அழகர்சாமியின் குதிரை
அழகர்சாமியின் குதிரை (Azhagarsamiyin Kuthirai) 2011 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதியன்று வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1][2] இது யதார்த்தக் காட்சிப்படுத்தல்களைக் கொண்ட ஒரு கிராமப் படம். தமிழ்நாட்டுச் சிற்றூர் ஒன்றில் நடக்கும் ஒரு திருவிழாவில் அழகர் சாமிக்கு வாகனமாக அமையும் மரத்தாலான குதிரை காணாமல் போய்விடுவதன் பின்னணியில் இந்தப் படத்தின் கதை அமைகிறது. இந்தப் படத்தில் கேரள தமிழக எல்லையில் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்ட கிராமங்களின் வட்டாரத் தமிழ்ப் பேச்சுமுறை, சமயம் மற்றும் கலாச்சார நம்பிக்கைகள், கலைகள், வாழ்வியல், திருவிழா நடைமுறைகள் போன்றவை சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அழகர்சாமியின் குதிரை | |
---|---|
திரைப்படத்தின் விளம்பரக்காட்சி | |
இயக்கம் | சுசீந்திரன் |
தயாரிப்பு | ப. மதன் |
கதை | பாஸ்கர் ஷக்தி |
மூலக்கதை | பாஸ்கர் ஷக்தியின் அழகர்சாமியின் குதிரை சிறுகதை |
திரைக்கதை | சுசீந்திரன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | அப்புக்குட்டி சரண்யா மோகன் |
ஒளிப்பதிவு | தேனி ஈஸ்வர் |
படத்தொகுப்பு | காசிவிசுவநாதன் |
கலையகம் | எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் |
விநியோகம் | கெளவுட் நைன் மூவீஸ் |
வெளியீடு | மே 12, 2011 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இது இயக்குனர் சுசீந்திரனின் மூன்றாவது திரைப்படமாகும். இந்தத் திரைப்படம் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி எழுதிய "அழகர்சாமியின் குதிரை" என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டது[3]
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
கதை
தேனி அருகே உள்ள மல்லயாபுரம் என்ற கிராமத்தில் வாழும் மக்கள் ஊர் திருவிழா கொண்டாட முடிவு செய்கின்றனர். திருவிழாவின் சிறப்பாக அழகர்சாமி கடவுள் மரத்தாலான குதிரையில் ஊர்வலம் வர வேண்டும். அந்த மரக்குதிரை திருவிழாவிற்கு சில நாட்கள் முன்பு காணாமல் போய்விடுகின்றது. அதே சமயத்தில் ஆகமலை, பெரியகுளம் கிராமத்தில் வசிக்கும் அழகர்சாமி என்பவர் (அப்புக்குட்டி) மிகவும் அன்புடன் வளர்க்கும் அப்பு என்கிற குதிரையும் காணாமல் போய்விடுகின்றது. பிறப்பு முதலே அழகர்சாமியால் வளர்க்கப்பட்ட அந்த குதிரையில் சரக்கு ஏற்றி அதன் மூலமாக வரும் வருமானத்தை நம்பியிருக்கும் அழகர்சாமிக்கு ராணி என்கிற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. கிராம மக்களும் அழகர்சாமியும் அவரவர் குதிரைகளைக் கண்டுபிடித்தார்களா என்பது மீதிக் கதை.
நடிப்பு
- அப்புக்குட்டி - அழகர்சாமி
- சரண்யா மோகன் - அழகர்சாமி மணக்க இருக்கும் பெண் ராணி
- பிரபாகரன் - ராமகிருஷ்ணன்
- அத்வைதா - தேவி
- சூரி - சந்திரன்
பாடல்கள்
அழகர்சாமியின் குதிரை | ||||
---|---|---|---|---|
திரையிசை
| ||||
வெளியீடு | 16 மார்ச் 2011 | |||
ஒலிப்பதிவு | 2010 | |||
இசைப் பாணி | திரைப்படப் பின்னணி இசை | |||
நீளம் | 16:29 | |||
இசைத்தட்டு நிறுவனம் | சோனி மியூசிக் | |||
இசைத் தயாரிப்பாளர் | இளையராஜா | |||
இளையராஜா காலவரிசை | ||||
|
பாடல் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்கள் | நீளம் | ||||||
1. | "குதிக்கிற குதிக்கிற" | ஜே.பிரான்சிஸ் கிருபா | இளையராஜா | |||||||
2. | "அடியே இவளே" | சினேகன் | தஞ்சை செல்வி, சினேகன், லெனின் பாரதி, ஹேமாம்பிகா, முருகன், ஐய்யப்பன், மாஸ்டர் ரேஹன், செந்தில் தாஸ், அனிதா | |||||||
3. | "பூவை கேளு" | யுகபாரதி | கார்த்திக், ஷ்ரேயா கோஷல் | |||||||
மொத்த நீளம்: |
16:29 |
மேற்கோள்கள்
- ↑ "Review: Azhagarsamiyin Kudhirai is brilliant". Rediff. http://www.rediff.com/movies/report/review-azhagarsamiyin-kudhirai/20110513.htm.
- ↑ "Azhagarsamiyin Kudhirai Movie Review". http://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/may-11-02/azhagarsamiyin-kudhirai-review.html.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2011-04-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110406170305/http://www.aganazhigai.com/2011/04/blog-post_03.html.
வெளி இணைப்புகள்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் அழகர்சாமியின் குதிரை
- பா. ராகவன் விமர்சனம் பரணிடப்பட்டது 2011-05-14 at the வந்தவழி இயந்திரம்
- யுவகிருஷ்ணா விமர்சனம்
- திரைவிமர்சனம் பரணிடப்பட்டது 2011-05-17 at the வந்தவழி இயந்திரம்