சங்கர்லால் (திரைப்படம்)
சங்கர்லால் | |
---|---|
இயக்கம் | டி. என். பாலு |
தயாரிப்பு | டி. என். பாலு |
கதை | டி. என். பாலு |
திரைக்கதை | டி. என். பாலு |
இசை | இளையராஜா, கங்கை அமரன் |
நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீதேவி சீமா |
ஒளிப்பதிவு | என். கே. விசுவநாதன் |
படத்தொகுப்பு | வி. ராஜகோபால் |
நடனம் | கீதா |
வெளியீடு | 15 ஆகஸ்ட் 1981 (தமிழ்) 6 பிப்ரவரி 1982 (தெலுங்கு) |
நீளம் | 3554 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சங்கர்லால் (Sankarlal) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்டதாகும். தெலுங்கு மொழியில் அந்தகாடு எனும் பெயரில் வெளியானது.
இயக்குநர் டி. என். பாலு அவர்கள், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்குள் உயிரிழந்தார். பஞ்சு அருணாசலம், இப்படம் நிறைவடைவதற்கு உதவி புரிந்தார். மீதி படத்தை, ஒளிப்பதிவாளர் என். கே. விசுவநாதன், மற்றும் கமல்ஹாசன் அவர்களே இயக்குநராக பணிபுரிந்து படத்தை முழுவதுமாக முடித்தனர்.
நடிகர்கள்
- கமல்ஹாசன் - தர்மலிங்கம்(சங்கர்லால்) மற்றும் மோகன்
- ஸ்ரீதேவி - ஹேமா
- சீமா - சீதா/பாபி, தர்மலிங்கத்தின் மகள்.
- பி. ஆர். வரலட்சுமி - தனலட்சுமி, தர்மலிங்கத்தின் மனைவி.[1]
- சுருளி ராஜன் - கந்தசாமி பிள்ளை, ஹேமாவின் தந்தை.
- ஆர். எஸ். மனோகர் - செல்லத்துரை
- எஸ். ஏ. அசோகன் - நடராஜன் (சிறப்பு தோற்றம்)
- வி. கோபாலகிருஷ்ணன் - மாரி, நடராஜனின் வீட்டு வேலையாள்.
- வெண்ணிற ஆடை மூர்த்தி - ஹோட்டல் சர்வர் (சிறப்பு தோற்றம்)
- ஹேமா
- பேபி பபீதா
- பேபி வந்தனா
தயாரிப்பு
இத்திரைப்படத்தில் நடிகை ஸ்ரீபிரியா கமல் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார், ஆனால் இப்படத்தில் நடிக்க தேதி ஒதுக்கீடு செய்வதில் ஸ்ரீபிரியா மற்றும் இயக்குநர் டி. என். பாலு இடையே முரண்பாடு ஏற்பட்டதால் இப்படத்திலிருந்து விலகினார்.[2]
பாடல்கள்
இளையராஜா ( இளங்கிளியே.. பாடல் மட்டும் ), மற்றும் கங்கை அமரன் ஆகியோர் இத்திரைப்படத்திற்கு இசை அமைத்தனர்.
'கெல் கெல் மெயின்' (Khel Khel Mein -1975) எனும் இந்தி திரைப்படத்தின், ஒரு பாடலான "ஏக் மெயின் ஆர் ஏக் டூ.. (Ek Main Aur Ek Tu…) எனும் பாட்டு, இத்திரைப்படத்தில் முழுவதுமாக, மீண்டும் பயன்படுத்தப்பட்டது.
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1. | "இளங்கிளியே இன்னும் விளங்கலியே".. | எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | புலமைப்பித்தன் | 04:33 |
2. | "அட வாடா கண்ணு".. | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | புலமைப்பித்தன் | 04:24 |
3. | "கஸ்தூரி மான் ஒன்று".. | எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன் | புலமைப்பித்தன் | 04:36 |
4. | "தேடினேன்".. | மலேசியா வாசுதேவன் | கங்கை அமரன் | 04:24 |
5. | "உண்மை என்றும் வெல்லும்".. | வாணி ஜெயராம், மலேசியா வாசுதேவன் | பஞ்சு அருணாசலம் | 04:13 |
6. | "பாதி கல்லில்"..(படத்தில் இல்லை) | எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன், கமல்ஹாசன் | புலமைப்பித்தன் | 04:27 |
மேற்கோள்கள்
- ↑ "எங்க வீட்டுக்கு வந்துடுங்கன்னு எல்லாரும் கூப்பிடுறாங்க! - 'சுந்தரி' அப்பத்தா வரலட்சுமி". ஆனந்த விகடன். 19 ஏப்ரல் 2021. https://cinema.vikatan.com/television/sundari-serial-patti-actress-pr-varalakshmi-interview. பார்த்த நாள்: 15 மே 2021.
- ↑ "அவன் அவள் அது - படத்தில் வாடகைத்தாய் வேடத்தில் ஸ்ரீபிரியா". மாலை மலர். 2 அக்டோபர் 2018. http://www.maalaimalar.com/cinema/cinehistory/2018/10/02211906/1195251/cinima-history-sripriya.vpf. பார்த்த நாள்: 1 அக்டோபர் 2020.