பிள்ளைக் கனியமுது

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பிள்ளைக் கனியமுது
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புபி. எஸ். வீரப்பா
பி. எஸ். வி. பிக்சர்ஸ்
கதைகே. பி. கொட்டாராகாரா
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
பி. எஸ். வீரப்பா
பாலைய்யா
சாய்ராம்
எஸ். வி. ரங்கராவ்
ஈ. வி. சரோஜா
எம். என். ராஜம்
சந்தியா
முத்துலட்சுமி
வெளியீடுமே 30, 1958
நீளம்14917 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பிள்ளைக் கனியமுது 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், பி. எஸ். வீரப்பா ,ஈ. வி. சரோஜா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

கதைச்சுருக்கம்

சச்சிதானந்தம் ,வெளியில் ஒரு நல்ல மனிதராக தோன்றினாலும், உண்மையில் அவர் ஒரு சுயநலவாதி. அவர் முத்தம்மா அதே வீட்டில் உள்ள தோட்டக்காரர் முருகனை நேசிக்கிறாள். அவர்களது திருமண வாழ்க்கை பற்றி கனவு காண்கிறார்கள், அவர்கள் இருவரும் தங்கள் முதல் குழந்தைக்கு "பாபு" என்று பெயரிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். சச்சிதானந்தம் தான் நடத்திய மோகனாவின் நடன நிகழ்ச்சிக்குப் பிறகு, தனது விருந்தினர் இல்லத்தில் தங்கும்படி அவளை அழைக்கிறார். அவளும் ஒப்புக்கொள்கிறாள். அவளுடைய தேவைகளை கவனிக்க முருகன் நியமிக்கப்படுகிறான்.

சச்சிதானந்தம் முத்தம்மாவை தொந்தரவு செய்ய முயற்சிக்கிறார், ஆனால் சச்சிதானந்தத்தின் மனைவி குணவதியால் முத்தம்மா காப்பாற்றப்படுகிறாள். இதற்கிடையே மோகனாவும் முருகனும் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள். சச்சிதானந்தம் முத்தம்மாவை கடத்திக்கொண்டு வரும்போது, ஏற்படும் சூழ்நிலையால், முனியன் இறந்து விடுகிறார். முத்தம்மா அனாதையாகிறாள். முருகன், மோகனா இருவருக்கும் நடந்த மோதலில் மோகனா இறந்துவிடுகிறார். முருகனுக்கு ஏற்படும் ஒரு விபத்தில் கண்பார்வை போய்விட மகனுடன் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். இறுதியில் முத்தம்மா முருகனை சந்தித்து அவனுடன் வாழ்க்கையைத் தொடர்வதாக மீதமுள்ள கதை முடிகிறது.[2]

பாடல்கள்

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். அ. மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் பாடல்களை யாத்தனர். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், கே. ஜமுனாராணி, எல். ஆர். ஈஸ்வரி, பி. சுசீலா, எம். எஸ். ராஜேஸ்வரி, கஸ்தூரி, உடுத்தா சரோஜினி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[3]

எண். பாடல் பாடியவர்/கள் பாடலாசிரியர் கால அளவு
1 ஏர் முனைக்கு நேர் இங்கே டி. எம். சௌந்தரராஜன் அ. மருதகாசி
2 வழி மாறி போகுமா
3 நவநீத சோரனும் என்று ஜிக்கி
4 அழகிருக்கு அறிவிருக்கு
5 பிள்ளைக் கனி அமுது ஒண்ணு பி. சுசீலா
6 ஆம்பள மனசு பல தினுசு கே. ஜமுனாராணி, எல். ஆர். ஈஸ்வரி
கஸ்தூரி, உடுத்தா சரோஜினி
7 சங்கத் தமிழ் மொழி கே. ஜமுனாராணி, எம். எஸ். ராஜேஸ்வரி
கஸ்தூரி, உடுத்தா சரோஜினி
8 பிள்ளைக் கனி அமுது ஒண்ணு சீர்காழி கோவிந்தராஜன் & பி. சுசீலா
9 ஓடுகிற தண்ணியிலே
10 சீவி முடிச்சுக்கிட்டு சிங்காரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
11 காக்காய்க்கும் காக்காய்க்கும் குழுப் பாடல்

மேற்கோள்கள்

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-05-06. பார்க்கப்பட்ட நாள் 2022-05-11.
  2. Pillai Kaniyamudhu Song Book. Eveready Press, Chennai-17.
  3. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. p. 150 — 151.
"https://tamilar.wiki/index.php?title=பிள்ளைக்_கனியமுது&oldid=35628" இருந்து மீள்விக்கப்பட்டது