சுந்தர பாண்டியன் (1998 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
2012 ஆம் ஆண்டு எம். சசிகுமார்மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படத்தின் பெயரும் சுந்தர பாண்டியன் ( திரைப்படம்).
சுந்தரபாண்டியன்
இயக்கம்ஆர். ரகு
தயாரிப்புஆர். ரகு
கதைடி, கே. போஸ்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. பாலமுருகன்
படத்தொகுப்புபி. ஆர். சண்முகம்
கலையகம்ஜுபிடர் பிலிம் மேக்கர்ஸ்
விநியோகம்ஜுபிடர் பிலிம் மேக்கர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 20, 1998 (1998-02-20)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சுந்தர பாண்டியன் (Sundara Pandian) 1998 ஆம் ஆண்டு கார்த்திக், சுவாதி மற்றும் ஹீரா ராஜகோபால் நடிப்பில், ஆர். ரகு இயக்கத்தில், தேவா இசையமைப்பில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2].

கதைச்சுருக்கம்

கிராமத்தில் வாழும் பாண்டி (கார்த்திக்) படிக்காதவன். அவனது முறைப்பெண்ணான கார்த்திகாவைக் (சுவாதி) காதலிக்கிறான். ஆனால் கார்த்திகா அவனைக் காதலிக்கவில்லை. நகரத்தில் வாழ்ந்துவரும் சுந்தர் (கார்த்திக் 2) பணக்கார தொழிலதிபர் அசோக்ராஜின் மகன். தாயில்லாத அவனுக்கு தந்தையின் அன்பும் கிடைக்காமல் வளர்கிறான்.

ஒரு நாள் அதிக பணம் சம்பாதித்து பணக்காரனாகி திருமணம் செய்துகொண்டு வாழவேண்டும் என்று முடிவுசெய்யும் பாண்டி தன் கிராமத்தை விட்டு வெளியேறுகிறான். அதே சமயம் பாண்டியின் கிராமத்திற்கு எதிர்பாராமல் வரும் சுந்தரைப் பாண்டி என்று நினைக்கும் ஊர் மக்கள் அவனைப் பிடித்துச்சென்று பாண்டியின் தாயிடம் ஒப்படைக்கின்றனர். தாயின் அன்புக்கு ஏங்கும் சுந்தர் அங்கேயே பாண்டி என்ற பெயருடன் தங்குகிறான்.

பாண்டி நகரத்தில் வேலை தேடிக் கொண்டிருக்கிறான். அவனை சாலையில் காணும் சுந்தரின் தந்தை அசோக்ராஜ் தன் மகனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக எண்ணி வீட்டுக்கு அழைத்துச்செல்கிறார். பாண்டியின் மீது காதல் கொள்கிறாள் காவல்துறை அதிகாரி ரம்யா (ஹீரா ராஜகோபால்). அசோக்ராஜால் பாதிக்கப்பட்டு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொத்தவால் (மணிவண்ணன்) அசோக்ராஜ் மற்றும் அவனது மகன் சுந்தரைக் கொள்ளும் நோக்கத்துடன் அங்கிருந்து தப்பிக்கிறான்.

கார்த்திகா கிராமத்தில் இருக்கும் சுந்தரைக் காதலிக்கிறாள். கார்த்திகாவின் தந்தை (அலெக்ஸ்) அவர்கள் காதலை ஏற்க மறுக்கிறார். கார்த்திகாவின் தந்தையைக் கொல்லவருபவர்களிடமிருந்து அவரைக் காப்பாற்றுகிறான் சுந்தர். அதனால் மனம்மாறும் கார்த்திகாவின் தந்தை சுந்தரை மருமகனாக ஏற்கிறார். திருமணத்திற்கு முன் கார்த்திகாவிடம் தான் யார் என்ற உண்மையை சொல்கிறான் சுந்தர்.

பாண்டியைத் தேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்று கிராமத்தைவிட்டு வெளியேறும் சுந்தர் நகரத்திற்கு வருகிறான். கொத்தவால், அசோக்ராஜ் மற்றும் பாண்டியைக் கடத்துகிறான். சுந்தர் அவர்களைக் காப்பாற்றி கொத்தவாலை சிறைக்கு அனுப்புகிறான்.

நடிகர்கள்

இசை

படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர்கள் காளிதாசன், பொன்னியின் செல்வன் மற்றும் வாசன்[3].

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 ராத்திரி ராத்திரி மனோ 5:14
2 பீடா பீடா கிருஷ்ணராஜ் 4:18
3 செந்தூர பூவே மனோ, தேவி 5:12
4 கையில் வந்த எஸ். பி. பாலசுப்ரமணியம், சித்ரா 5:08
5 வாடி புள்ள மலேசியா வாசுதேவன் 4:18

மேற்கோள்கள்