அரிணி அமரசூரியா
அரிணி அமரசூரியா (Harini Amarasuriya) இலங்கையைச் சேர்ந்த ஒரு கல்வியாளராவார். மனித உரிமை ஆர்வலர், பல்கலைக்கழக விரிவுரையாளர் மற்றும் அரசியல்வாதி என்று பலமுகங்களுடன் இவர் செயல்பட்டார். இலங்கை திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் சமூக ஆய்வுகள் துறையில் மூத்த விரிவுரையாளராகவும் பணியாற்றினார். தற்போது 2019 ஆம் ஆண்டு முதல் தேசிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். உளவியல், சமூக நலத்துறை, மனநலத் துறை மற்றும் குழந்தை பாதுகாப்புத் துறையில் மிலுந்த அனுபவம் பெற்றவராக கருதப்படுகிறார்.
அரிணி அமரசூரியா Harini Amarasuriya எம்.பி හරිනි අමරසූරිය | |
---|---|
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 20 ஆகத்து 2020 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 6 மார்ச்சு 1970 |
தேசியம் | இலங்கை |
பிற அரசியல் சார்புகள் |
தேசிய மக்கள் சக்தி (2019 –முதல்) |
பணி |
|
தேர்வை மையமாகக் கொண்ட கல்வி முறையை நாம் அகற்ற வேண்டும். கல்வி மிகவும் அனுபவபூர்வமாக இருக்க வேண்டும். நமது கல்வி நிறுவனங்களின் கலாச்சாரம் மாற வேண்டும். பாலினம், மதம் அல்லது மொழி அடிப்படையில் பிரிந்த நிறுவனங்கள் நம்மிடம் இருக்க வேண்டாம். மாறாக அங்கெல்லாம் பன்முகத்தன்மையை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் கல்விப் பாதைகள் மற்றும் தொழிலைத் தீர்மானிப்பதில் அதிக தேர்வு மற்றும் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். கல்விக்கு அரசு முதன்மையாக பொறுப்பேற்க வேண்டும் என்பது போன்ற முற்போக்குச் சிந்தனைகளுக்கு இவர் சொந்தக்காரராவார்.[1]
இளைஞர் வேலையின்மை, பாலின சமத்துவமின்மை, குழந்தை பாதுகாப்பு மற்றும் இலங்கை கல்வி முறையில் திறமையின்மை போன்ற அழுத்தமான பிரச்சனைகளில் அரிணி நன்கு அறியப்பட்டுகிறார்.[2] தற்போது இலங்கை உள்ளூர் இலாப நோக்கற்ற அமைப்பான நெசுட்டு என்ற அமைப்பின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக வேலை செய்கிறார்.[3]
தொழில்
எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றார். புத்தகங்கள் எழுதி வெளியிட்டார். இளைஞர்கள், அரசியல், கருத்து வேறுபாடு, செயல்பாடுகள், பாலினம், வளர்ச்சி, மாநில சமுதாய உறவுகள், குழந்தை பாதுகாப்பு, உலகமயமாக்கல் மற்றும் மேம்பாடு பற்றிய ஆராய்ச்சிகளை நடத்தினார்.[4][5]
எடின்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையின் மானுடவியல், மனித உரிமைகள் மற்றும் நெறிமுறைகளின் மானுடவியல் திட்டத்தில் இவர் பணியாற்றினார். இந்த திட்டம் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய மனசாட்சியின் அடிப்படையில் சமூக வாழ்க்கையைப் பார்க்கிறது என்றும் குறிப்பாக இது மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் மனித உரிமைகள் நடைமுறையின் மத்திய நூற்றாண்டின் வளர்ச்சியில் பயன்படுத்தப்பட்டது என்றும் இவர் குறிப்பிட்டார். 1960 ஆம் ஆண்டில் தொடங்கி 1990 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை இலங்கையில் இடதுசாரி அதிருப்தியாளர்களின் வாழ்க்கையைப் பார்க்கிறது. குறிப்பாக 30 வருட உள்நாட்டுப் போரின்போது பல்வேறு தருணங்களில் தோன்றிய குறைவாக அறியப்பட்ட குழுக்கள் மற்றும் இயக்கங்களின் பகுதியாகவும் இது இருந்தது.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் கூட்டமைப்பின் உறுப்பினராக இணைந்த பின்னர் 2011 ஆம் ஆண்டில் இலவசக் கல்விக்காகக் ஆர்ப்பாட்டங்களில் இணைந்த பிறகு தனது செயல்பாட்டைத் தொடர்ந்தார்.[6] குழந்தை பாதுகாப்பு மற்றும் உளவியல் சமூக பயிற்சியாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, இலங்கை திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் மூத்த விரிவுரையாளராக சேர்ந்தார்.
