கொடுங்கல்லூரம்மா
கொடுங்கல்லூரம்மா | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | குஞ்சாக்கோ |
தயாரிப்பு | எம். குஞ்சாக்கோ |
கதை | ஜகதி என்.கே. ஆச்சாரி |
இசை | கி. இராகவன் |
நடிப்பு | பிரேம் நசீர் கே. ஆர். விஜயா அடூர் பாசி திக்குறிசி சுகுமாரன் |
கலையகம் | எக்செல் புரொடக்சன்ஸ் |
விநியோகம் | எக்செல் புரொடக்சஷன்ஸ் |
வெளியீடு | நவம்பர் 22, 1968 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
கொடுங்கல்லூரம்மா (Kodungallooramma) என்பது 1968 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள மொழித் திரைப்படமாகும். இப்படத்தை குஞ்சாக்கோ இயக்கி, தயாரித்தார். இப்படத்தில் பிரேம் நசீர், கே. ஆர். விஜயா, அடூர் பாசி, திக்குறிசி சுகுமாரன் நாயர் ஆகியோர் நடித்தனர். இது இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தை அடிப்படையாக கொண்டது. மேலும் சிலப்பதிகாரக் கதை நாயகியாகியான கண்ணகியை வழிபடும் கொடுங்கல்லூர் பகவதி கோயிலின் கதையையும் கூறுகிறது. இந்த படத்திற்கு கே. ராகவன் இசையமைத்தார்.[1][2][3]
கதை
கோவலனும் கண்ணகியும் சோழ நாட்டில் மகிழ்ச்சியுடன் வாழும் தம்பதியர். அரசவை நடனக் கலைஞரான மாதவி தனது அழகால் கோவலனை மயக்கும் போது அவர்களின் வாழ்க்கை திருப்பத்தை சந்திக்கிறது. அவள் அழகில் மயங்கிய கோவலன் கண்ணகியை மறந்துவிட்டு மாதவியை மணக்கிறான். எல்லோரும் கண்ணகியிடம் கோவலனை மறந்துவிடும்படி வற்புறுத்தினாலும், மறுபுறம், அவன் தன்னிடம் திரும்புவான் என்ற நம்பிக்கையுடன் அவனது நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறாள். இதற்கிடையில், வேரொருவனுடன் படுத்திருக்கும் மாதவியை கையும் களவுமாக கோவலன் பிடிக்கிறான். தனது தவறை உணர்ந்த கோவலன் கண்ணகியிடம் திரும்புகிறான். அவள் அவனை மகிழ்ச்சியுடன் கண்ணீருடன் இருகரங்களுடன் வரவேற்றாள். இறுதியில் அவனை மன்னிக்கிறாள்.
கையில் பணமில்லாத கோவலன் புதிதாக தொழில் தொடங்க முடிவு செய்கிறான். கண்ணகியின் சிலம்பில் ஒன்றை அவன் கேட்கிறான். அதை விற்று அப்பணத்தைக் கொண்டு தொழிலைத் தொடங்க முடிவெடுக்கிறான். அதற்கு கண்ணகி உடனடியாக செவிசாய்கிறாள். எனவே அவர்கள் சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்குச் செல்கின்றனர்.
