கல்முனைக்குடி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கல்முனைக்குடி, கல்முனை
நகர்
Kalmunaikudi Main Street.JPG
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை
பிசெ பிரிவுகல்முனை
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+6 (Summer time)

கல்முனைக்குடி-கல்முனை கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கல்முனை மாநகரத்தில் உள்ள ஓர் ஊராகும். மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 25 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடக்கே கல்முனை தரவை கோயில் வீதியும், தெற்கே சாய்ந்தமருது கிராமமும், கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே பசுமையான வயல் நிலங்களும் அமைந்துள்ளன. மட்டக்களப்பு - அக்கரைப்பற்று பிரதான வீதி கல்முனயினுடாக செல்கின்றது. கல்முனையில் 60% முஸ்லிம்களும் 28% இந்துக்களும், 12% கிரிஸ்தவர்களும் ஏனையோரும் வாழ்கின்றனர். இன் நகரம் இலங்கையைக் கடைசியாக ஆட்சி செய்த கண்டி மன்னன் சிறி விக்கிரம இராசசிங்கனின் ஆட்சிக்காலத்திற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உள்ளதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இங்கு இருத்தி ஐந்து மசூதிகளும், 6 ஜும்மா மசூதிகளும், பெரும் புகழ்பெற்ற கல்முனை கடற்கரை நாகூர் ஆண்டகை தர்ஹாவும், பதின் ஐந்து பாடசாலைகளும் உள்ளன. கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையும், கல்முனை முஹையத்தீன் ஜும்மா மசூதியும் ஊரின் மத்தியில் பிரதான வீதியில் அமைந்துள்ளன.


கல்முனை குடாக்கடல்
அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை

வரலாறு

கல்முனைக்குடியின் பழைய பெயர் கரவாகு என்பதாகும். இந்த ஊருக்கு குடியிருப்பு, கல்முனை, கைமுனை என்ற பல பெயர்கள் உள்ளன. கரவாகு என்னும் பெயர் புராதன காலம் தொட்டே இருந்து வருகின்றது என்பதற்கு கரவாகுப்பற்று என்னும் நிர்வாகப் பிரதேசம் இன்றும் இருக்கிறது என்பதே சான்றாகும். இப்பெயர் நாட்டார் பாடல்களிலும்[1], வரலாற்றுக் குறிப்புகளிலும் காணப்படுகின்றது.

இராசேந்திர சோழன் (1012-1044) அநுராதபுர இராசதானியைக் கைப்பற்றி ஆட்சி செய்த காலப்பகுதி 11 ஆம் நூற்றாண்டாகும். சோழன் ஆதம் முனைப் பகுதியைக் (திருக்கோவில் பிரதேசம்) கைப்பற்றிய காலகட்டத்தில், ஒரு இந்துப் பெண்மணி தனது மகனுடன் அங்கேயிருந்த தர்ஹாவிற்கு நேர்ச்சை செய்ய வந்தபோது அவள் கூறுவதாக அமைந்துள்ள, "கரவாகுச் சோனாக்கள் மாடு கட்ட வருவார், பால் கறந்து தருவார், குடித்திடலாம் மகனே", என்ற வசனம், கரவாகு 11 ஆம் நூற்றாண்டில் இருந்திருக்கின்றது என்பதற்கான ஆதாரங்களிலொன்றாகும். இந்த வசனம் " கரவாகுப்பரவணி " என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

பாடசாலைகள்

  • கமு/அல்-பஹ்ரியா மஹா வித்தியாலயம்
  • கமு/றோயல் வித்தியாலயம்
  • கமு/அல்-அஷ்ஹர் வித்தியாலயம்
  • கமு/அல்-மிஸ்பாஹ் மஹா வித்தியாலயம்
  • கமு/மஹ்மூத் மகளிர் கல்லூரி

மேற்கோள்கள்

1. கரவாகுப் பரவணி 2. காசீம் ஜீ கண்ட கரவாகு வரலாறு

அடிக்குறிப்புகள்

  1. "அக்கரைப் பற்றாம் அவரும் கரவாகூராம், போக்கற்ற மீரானுக்குப் பொண்ணுமாகா வேணுமாம்"
"https://tamilar.wiki/index.php?title=கல்முனைக்குடி&oldid=38738" இருந்து மீள்விக்கப்பட்டது