அடுத்த வீட்டுப் பெண்

அடுத்த வீட்டுப் பெண் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] வேதாந்தா ராகவைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.ஆதி நாராயண ராவ் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்[2]

அடுத்த வீட்டுப் பெண்
இயக்கம்வேதாந்தா ராகவைய்யா
தயாரிப்புஆதி நாராயண ராவ்
அஞ்சலி பிக்சர்ஸ்
இசைஆதி நாராயண ராவ்
நடிப்புடி. ஆர். ராமச்சந்திரன்
கே. ஏ. தங்கவேலு
சாரங்கபாணி
பிரண்ட் ராமசாமி
ஏ. கருணாநிதி
அஞ்சலி தேவி
டி. பி. முத்துலட்சுமி
எம். சரோஜா
சி. டி. ராஜகாந்தம்
வெளியீடுபெப்ரவரி 11, 1960
ஓட்டம்.
நீளம்16887 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திரைக்கதை

கதாநாயகன் டி. ஆர். ராமச்சந்திரன், கதாநாயகி அஞ்சலிதேவி. அடுத்த வீட்டுப் பெண்ணான அஞ்சலிதேவியைக் காதலிக்கவும் கைப்பிடிக்கவும் அவருக்கு உதவுகிறார்கள் ‘காரியம் கைகூடும் சங்கம்’ அமைப்பைச் சேர்ந்த தங்கவேலு, கருணாநிதி, பிரண்ட் ராமசாமி உள்ளிட்ட நால்வர் அணி.[3]

நடிகர்கள்

துணுக்குகள்

நடிகை அஞ்சலிதேவியின் சொந்தத் தயாரிப்பான இத்தமிழ்த் திரைப்படத்தில் அவரே கதாநாயகியாக நடித்தார். உடன் நடித்தவர் டி. ஆர். ராமச்சந்திரன். நகைச்சுவைக்காகவும், இனிய பாடல்களுக்காகவும் வரவேற்புப் பெற்ற படம்.

இடம் பெற்ற பாடல்கள்

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=அடுத்த_வீட்டுப்_பெண்&oldid=29942" இருந்து மீள்விக்கப்பட்டது