கோவலன் சிலம்பை அடகு வைக்க அருகிலிருந்த பொற்கொல்லரிடம் சென்றபோது, அந்தச் சிலம்பு திருடுபோன அரசியின் சிலம்பை ஒத்து இருப்பதாக பொற்கொல்லன் ஐயுறுகிறான். கோவலனை கைது செய்து விசாரணை நடத்தாமல் தலை துண்டித்து அரசனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இது கண்ணகியை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அவள் மிகவும் கோபமுற்று, தன் கணவனின் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க அரண்மனைக்குள் நுழைகிறாள். தனது தவறை உணர்ந்ததும், மன்னன் கண்ணகியை அமைதியாகுமாறு கோருகிறான். அவளிடம் மன்னிப்புக் கேட்கிறான். ஆனால் அவள் அவனது மன்னிப்பை ஏற்கவில்லை. குற்ற உணர்ச்சியாலும், அவமானத்தாலும், அரசனும் அரசியும் இறக்கிறனர். ஆனால் இருந்தாலும் கண்ணகியின் கோபல் அடங்கவில்லை. அவள் ஒரு மகத்தான எட்டு கைகள் கொண்ட உருவமாக உருமாறி பாண்டிய நாட்டை நெருப்பால் அழிக்கிறாள். சோழ, பாண்டிய நாடுகளில் போதுமான துன்பங்களை அனுபவித்த கண்ணகி தனது மீதமுள்ள சிலம்பை சேர நாட்டினை நோக்கி வீசி, அமைதி அடைகிறாள் . அதன் பின்னர் கொடுங்கல்லூர் கோவிலில் கண்ணகி அம்மா தெய்வமாக வழிபடப்படுகிறாள்.
நடிகர்கள்
- கோவலனாக பிரேம் நசீர்
- கண்ணகியாக கே. ஆர். விஜயா
- சீன வணிகனாக அடூர் பாசி
- கோவலனின் தந்தையாக திக்குறிசி சுகுமாரன்
- சோழ மன்னனாக ஜோஸ் பிரகாஷ்
- துறவியாக மணவாளன் ஜோசப்
- கொங்கிமாமியாக அடூர் பங்கஜம்
- கவுந்தியாக ஆறன்முளா பொன்னம்மா
- மாதவியாக ஜோதிலட்சுமி
- சமையல்காரராக கடுவாகுளம் ஆண்டனி
- தளபதியாக கலைக்கல் குமரன்
- தட்டாதியாக காஞ்சனா
- பாண்டிய அரசனாக கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர்
- பொற்கொல்லனாக என். கோவிந்தன்குட்டி
- கணபதியாக நெல்லிக்கோடு பாஸ்கரன்
- கொங்கம்மாவனாக எஸ். பி. பிள்ளை
- பேரரசியாக கதீஜா
பாடல்கள்
இப்படத்திற்கு கே. ராகவன் இசையமைக்க பாடல் வரிகளை வயலார் ராமவர்மா எழுதியுள்ளார்.
எண். | பாடல் | பாடகர்கள் | வரிகள் | நீளம் (நி:நொ) |
---|---|---|---|---|
1 | "பத்ரதீபம்" | எஸ். ஜானகி | வயலார் ராமவர்மா | |
2 | "காவேரிப்பூம்பட்டணத்தில்" | பி. சுசீலா, எம். பாலமுரளிகிருஷ்ணா | வயலார் ராமவர்மா | |
3 | "கொடுங்கல்லூரம்மே" | எம். பாலமுரளிகிருஷ்ணா, குழுவினர் | வயலார் ராமவர்மா | |
4 | "மஞ்சுபாசினி" | கே. ஜே. யேசுதாஸ் | வயலார் ராமவர்மா | |
5 | "நர்த்தகி" | கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா | வயலார் ராமவர்மா | |
6 | "ரிதுகண்யகாயுதே" | பி. சுசீலா | வயலார் ராமவர்மா | |
7 | "ஸ்த்ரீ இருதயம்" | பி. பி. ஸ்ரீனிவாஸ் | வயலார் ராமவர்மா | |
8 | "உதயாஸ்தமனங்கலே" | கே. ஜே. யேசுதாஸ் | வயலார் ராமவர்மா |
மேற்கோள்கள்
- ↑ "Kodungallooramma". www.malayalachalachithram.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-14.
- ↑ "Kodungallooramma". malayalasangeetham.info. Archived from the original on 17 March 2015. பார்க்கப்பட்ட நாள் 2014-10-14.
- ↑ "Kodungalluramma". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-14.