விடிவெள்ளி (திரைப்படம்)

விடி வெள்ளி (Vidivelli) 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2] படத்தின் வெளிப்புறக் காட்சிகள் அனைத்தும் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புத்தூர் என்ற கிராமத்தில் படப்பிடிக்கப்பட்டன.

விடி வெள்ளி
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புமுத்துமாணிக்கம்
பிரபுராம் பிக்சர்ஸ்
கதைஸ்ரீதர்
இசைஏ. எம். ராஜா
நடிப்புசிவாஜி கணேசன்
பி. சரோஜாதேவி
எஸ். வி. ரங்கராவ்
பாலாஜி
எம். என். ராஜம்
பி. சாந்தகுமாரி
வெளியீடுதிசம்பர் 31, 1960
நீளம்17803 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

சந்துருவின் (சிவாஜி கணேசன்) தங்கை மீனாவுக்கு (எம். என். ராஜம்) திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக சந்துரு ஒரு வைர நெக்லசைத் திருடித் தருவார். அந்த நெக்லசில் மூடி ஒன்று இருக்கும். திருமணம் ஆனதும், அந்த நெக்லசின் மூடி திறந்து கொள்ள, அதில் ஒரு வாலிபனின் படம் இருப்பதைப் பார்த்து, கணவன் ரவி (பாலாஜி) மீனாவை பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிடுவார். அந்த நெக்லசானது செல்வந்தரின் மகளான சித்ராவினுடையது (சரோஜாதேவி) பின்னர் சித்ராவும், சந்துருவும் காதலிப்பார்கள். சந்துரு எப்படி மீண்டும் தங்கையை வாழ வைக்கிறார் என்பதும் சந்துருவும் சித்ராவும் வாழ்வில் இணைந்தார்களா என்பதுதான் மீதிக் கதை.

நடிகர்கள்

பாடல்கள்

Untitled

ஏ. எம். ராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர்கள் கண்ணதாசன், அ. மருதகாசி, கு. மா. பாலசுப்பிரமணியம் ஆகியோர் எழுதியிருந்தனர். இப்பாடல்களை பின்னணிப் பாடகர்கள் ஏ. எம். ராஜா, திருச்சி லோகநாதன், பி. பி. ஸ்ரீநிவாஸ், ஜிக்கி ஆகியோர் பாடியிருந்தனர்.[3][4]

பாடல்கள்

# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "இடை கை இரண்டும் ஆடும்"  கண்ணதாசன்ஏ. எம். ராஜா, பி. சுசீலா 03:20
2. "கொடுத்துப் பார்"  அ. மருதகாசிஏ. எம். ராஜா, பி. சுசீலா, திருச்சி லோகநாதன், ஜிக்கி 03:29
3. "நான் வாழ்ந்தாலும்"  கண்ணதாசன்ஜிக்கி 03:11
4. "நினைத்தால் இனிக்கும்"  அ. மருதகாசிஜிக்கி 02:40
5. "பெண்ணோடு பிறந்தது"  கண்ணதாசன்பி. பி. ஸ்ரீநிவாஸ், ஜிக்கி 03:48
6. "ஆடாமல் ஆடுகிறேன்"  அ. மருதகாசிபி. சுசீலா 04:05
7. "எந்நாளும்"  அ. மருதகாசிபி. சுசீலா 03:21
8. "எந்நாளும் வாழ்விலே (மகிழ்ச்சி)"  அ. மருதகாசிபி. சுசீலா 04:00
9. "காரு சவாரி"  கு. மா. பாலசுப்பிரமணியம்ஜிக்கி, திருச்சி லோகநாதன் 03:33

மேற்கோள்கள்

  1. "Vidivelli Release". nadigarthilagam. http://nadigarthilagam.com/filmographyp7.htm. பார்த்த நாள்: 2014-11-07. 
  2. "Vidivelli cast & crew". spicyonion. http://spicyonion.com/movie/vidi-velli/. பார்த்த நாள்: 2014-11-07. 
  3. "Vidivelli (1960)" இம் மூலத்தில் இருந்து 17 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140317195157/http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001895. 
  4. (in ta) விடிவெள்ளி (song book). Prabhuram Pictures. 1960. https://archive.org/download/sok.VidiVelli_Sridhar_1960/88.%20VidiVelli_Sridhar_1960.pdf. பார்த்த நாள்: 22 July 2022. 

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=விடிவெள்ளி_(திரைப்படம்)&oldid=37604" இருந்து மீள்விக்கப்பட்டது