ஏ. எஸ். ஏ. சாமி
ஏ. எஸ். ஏ. சாமி (A. S. A. Sami) என அறியப்படும் அருள் சூசை ஆரோக்கிய சாமி இவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார்[1].
இயற்பெயர் | ஏ. எஸ். ஏ. சாமி |
---|---|
பணி | திரைப்பட இயக்குநர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | பி. ஏ. (ஹானர்ஸ்) லண்டன் |
துணைவர் | தாயம்மாள் (ஜூனியர்) அருள் பிரகாசி பிரான்சிஸ் |
வாழ்க்கை
தமிழ்நாட்டின் குருவிகுளம் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட இவரது பெற்றோர் வணிகம் நிமித்தமாக இலங்கை சென்று கொழும்பு நகரில் குடியமர்ந்தனர், சூசை ஆரோக்கிய சாமி இளம் பருவத்தில் படிப்பில் நன்கு கவனம் செலுத்தி ஆங்கில முதுகலைப்பட்டமான பி.ஏ.ஹானர்ஸ் (லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்) பெற்றார். கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த நிலையில், அங்கிருந்து மீண்டும் அவர் குடும்பம் புலம் பெயர்ந்து வந்து திருநெல்வேலி பாளையங்கோட்டையில் குடியமர்ந்தது.[2]
தொழில்
பில்ஹணன் எனும் நாடகத்தின் மூலம் தமிழ் நாடக இயக்குநராக ஏ. எஸ். ஏ சாமி அறிமுகமானார். இந்த நாடகத்தை ஜுபிடர் சோமு திரைப்படமாக தயாரித்தார். படம் மிகுந்த வெற்றி பெற்றது. அதன்பின் வால்மீகி, ஸ்ரீ முருகன் போன்ற படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதினார். ஸ்ரீ முருகன் படத்தை இவரே இயக்கவும் செய்தார். ராஜகுமாரி என்னும் திரைப்படத்தில் எம். ஜி. ஆரைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அபிமன்யு திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனமும், 1953-இல் வெளிவந்த மருமகன் திரைப்படத்திற்கு வசனமும் எழுதினார். பின் நீதிபதி, கற்புக்கரசி போன்ற படங்களுக்கு இவர் கதை வசனம் எழுதிக்கொண்டிருந்தபோது கற்புக்கரசி திரைப்படத்தின் இயக்குநர் காலமானதால் அத்திரைப்படத்தினை இயக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இவர் இயக்கத்தில் வெளிவந்த வேறு சில திரைப்படங்கள் தங்கப்பதுமை, அரசிளங்குமாரி, ஆனந்த ஜோதி ஆகியன.
இயக்கிய திரைப்படங்கள்
இவர் இயக்கத்தில் 21 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.
- ராஜகுமாரி (1947)
- வேலைக்காரி (1949)
- விஜயகுமாரி (1950)
- சுதர்சன் (1951)
- ஒக்க தல்லி பில்லலு (1953)
- பொன்னி (1953)
- துளி விஷம் (1954)
- நீதிபதி (1955)
- கற்புக்கரசி (1957)
- கல்யாணிக்கு கல்யாணம் (1959)
- தங்கப்பதுமை (1959)
- கைதி கண்ணாயிரம் (1960)
- அரசிளங்குமரி (1961)
- மேரி பகன் (1962)
- முத்து மண்டபம் (1962)
- ஆசை அலைகள் (1963)
- கடவுளை கண்டேன் (1963)
- ஆனந்த ஜோதி (1963)
- வழி பிறந்தது (1964)
- மாயசுந்தரி (1967)
- திருமகள் (1971)
ஆதாரங்கள்
- ↑ "Bilhanan 1948". The Hindu. http://www.thehindu.com/features/cinema/bilhanan-1948/article4422120.ece. பார்த்த நாள்: 19 அக்டோபர் 2016.
- ↑ "மூன்று முதல்வர்களைக் கண்ட இயக்குநர்". தினத்தந்தி. http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2014/10/11130231/Cinema-in-back-pages-for-three-leader-met-for-director.vpf. பார்த்த நாள்: 12 அக்டோபர் 2014.
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஏ. எஸ். ஏ. சாமி
- "A.S.A. Samy". geni.com. https://www.geni.com/people/A-S-A-Samy/6000000007839999584. பார்த்த நாள்: 20 October 2016.
- நூல்: புகழ் பெற்ற 100 சினிமா கலைஞர்கள், ஆசிரியர்: ஜெகாதா, பதிப்பகம்: சங்கர் பதிப்பகம்.