்திரக் கட்சி கை 8,779 40.71%
  ஏ. ஆர். மன்சூர் ஐக்கிய தேசியக் கட்சி யானை 7,827 36.29%
  ஏ. உதுமாலெப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] வீடு 4,960 23.00%
தகுதியான வாக்குகள் 21,566 100.00%
நிராகரிக்கப்பட்டவை 107
மொத்த வாக்குகள் 21,673
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 24,693
வாக்குவீதம் 87.77%

1977 தேர்தல்கள்

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[13]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  ஏ. ஆர். மன்சூர் ஐக்கிய தேசியக் கட்சி யானை 12,636 48.78%
  ஏ. எம். சம்சுதீன் தமிழர் விடுதலைக் கூட்டணி
(முசுலிம் ஐக்கிய விடுதலை முன்னணி)
சூரியன் 7,093 27.38%
  எம். சி. அகமது இலங்கை சுதந்திரக் கட்சி கை 5,922 22.86%
துரையப்பா முத்துகிருஷ்ணன் விளக்கு 253 0.98%
தகுதியான வாக்குகள் 25,904 100.00%
நிராகரிக்கப்பட்டவை 101
மொத்த வாக்குகள் 26,005
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 28,826
வாக்குவீதம் 90.21%

இவற்றையும் பார்க்க

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம். http://www.parliament.lk/about_us/electoral_system.jsp. 
  2. "Result of Parliamentary General Election 1947". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924115557/http://www.slelections.gov.lk/pdf/Results_1947%20GENERAL%20ELECTION.PDF. 
  3. "Result of Parliamentary General Election 1952". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924115603/http://www.slelections.gov.lk/pdf/Results_1952%20GENERAL%20ELECTION.PDF. 
  4. "Result of Parliamentary General Election 1956". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924115606/http://www.slelections.gov.lk/pdf/Results_1956%20GENERAL%20ELECTION.PDF. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 சமட்டிக் கட்சி எனவும் அழைக்கப்பட்டது
  6. Sri Kantha, Sachi. "Sinhala-Muslim Romancing and Rift: Two Published Records from the Past". இலங்கைத் தமிழ்ச் சங்கம். http://www.sangam.org/taraki/articles/2006/02-02_Sinhala_Muslim_Romancing.php?uid=1488. 
  7. "Result of Parliamentary General Election 1960-03-19". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-07-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150712194326/http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF. 
  8. லங்கா பிரஜாதந்திரவாதி பக்சய என அழைக்கப்பட்டது.
  9. "Result of Parliamentary General Election 1960-07-20". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924115611/http://www.slelections.gov.lk/pdf/Results_1960_07_20%20GENERAL%20ELECTION.PDF. 
  10. "Result of Parliamentary General Election 1965". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-07-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150713003440/http://www.slelections.gov.lk/pdf/Results_1965%20GENERAL%20ELECTION.PDF. 
  11. "RESULTS OF BY -ELECTIONS SUBSEQUENT TO PARLIAMENTARY GENERAL ELECTION -1965". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2013-06-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130620215436/http://www.slelections.gov.lk/pdf/Results_1965%20By%20Elections.PDF. 
  12. "Result of Parliamentary General Election 1970". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2009-12-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091209231958/http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF. 
  13. "Result of Parliamentary General Election 1977". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2011-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110717002624/http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF. 
"https://tamilar.wiki/index.php?title=கல்முனை_தேர்தல்_தொகுதி&oldid=38704" இருந்து மீள்விக்கப்பட்டது