மானஸ்தன்
மானஸ்தன் | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | கே. பாரதி |
தயாரிப்பு | K. Dhandapani |
கதை | K. Bharathi |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | சரத்குமார் சாக்ஷி சிவானந்த் அப்பாஸ் அப்பாஸ் |
ஒளிப்பதிவு | கிச்சாஸ் |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
கலையகம் | மலர் கம்பைன்ஸ் |
வெளியீடு | 18 சூன் 2004 |
ஓட்டம் | 152 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மானஸ்தன் 2004 ஆம் ஆண்டு கே.பாரதி இயக்கிய தமிழ் காதல் குடும்ப நாடக படம் . இதில் சரத்குமார் மற்றும் சாக்ஷி சிவானந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அப்பாஸ், விஜயகுமார், சுஜாதா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்தார். இந்த படம் 18 ஜூன் 2004 இல் வெளியானது. வெளியானப் பின் விமர்சகர்களிடம் சராசரி விமர்சனங்களைப் பெற்றது.
கதை
ஒரு நில உரிமையாளர் ( விஜயகுமார் ) மற்றும் அவரது மனைவி ( சுஜாதா ). அவர்களுக்கு இரு மகன்கள் தேவா ( சரத்குமார் ) மற்றும் செல்வா ( அப்பாஸ் ). தேவா ஒரு கல்வியறிவற்ற கிராம மனிதன். அவர் அப்பாவியாக இருக்கிறார். குடும்பத்தில் அக்கறை உள்ள மனிதனார அர்ப்பணிப்புடன் இருக்கிறார். செல்வா கல்லூரி மாணவராக இருக்கிறார். தந்தை தேவா மீது திடீர் என்று வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார். இதனால் தேவாவை துரத்திவிட முயற்சி செய்கிறார். அதற்கான காரணம் படத்தின் இறுதியில் தெரிகிறது. சொத்துக்காக பிரச்சனை செய்யும் தேவாவின் பங்காளிகள் இத்திரைப்படத்தின் கெட்டவர்கள்.
நடிகர்கள்
- சரத்குமார் - தெய்வராசு
- சாக்ஷி சிவானந்த் - ராசாத்தி
- அப்பாஸ் - செல்வராசு
- வடிவேலு (நடிகர்) - பச்சைக் கிளி
- மன்சூர் அலி கான்
- விஜயகுமார் - பட்டாமணியார்
- சுஜாதா - பட்டாமணியார் மனைவி
- காகா இராதாகிருஷ்ணன்
- சுகுமாரி (நடிகை)
- ராஜேஷ்
- போண்டா மணி
- தாமு
- வையாபுரி (நடிகர்)
ஒலித்தடம்
எஸ்.ஏ.ராஜ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பா. விஜய், நந்தலாலா மற்றும் கலைகுமார் இப்படத்திற்கு பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.[1]
இல்லை. | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் |
1 | ஆசை வைச்சேன் | ஸ்வர்ணலதா, சீனிவாஸ் | நந்தலாலா |
2 | கத கத | கே.எஸ் சித்ரா | பி.விஜய் |
3 | பட்டு ஜரிகை | மனோ, பி.உன்னிகிருஷ்ணன் | கலைக்குமார் |
4 | ராசா ராசா | கே.எஸ் சித்ரா, ஹரிஹரன் | நந்தலாலா |
5 | உன் இ மெயில் (திரைப்படத்தில் இல்லை) | சுஜாதா, தேவன் | பி.விஜய் |
6 | வாடா தம்பி | எஸ்.பி.பாலசுப்ரமண்யம் |
தயாரிப்பு
இப்படத்தை 'மலர் கம்பைன்ஸ்' என்னும் நிறுவனம் தயாரித்தது. இப்படம் இயக்குனர் கே. பாரதியின் மூன்றாவது திரைப்படமாகும். விஜயகாந்த நடித்த கள்ளழகர் திரைப்படத்திற்கு பின்னர் இப்படத்தை அவர் இயக்கினார். இப்படம் ஐந்து வருடங்களாக தயாரிப்பில் இருந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் 2004யில் வெளியானது.[2] படத்தின் பல காட்சிகள் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டது. படத்திற்காக மேடையமைப்புகளைத் தேவா செய்தார். இப்படத்திற்கு அப்பாஸுக்கு ஜோடியாக முதலில் பிரத்யுக்சாவை முடிவு செய்தனர். ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்ட பின், சுந்தரா டிராவல்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்த ராதாவை அப்பாஸுக்கு ஜோடியாக நடிக்க வைத்தனர்.[3]
