கருடா சௌக்கியமா

கருடா சௌக்கியமா (Garuda Saukiyama) என்பது 1982 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் குற்றவியல் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்க, வியட்நாம் வீடு சுந்தரம் எழுதினார். திரைப்பட நட்சத்திரங்களான சிவாஜி கணேசன், சுஜாதா, மோகன், தியாகராஜன் ஆகியோர் நடித்தனர்.[1] இதன் கதை ஒரு சிறு குற்றவாளியைச் சுற்றி வருகிறது, அவர் இறுதியில் அச்சமூட்டும் நிழலுலகத் தலைவனாக உயர்கிறார். இந்தப் படம் 25 பிப்ரவரி 1982 அன்று வெளியாகி, பாக்ஸ் ஆபிஸ் குண்டாக ஆனது.

கருடா சௌக்கியமா
சுவரிதழ்
இயக்கம்கே. எஸ். பிரகாஷ் ராவ்
தயாரிப்புடி.எஸ். சேதுராமன்
கதைவியட்நாம் வீடு சுந்தரம்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சுஜாதா
மோகன்
தியாகராஜன்
ஒளிப்பதிவுஎன். கே. விசுவநாதன்
படத்தொகுப்புகே. ஆர். கிருஷ்ணன்
கலையகம்ரெவதி கம்பைன்ஸ்
வெளியீடுபெப்ரவரி 25, 1982 (1982-02-25)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.[2]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "சந்தன மலரின் சுந்தர வடிவில்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:15
2. "மொட்டு விட்ட வாசனை"  பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி 4:35
3. "முத்து ரத்தினச் சித்திராம்"  எஸ். ஜானகி 4:30
4. "கீதை சொல்லக் கண்ணன்"  டி. எம். சௌந்தரராஜன் 4:11
மொத்த நீளம்:
17:31

வெளியீடும் வரவேற்பும்

கருடா சௌக்கியமா 1982 பிப்ரவரி 25 அன்று வெளியானது.[3] கல்கியின் திரைஞானி படத்தை எதிர்மறையாக விமர்சனம் செய்தார். இப்படத்திற்கும் காட்பாதர் (1972) படத்துக்கும் உள்ள ஒற்றுமையை விமர்சித்தார்.[4] படம் ஒரு பாக்ஸ் ஆபிஸ் குண்டு ஆனது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கருடா_சௌக்கியமா&oldid=31864" இருந்து மீள்விக்கப்பட்டது