கண்டோர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கண்டோர் அகத்திணை மாந்தர்களில் வாயில்களாக வருபவர். [1] தலைவன் தலைவியைக் கொண்டுதலைக்கழிந்த இடத்து வழியில் பார்த்தவர்கள் இந்தக் கண்டோர். சென்றுவந்தவர்கள், எதிர் வந்தவர்கள் எனக் கண்டோர் பலர் ஆதலின் இந்த வாயில்-மாந்தர் பன்மையால் கூறப்பட்டுள்ளனர்.

  • தலைவனும் தலைவியும் செல்லும் வழியும், காலமும், நலமாக உள்ளன எனத் தாயைத் தேற்றுவர். தலைவன் ஊரை நெருங்கிவிட்டனர் என்பர். தலைவன் தலைவியருக்கு நல்லன கூறுவர். தாயின் கவலை பற்றிக் கூறித் தடுப்பதும் உண்டு. – இவை இவர்களின் பங்கு. [2]
  • நற்றாய் தன் மகளைப் பார்த்தீர்களா என இவர்களிடம் புலம்புவாள். [3]
  • தோழி கண்டோர் சொன்னதாகத் தாயைத் தேற்றுவாள். [4]

நற்றிணை 2, குறுந்தொகை 7, ஐங்குறுநூறு 188 முதலான பாடல்களைக் கண்டோர் கூற்றுக்கு எடுத்துக்காட்டுகளாக உரையாசிரியர் இளம்பூரணர் குறிப்பிட்டுள்ளார்.

அடிக்குறிப்புகள்

  1. தொல்காப்பியம் கற்பியல் 52.
  2. தொல்காப்பியம் அகத்திணையியல் 43
  3. தொல்காப்பியம் அகத்திணையில் 39
  4. தொல்காப்பியம் அகத்திணையில் 42

காண்க

தொகு அகத்திணை மாந்தர்
அகத்திணைத் தலைவர்கள் தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
அகத்திணை வாயில்கள் தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர்
"https://tamilar.wiki/index.php?title=கண்டோர்&oldid=20383" இருந்து மீள்விக்கப்பட்டது