வரவேற்பு
பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து வெளியானதால், படம் பழைய படமாக உள்ளது என்று கருதப்பட்டது.[2] இண்டியாகிளிட்ஸ் இணையதளம், "அறிமுக இயக்குனர் பாரதி குடும்ப பார்வையாளர்களைக் குறிவைத்து தந்தை-மகன் உறவு குறித்த திரைப்படத்துடன் வெளிவர முயன்றார். தமிழ் திரைப்படத் திரைப்படத்தில் வேகமான திரைக்கதைகள் அன்றைய காலங்களில் தொடர்ச்சியாக வரும்போது, மனஸ்தானின் திரைக்கதை நகர்வு மெதுவாகத் தெரிகிறது " என்று எழுதினார்.[4] பிபிஎண்ணங்கள் என்னும் இணைய தளம், "சரத்குமாரின் சமீபத்திய திரைப்படமான மானஸ்தானைப் பார்க்கும்போது நினைவுக்கு வரும் சொல், ஆர்வமற்றது. மற்ற திரைப்படங்களில் காணப்படாத எந்தவொரு முன்னேற்றங்களும் பார்வையாளரை ஆச்சரியப்படுத்த இயக்குனர் எந்தவிதமான விருப்பத்தையும் காட்டவில்லை. திரைப்படத்தைப் பற்றிய அனைத்தும், சரத்குமாரின் மிகச் சிறந்த-உண்மையான கதாபாத்திரம் முதல் மத்தியில் பெரிய திருப்புமுனை வரை, முதல் ஜோடி ரீல்களைப் பார்த்தபின் முதல் பாதியை முழுவதுமாக கணிக்க முடியும். அதிர்ஷ்டவசமாக, இரண்டாவது பாதி சில ஆச்சரியங்களைத் தூண்டுவதாக இருப்பதால் இந்தத் திரைப்படம் ஓரளவு மோசமில்லை என்று ஆகிறது" என்று எழுதினார்.[5] சிஃபி இணைய தளம், "மனஸ்தான் படத்தில் எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்தப் பாடல்கள் நேற்றைய நாளுக்கு முந்தைய நாள் சாம்பார் போலவே பழமையாகத் தோன்றுகிறது. சரத்குமார் அவர்களே விருப்பமில்லாமல் நடித்தது போல் தோன்றுகிறது. படம் பார்ப்பது தவிர்க்கப்படலாம்" என்று எழுதினார்.[2] தி இந்து நாளிதழ், "1960களில் வந்த திரைப்படங்களின் கதைக் களத்தைக் கொண்டிருந்தாலும், இயக்கம் மற்றும் திரைக்கதை ஓரளவு படத்தைக் தேர்ச்சி பெற வைக்கிறது" என்று எழுதினர்.[6]
மேற்கோள்கள்
- ↑ http://play.raaga.com/tamil/album/Manasthan-songs-T0000897
- ↑ 2.0 2.1 2.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2019-03-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190302152525/http://www.sify.com/movies/manasthan-review--pclv3Ngjjecfb.html.
- ↑ "Manasthan" இம் மூலத்தில் இருந்து 3 September 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030903171828/http://www.chennaionline.com/location/manasthan.asp. பார்த்த நாள்: 2014-05-06.
- ↑ https://www.indiaglitz.com/manasthan-review-tamil-movie-7153
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303211323/http://www.bbthots.com/reviews/2004/maanasthan.html.
- ↑ "Maanasthan" (in en-IN). 2004-06-18. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/maanasthan/article28576550.ece.