ஈ. வி. சரோஜா
ஈ. வி. சரோஜா (1935 – 3 நவம்பர் 2006) ஒரு பழம்பெரும் தென்னிந்திய நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்தவர்.
தமிழ்த் திரைப்படத்துறையில்
என் தங்கை திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், மதுரை வீரன், படிக்காத மேதை, வீரத்திருமகன், குலேபகாவலி, பாக்கிய லட்சுமி, கொடுத்து வைத்தவள் உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் படங்களில் நடித்தார். இவர் சுமார் 70 திரைப்படங்களில் நடித்திருந்தார்.
எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்திருந்தார் ஈ.வி சரோஜா. இயக்குநர் டி. ஆர். ராமண்ணா இவரின் கணவர் ஆவார்.
நடித்த திரைப்படங்களின் பட்டியல்
- விளையாட்டு பொம்மை
- பெண்ணரசி
- அமரதீபம்
- கொடுத்து வைத்தவள்
- என் தங்கை
- குலேபகாவலி
- நன்னம்பிக்கை
- பாசவலை
- மறுமலர்ச்சி
- ரம்பையின் காதல்
- எங்கள் வீட்டு மகாலட்சுமி
- நீலமலைத்திருடன்
- புதுமைப்பித்தன்
- மணாளனே மங்கையின் பாக்கியம்
- கடன் வாங்கி கல்யாணம்
- குடும்ப கௌரவம்
- பிள்ளைக் கனியமுது
- உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
- சுமங்கலி
- தங்கப்பதுமை
- மனைவியே மனிதனின் மாணிக்கம்
- ஆடவந்த தெய்வம்
- கைதி கண்ணாயிரம்
- படிக்காத மேதை
- பாட்டாளியின் வெற்றி
- இரத்தினபுரி இளவரசி
- விடிவெள்ளி
- வீரத்திருமகன்
- ராணி லலிதாங்கி
விருதுகள்
- 2002 ஆம் ஆண்டில் இவர் கலைஞர் கருணாநிதியிடமிருந்து முத்தமிழ்ப் பேரவையின் நாட்டிய செல்வம் விருதினைப் பெற்றார்.
- திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக 2002 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் எம்.ஜி.ஆர் விருது 2004 இல் இவருக்கு வழங்கப்பட்டது.
மறைவு
நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஈ. வி. சரோஜா 2006 நவம்பர் 3 அன்று வெள்ளிக்கிழமை மாலை காலமானார்.[1]
மேற்கோள்கள்
- ↑ "E.V. Saroja dead". தி இந்து. 4 நவம்பர் 2006 இம் மூலத்தில் இருந்து 2014-10-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20141003124149/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/ev-saroja-dead/article3043282.ece. பார்த்த நாள்: 4 நவம்பர் 2016.