அரிணி 2019 ஆம் ஆண்டு தேசிய அறிவுசீவிகள் அமைப்பில் சேர்ந்தார். 2019 இலங்கை அதிபர் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவுக்காக பிரச்சாரம் செய்தார். 12 ஆகத்து 2020 அன்று, இவர் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து இலங்கையின் 16 வது நாடாளுமன்றத்தில் நுழைய தேசிய பட்டியல் வேட்பாளராக சனதா விமுக்தி பெரமுனா கட்சியால் பரிந்துரைக்கப்பட்டு நியமிக்கப்பட்டார்.[7][8]
தேசியப் பட்டியல் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்ட பிறகு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி மூத்த விரிவுரையாளராக அரிணி தனது சேவையைத் தொடர முடியுமா என்ற குழப்பங்களும் கவலையும் எழுப்பப்பட்டன.[9] எக்கனமி நெக்சுட்டு உடனான ஒரு நேர்காணலில், அவர் தனது அரசியல் வாழ்க்கையையும் நாடாளுமன்ற அரசியலையும் தொடர கல்வி மூத்த விரிவுரையாளர் பதவியை கைவிட்டுவதாக அறிவித்தார்.
மேற்கோள்கள்
- ↑ "Cyber bullying prevents women from public positions - Harini Amarasuriya - Know Before You Vote" (in English). https://www.dailymirror.lk/know_before_you_vote/Cyber-bullying-prevents-women-from-public-positions-Harini-Amarasuriya/392-191979.
- ↑ "Interview - Harini Amarasuriya" (in en-US). 2020-06-25. https://www.e-ir.info/2020/06/25/interview-harini-amarasuriya/.
- ↑ "Harini Amarasuriya | Youthpolicy.org". https://www.youthpolicy.org/team/harini/.
- ↑ "Dr Harini Amarasuriya | IASH". https://www.iash.ed.ac.uk/profile/dr-harini-amarasuriya.
- ↑ "Who is Dr. Harini Amarasuriya ? NPP national list nominee" (in en-US). 2020-08-12. http://www.newswire.lk/2020/08/12/who-is-dr-harini-amarasuriya-npp-national-list-nominee/.
- ↑ "Cyber bullying prevents women from public positions - Harini Amarasuriya" (in English). http://www.dailymirror.lk/know_before_you_vote/Cyber-bullying-prevents-women-from-public-positions---Harini-Amarasuriya/392-191979.
- ↑ "Dr. Harini Amarasuriya named as JJB National List MP" (in en). 2020-08-12. https://www.newsfirst.lk/2020/08/12/dr-harini-amarasuriya-named-as-jjb-national-list-mp/.
- ↑ tharindu. "හරිනි අමරසූරිය මාලිමාවේ ජාතික ලැයිස්තු මන්ත්රී ධුරයට" (in en-gb) இம் மூலத்தில் இருந்து 2021-09-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210907150642/https://sinhala.srilankamirror.com/news/25016-harini-amarasuriya-named-npp-national-list-mp.
- ↑ "NPP National List slot: Dr. Harini Amarasuriya’s name proposed" இம் மூலத்தில் இருந்து 2020-08-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200812094338/http://www.themorning.lk/npp-national-list-slot-dr-harini-amarasuriyas-name-proposed/.
புற இணைப்புகள்
- அரிணி அமரசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடைவு]
- Harini Amarasuriya