நினைத்தேன் வந்தாய்
நினைத்தேன் வந்தாய் | |
---|---|
இயக்கம் | கே. செல்வ பாரதி |
திரைக்கதை | கே. செல்வ பாரதி |
இசை | தேவா |
நடிப்பு | விஜய் ரம்பா தேவயானி |
படத்தொகுப்பு | வாசு - சலீம் |
கலையகம் | வைஜெயந்தி மூவீஸ் |
விநியோகம் | கீதா ஆர்ட்ஸ் |
வெளியீடு | 10 ஏப்ரல் 1998 |
ஓட்டம் | 165 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹4.2 கோடி |
நினைத்தேன் வந்தாய் (Ninaithen Vandhai) 1998-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் நாள் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். விஜய், ரம்பா மற்றும் தேவயானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும், மணிவண்ணன், சார்லி உள்ளிட்டோர் துணைப் பாத்திரங்களிலும் நடித்திருந்த இத்திரைப்படத்தை கே. செல்வ பாரதி இயக்கியிருந்தார்.
கதைக்கரு
கோகுல கிருஷ்ணன்(விஜய்) ஒரு இசைக் கலைஞர், தன்னுடைய கனவில் ஒரு பெண்ணைப் பார்க்கிறார்; அப்பெண்ணுடைய முகத்தினைப் பார்க்காமல் காதலிக்கவும் துவங்குகிறார். அப்பெண்ணிற்கு அடையாளம், அவளுடைய இடுப்பில் உள்ள மச்சம். அந்தப் பெண்ணை தன்னுடைய மாமா(மணிவண்ணன்) மற்றும் உறவினர்களின் உதவியுடன் நிஜத்தில் தேடுகிறார். இதற்கிடையில் இவருடைய தந்தை, சந்தனக்கவுண்டர் (வினு சக்ரவர்த்தி) கிராமத்துப் பெண்ணான சாவித்ரியை (தேவையானி) நிச்சயம் செய்கிறார். வேறுவழியின்றி கோகுலும் ஒப்புக்கொள்கிறார், சாவித்ரி கோகுலை விரும்ப ஆரம்பிக்கிறார். இதற்கிடையில் வேறொரு திருமணமொன்றில் தன்னுடைய கனவுதேவதையான சுவப்னாவை (ரம்பா) பார்க்கிறார். சுவப்னாவிற்கு இசை கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவும் இருக்கிறார் கோகுல். இருவரும் காதல் வயப்படுகின்றனர்.
தன்னுடைய அப்பா செய்த நிச்சயத்தை நிறுத்த முயன்று தோற்றுப்போகிறார் கோகுல், அதை சுவப்னா அறிந்து கொள்கிறார். சுவப்னாவும், சாவித்ரியும் சகோதிரிகள். தன்னுடைய சகோதிரிக்காக சுவப்னா தன்னுடைய காதலைத் தியாகம் செய்கிறார். இதைக் கடைசியில் தெரிந்து கொள்ளும் சாவித்ரி சுவப்னாவையும், கோகுலையும் ஒன்றுசேர்த்து வைக்கிறார்.
நடித்தவர்கள்
- கோகுல கிருஷ்ணனாக விஜய்
- சுவப்னாவாக ரம்பா
- சாவித்ரியாக தேவயானி
- கோகுலின் மாமாவாக மணிவண்ணன்
- சார்லி
- செந்தில்
- மலேசியா வாசுதேவன்
- கோகுலின் அப்பா வினு சக்ரவர்த்தி
- அல்வா வாசு
- ஆர். சுந்தர்ராஜன்
- ரஞ்சித்
- எஸ். என். லட்சுமி
பாடல்கள்
நினைத்தேன் வந்தாய் | ||||
---|---|---|---|---|
| ||||
வெளியீடு | 1998 | |||
ஒலிப்பதிவு | 1998 | |||
இசைப் பாணி | திரைப்பட பாடல் | |||
நீளம் | 35:02 | |||
இசைத் தயாரிப்பாளர் | தேவா | |||
தேவா காலவரிசை | ||||
|
இத்திரைப்படத்திற்கான இசையமைப்பளர் தேவா.[1][2][3]
பாடல் | பாடியவர்(கள்) | பாடல் வரிகள் | கால அளவு |
வண்ண நிலவே வண்ண நிலவே | ஹரிஹரன் | பழனி பாரதி | 5:07 |
என்னவளே என்னவளே | மனோ, அனுராதா ஸ்ரீராம் | 4:58 | |
மல்லிகையே மல்லிகையே | சித்ரா, அனுராதா ஸ்ரீராம் | 4:54 | |
உன் மார்பில் விழி மூடி | சித்ரா | 4:56 | |
மனிஷா மனிஷா | தேவா, சபீஷ் குமார், கிருஷ்ணராஜ் | கே. செல்வபாரதி | 5:13 |
உனை நினைத்து நான் எனை | எஸ். பி. பாலசுப்ரமணியம், சுஜாதா மோகன், சித்ரா | வாலி | 5:07 |
பொட்டு வைத்து பூமுடிக்கும் | சுவர்ணலதா | பழனி பாரதி | 4:47 |
குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ http://www.jointscene.com/movies/kollywood/Ninaithen_Vandhai/1111#songs
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2011-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111024215823/http://www.oosai.com/tamilsongs/ninaithen_vanthai_songs.cfm.
- ↑ http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000388
- Album articles with non-standard infoboxes
- Articles with hAudio microformats
- Album infoboxes lacking a cover
- Pages using infobox album with empty type parameter
- Pages using infobox album with unknown parameters
- 1998 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- விஜய் நடித்துள்ள திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்
- ரம்பா நடித்த திரைப்படங்கள்
- தேவயானி நடித்த திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்