இரன்யா ராவ்

இரன்யா ராவ் (Ranya Rao) (பிறப்பு 1991)[1] தென்னிந்தியப் படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகையும், வடிவழகியுமாவார். 2014ஆம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படமான மானிக்யா மூலம் அறிமுகமானார்.[2]

இரன்யா ராவ்
பிறப்பு1991கள்
கருநாடகம், இந்தியா
தேசியம் இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2014–தற்போது வரை

ஆரம்ப கால வாழ்க்கை

இவர், இந்திய மாநிலமான கர்நாடகாவின் சிக்மகளூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெங்களூரில் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, நடிப்பில் ஆர்வம் செலுத்தினார்.[3]

தொழில்

இவர், முதன்முதலில் நடிகரும் இயக்குநருமான சுதீப் இயக்கத்தில் வெளியான கன்னடப் படமான மானிக்யா என்ற படத்தில் ஏப்ரல் 2014 இல் கையெழுத்திட்டார்.அப்படத்தில் இவர் வரலட்சுமி என்ற ஒரு துணை வேடத்தில் நடித்தார். இவரது நடிப்பு விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தி நியூ இந்தியன் எக்சுபிரசு இதழில் ஏ. சாரதா என்ற விமர்சகர் இவ்வாறு எழுதினார். "இரன்யா, வரலக்ஷ்மியாக தனது நடிப்பை நன்றாக வெளிப்படுத்தியிருந்தர். ஆனால் ஈர்க்கத் தவறிவிட்டார்."[4]

சூன் 2015 இல், இரன்யா தனது இரண்டாவது படமும், முதல் தமிழ்ப் படமுமான வாகா என்ற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு இணையாக நடித்தார்.[5] கன்னடத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான "பாடகி" என்ற நகைச்சுவைப் படத்தில், நடிகர் கணேஷ் மீது காதல் கொள்ளும் சங்கீதா என்ற பத்திரிகையாளராக நடித்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இரன்யா_ராவ்&oldid=22412" இருந்து மீள்விக்கப்பட்டது