சித்ராலயா
சித்ராலயா என்பது தமிழ் நாட்டில் செயல்பட்ட ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனமானது இயக்குநர் ஸ்ரீதரால் துவக்கப்பட்டது.
வரலாறு
ஸ்ரீதர் வீனஸ் திரைப்பட நிறுவனத்துக்காக படங்களைச் செய்து கொண்டிருந்போது அந்நிறுவனத்துடன் ஏற்பட்ட பிணக்கால் அதிலிருந்து விலகி தன் நண்பர்களான கோபு, சி. வி. ராஜேந்திரன், வின்சென்ட், சுந்தரம், திருச்சி அருணாச்சலம் ஆகியோரை வேலை பங்குதாரர்களாகக் கொண்டு சித்ராலயாவை 1960 இல் தொடங்கினார். அப்போது நிறுவனத்தின் அலுவலகமானது சென்னை தியாகராய நகரின் வடக்கு போக் சாலையில் அமைக்கப்பட்டது. சித்ராலயா நிறுவனமானது படகைத் துடுப்பால் செலுத்தும் ஒரு வாலிபனும், அவன் முன்பாக ஒரு பெண் அமர்ந்திருப்பது போன்ற சின்னம் உருவாக்கப்பட்டது.[1]
சித்ராலயா தொடங்கப்பட்டதும் முதல் படமாக நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் கதையை படமாக்க விவாதிக்கப்பட்டது. பின்னர் முதல் படமே சோகமாக இருக்க வேண்டாம் என்று கருதி தேன் நிலவு படத்தின் கதையை படமாக்க முடிவு செய்து தயாரித்தனர்.[2]
தயாரித்த திரைப்படங்கள்
- தேன் நிலவு
- காதலிக்க நேரமில்லை
- நெஞ்சிருக்கும் வரை
- உத்தரவின்றி உள்ளே வா
- நெஞ்சில் ஓர் ஆலயம்
- சிவந்த மண்
- வெண்ணிற ஆடை
- வைர நெஞ்சம்
- அவளுக்கென்று ஒரு மனம்
- தந்துவிட்டேன் என்னை
மேற்கோள்கள்
- ↑ டி.ஏ.நரசிம்மன் (12 சனவரி 2018). "சி(ரி)த்ராலயா". கட்டுரை (தி இந்து தமிழ்). http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22421067.ece. பார்த்த நாள்: 4 மே 2018.
- ↑ டி.ஏ.நரசிம்மன். (27 ஏப்ரல் 2018). "காஷ்மீரில் கட்டிப்போட்ட சலுகை!". கட்டுரை (தி இந்து தமிழ்). http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23684150.ece. பார்த்த நாள்: 4 மே 2018.