காசிக்கலியன் கவிராயர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

காசிக்கலியன் கவிராயர் [1] என்பவர் காசியைச் சேர்ந்த ஒரு புலவர் ஆவார். இப் புலவரைப் பற்றியும், அவர் இயற்றிய நூல்களைப் பற்றியும் தென்காசி விஸ்வநாதர் கோயில் கோபுர வாயில் நிலையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு குறிப்பிடுகின்றது. வீரபாண்டியன் குடைமங்கலம், வீரபாண்டியன் நாண்மங்கலம், வீரபாண்டியன் வாண்மங்கலம் என்னும் நூல்கள் இப் புலவரால் இயற்றப்பட்டவை.

புதுக்கோட்டை ஆவணப் பாடல்

கலியன் கவிராயன் வீரமாறனுக்கு நாள்-மங்கலம், குடை-மங்கலம், வாள்-மங்கலம் ஆகிய சிற்றிலக்கிய நூல்கள் பாடிய செய்தியை இப்போதுள்ள புதுக்கோட்டைச் சாசனம் குறிப்பிடுகிறது.

கற்று உணர்ந்தோன் காசிக் கலியன் கவிராயன்
மல் தடந்தோள் வீர மாறனுக்குச் - சொல்புனைந்தான்
நாள் மங்கலமும், நவிற்று குடை மங்கலமும்
வாள் மங்கலமும் வகுத்து.[2]

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014, முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005. பக். 283. 
  2. வெண்பா யாப்பில் அமைந்த இந்தப் பாடல் இங்குப் பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
"https://tamilar.wiki/index.php?title=காசிக்கலியன்_கவிராயர்&oldid=16133" இருந்து மீள்விக்கப்பட்டது