அழகிய பாண்டிபுரம் (திரைப்படம்)
அழகிய பாண்டிபுரம் (Azhagiya Pandipuram) என்பது 2014ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். என். ராயன் இயக்கிய இப்படத்தில் இளங்கோ நாகராஜா மற்றும் அஞ்சேனா கீர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனோபாலா, பாத்திமா பாபு, எம். எசு. பாசுகர், ஸ்ரீமான், சுப்பு பஞ்சு, மீரா கிருஷ்ணன், தேவதர்சினி, யுவராணி ஆகியோர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளானர். தைமன் புரொடக்ஷன் என்ற பதாகையின் கீழ் என். கிருபகரன் தயாரித்த இப்படத்திற்கு பரத்வாஜ் இசை அமைக்க, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பை மேற்கொள்ள, வி. அகிலனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் 5 திசம்பர் 2014 அன்று வெளியானது.
அழகிய பாண்டிபுரம் | |
---|---|
இயக்கம் | என். ராயன் |
தயாரிப்பு | என். கிருபாகரன் |
கதை | என். ராயன் |
இசை | பரத்வாஜ் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | வி. அகிலன் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | தாய்மண் புரொடக்சன் |
வெளியீடு | திசம்பர் 5, 2014 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- இளங்கோ நாகராஜா மாதவனாக
- அஞ்சேனா கீர்த்தி தீபிகாவாக
- மனோபாலா கீரிப்புள்ளையாக
- பாத்திமா பாபு மாதவனின் தாயாக
- எம். எசு. பாசுகர் பூம்புக்குட்டியாக
- சிறீமன் வீரதயாளனாக
- சுப்பு பஞ்சு அருணாச்சலம்
- மீரா கிருஷ்ணன்
- தேவதர்சினி
- யுவராணி மாதவனின் மைத்துனியாக
- கிரேன் மனோகர்
- ரிஷா ஆட்டக்காரி மணிமேகலையாக
- சங்கர் வேலாவாக
- அப்பு சாமியாக
- முத்துக்காளை
- சிசர் மனோகர்
- நெல்லை சிவா
- சிவசங்கர் மாஸ்டர்
- ஆக்னஸ் சோன்கர்
- சக்திவேல்
- இரவிசந்த்
- டாகடர் காளிதாஸ்
- சத்யா
- இளமாறன
- ஜெயம்பாபு
- தாஸ் கதிர்
இசை
படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்தார்.
தயாரிப்பு
இப்படம் தமிழ்நாட்டின் தேனி, காரைக்குடி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டது.