தி. மு. ஜயரத்ன

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தி. மு. ஜயரத்ன
Nimal Korale PM- cropped.jpg
14-வது இலங்கை பிரதமர்
பதவியில்
21 ஏப்ரல் 2010 – 9 சனவரி 2015
குடியரசுத் தலைவர் மகிந்த ராசபக்ச
முன்னவர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க
பின்வந்தவர் ரணில் விக்கிரமசிங்க
புத்தசாசன, சமய அலுவல்கள் அமைச்சர்
பதவியில்
8 சூலை 2010 – 7 சூலை 2015
குடியரசுத் தலைவர் மகிந்த ராசபக்ச
பிரதமர் இவரே
தோட்டத்தொழிற்துறை அமைச்சர்
பதவியில்
6 ஆகத்து 2007 – 6 ஆகத்து 2010
குடியரசுத் தலைவர் மகிந்த ராசபக்ச
பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க
அஞ்சல், தொலைத்தொடர்பு, மற்றும் மலையக அபிவிருத்தி அமைச்சர்
பதவியில்
8 ஆகத்து 2004 – 6 செப்டம்பர் 2007
குடியரசுத் தலைவர் மகிந்த ராசபக்ச
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க
மகிந்த ராசபக்ச
விவசாயத்துறை அமைச்சர்
பதவியில்
1 சூன் 2000 – 9 சூலை 2001
குடியரசுத் தலைவர் சந்திரிக்கா குமாரதுங்க
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
5 சனவரி 2004 – 7 சனவரி 2010
பதவியில்
1 சூலை 1989 – 29 திசம்பர் 2001
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
7 சனவரி 2010 – 6 சூன் 2015
பதவியில்
30 திசம்பர் 2001 – 2 சனவரி 2004
தனிநபர் தகவல்
பிறப்பு திசாநாயக்க முதியன்சேலாகை ஜயரத்ன
(1931-06-04)4 சூன் 1931
கொழும்பு, இலங்கை
இறப்பு 19 நவம்பர் 2019(2019-11-19) (அகவை 88)
கண்டி, இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
பிள்ளைகள் 3

திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன (Dissanayaka Mudiyanselage Jayaratne, சிங்களம்: දිසානායක මුදියන්සේලාගේ ජයරත්න, 4 சூன் 1931 – 19 நவம்பர் 2019[1]) அல்லது பொதுவாக தி. மு. ஜயரத்ன (D. M. "Di Mu" Jayaratne)[2] இலங்கையின் அரசியல்வாதி ஆவார். இவர் 2010 முதல் 2015 வரை இலங்கையின் 14-வது பிரதமராகப் பதவியில் இருந்தார். இலங்கை சுதந்திரக் கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான இவர், 1970 ஆம் ஆண்டில் முதன் முதலாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[3]

வாழ்க்கைக் குறிப்பு

ஜயரத்ன தனது ஆரம்பக் கல்வியை கம்பளை தொலுவ கிராமிய விகாரை பாலர் பாடசாலையிலும், பின்னர் கம்பளை சாகிராக் கல்லூரி, கண்டி காந்தி வித்தியாலயம் ஆகியவற்றிலும் பயின்றார். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு கண்டி காந்தி வித்தியாலயத்தில் ஆசிரியராகவும் பின்னர் கம்பளையில் உப தபாலதிபராகவும் பணியாற்றினார்.

அரசியலில்

1951 ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சியை அமைத்த போது ஜயரத்ன அவருடன் இணைந்தார். அக்கட்சியின் அப்போதைய பதின்மூன்று முக்கியஸ்தர்களில் இவரும் ஒருவராவார். 1959 இல் கிராம சபை தேர்தலில் தோற்றி ‘கந்துகர பஹல கோறளே’ கிராம சபையில் கிராம சபை உறுப்பினரானார். 1961 இல் அதன் தலைவராகவும் ஆனார்.

1970 இல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று கம்பளைத் தொகுதியின் அங்கத்தவரானார். 1969 முதல் 1994 வரையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

1994 இல் கம்பளைத் தொகுதியில் வெற்றி பெற்று சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் காணி, விவசாயம் மற்றும் வன வள அமைச்சராகைப் பணியாற்றினார். 2000 இல் விவசாய, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராகவும், 2004 ஆம் ஆண்டில் தபால், தொலைத் தொடர்பு, மலைநாட்டு அபிவிருத்தி அமைச்சராகவும் 2005 இல் தபால் தொலைத் தொடர்புகள் மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும், 2007 முதல் நாடாளுமன்றம் 2009 ஆம் ஆண்டில் கலைக்கப்படும் வரை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராகவும் பொறுப்பில் இருந்தார்.

மேற்கோள்

வெளி இணைப்புகள்

அரசியல் பதவிகள்
முன்னர்
இரத்தினசிறி விக்கிரமநாயக்க
இலங்கை பிரதமர்
2010–2015
பின்னர்
ரணில் விக்கிரமசிங்க
"https://tamilar.wiki/index.php?title=தி._மு._ஜயரத்ன&oldid=24698" இருந்து மீள்விக்கப்பட்டது