உண்மையே உன் விலையென்ன

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உண்மையே உன் விலை என்ன
இயக்கம்சோ
தயாரிப்புமோஹிந்த் மூவூஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
பத்மப்பிரியா
வெளியீடுஏப்ரல் 30, 1976
நீளம்3948 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உண்மையே உன் விலை என்ன? (Unmaiye Un Vilai Enna?) என்பது 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை சோ எழுதி இயக்கினார். இது இதே பெயரிலான அவரது மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் சோவுடன் முத்துராமன், பத்மப்பிரியா, எஸ். ஏ. அசோகன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். கொலைக் குற்றம் சாட்டப்படும் ஒரு இளைஞனைக் காப்பாற்ற ஒரு பாதிரியார் எடுக்கும் முயற்சிகளைச் சுற்றியே படம் சுழல்கிறது. இது 30 ஏப்ரல் 1976 அன்று வெளியானது.

கதை

மகளிர் சங்கத்துக்கு நன்கொடை தருவதாக அதன் தலைவியை வீட்டிற்கு அழைக்கிறான் ஒரு பணக்கார இளைஞன். அப்பெண் ஒரு வாடகைத் தானுந்தில் அவன் வீட்டிற்கு வருகிறாள். வீட்டில் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க அப்பணக்கார இளைஞன் முயல்கிறான். வாடகைத் தானுந்து ஓட்டுநர் அப்பெண்ணை அவனிடம் இருந்து காப்பாற்ற முயல்கிறார். அம்முயற்சியில் அந்த இளைஞனைக் கொன்றுவிடுகிறார். தேவாலயத்தில் பாதிரியாரிடம் பாவமன்னிப்புக் கேட்டு சரணடைய முடிவெடுக்கிறார் அந்த ஒட்டுநர். ஆனால் பாதிரியார் நீ செய்தது தவறல்ல என்று கூறுகிறார். மேலும் கொலைக்குக் காரணமான சூழ்நிலையைக் காட்டத் தேவையான ஆதாரங்களைச் சேகரிக்கும் வரை ஓட்டுநரை காவல்துறையினரிடம் இருந்து மறைத்து வைக்கிறார். இதற்கிடையில் தன் மகனைக் கொன்றவன் தூக்கில் தொங்கவேண்டும் என்று பணக்காரத் தந்தை விரும்பி அதற்கான பணிகளில் ஈடுபடுகிறார். பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவள் குடும்பத்தாரையும் பணத்தால் விலைக்கு வாங்குகிறார். ஓட்டுநரின் உயிரைக் காக்கப் பாதிரியார் தனது நற்பெயரையும், வேலையையும் இறுதியில் தனது உயிரையும் கூட பணயம் வைத்து தனது முயற்சியில் வெற்றி பெறுகிறார்.[1][2]

நடிப்பு

நடிகர்கள்

விருந்தினர் தோற்றம்

நடிகைகள்

Supporting cast

தயாரிப்பு

உண்மையே உன் விலை என்ன? என்பது சோ ராமசுவாமி தனது விவேகா பைன் ஆர்ட்ஸ் கிளப் நாடகக் குழு மூலம் அரங்கேற்றிய பிரபலமான நாடகமாகும்.[3][4] நீலுவும் நடித்த இந்நாடகம்,[5] விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது.[6] சோ அதைத் தழுவி அதே பெயரில் ஒரு திரைப்படமாக்கி இயக்குநராகவும், எழுத்தாளராகவும், நடிகராகவும் பணியாற்றினார்.[7] இப்படத்தை மொஹிந்த் மூவிஸ் என்ற பதாகையின் கீழ் டி.ஏ.பி. மற்றும் ராணா தயாரித்தனர்.[8][9] ஒளிப்பதிவை சம்பத் கையாண்டார், படத்தொகுப்பை ஈ. வி. சண்முகம் செய்தார்.[8] இத்திரைப்படம் பெங்களூரில் படமாக்கப்பட்டது.[10][11] இதன் இறுதி நீளம் 3,948.22 மீட்டர் (12,953.5 அடி) ஆகும்.[12]

பாடல்

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு வரிகளை கண்ணதாசன் எழுத, எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.[13]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "எத்தனை மாந்தருக்கு"  ம. சு. விசுவநாதன்  
2. "காரணத்தை விளக்கவா"  எல். ஆர். ஈசுவரி  
3. "பாவம் செய்யுங்கள்"  பி. எஸ். சசிரேகா, வாணி ஜெயராம்  

வெளியீடும் வரவேற்பும்

உண்மையே உன் விலை என்ன? 30 ஏப்ரல் 1976 அன்று வெளியானது.[14] கல்கியின் காந்தன் படத்தைப் பாராட்டி எழுதினார். குறிப்பாக முத்துராமனின் நடிப்பையும், சோவின் எழுத்தையும் பாராட்டினார்.[15]

மேற்கோள்கள்

  1. David 1983, ப. 60.
  2. Shankar's Weekly. 27, Part 2. 1974. பக். 342. https://books.google.com/books?id=L6IcAQAAMAAJ&q=unmaiye+un+vilai+enna. பார்த்த நாள்: 16 August 2019. 
  3. Vamanan (8 December 2016). "Cho's pungent scripts satirised society, politics". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 16 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180316133954/https://timesofindia.indiatimes.com/city/chennai/Chos-pungent-scripts-satirised-society-politics/articleshow/55865109.cms. 
  4. Sekhar, Arunkumar (11 May 2018). "Veteran actor R Neelakantan passes away". தி நியூ இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 16 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180616003328/http://www.newindianexpress.com/entertainment/tamil/2018/may/11/veteran-actor-r-neelakantan-passes-away-1813199.html. 
  5. Mukherjee, Bimal; Kothari, Sunil; Lal, Ananda; Dasgupta, Chidananda (1995). Rasa: Theatre and cinema. Anamika Kala Sangam. பக். 196. https://books.google.com/books?id=dfsLAQAAMAAJ&q=Unmaye+Un+Vilai+Enna. பார்த்த நாள்: 16 August 2019. 
  6. Vamanan (26 December 2016). "கலைமாமணி வாமனனின் 'நிழலல்ல நிஜம்' – 56 | திரை வடிவம் பெற்ற சோவின் மேடை நாடகங்கள்!" (in ta). தினமலர் இம் மூலத்தில் இருந்து 16 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316093438/http://www.dinamalarnellai.com/web/news/20258. 
  7. 8.0 8.1 Unmaye Un Vilai Enna (motion picture). Mohind Movies. 1976. Opening credits, from 0:00 to 12:25.
  8. "1976-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள்" (in Tamil) இம் மூலத்தில் இருந்து 16 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316095615/http://www.lakshmansruthi.com/cineprofiles/1976.asp. 
  9. Cho Ramaswamy (1976) (in ta). Kamarajaic cantitten : Transcript of the author's interview with Kamaraj, 1903–1975, Indian statesman; previously published in the form of articles, in Tuklak, Tamil fortnightly. பக். 46. https://books.google.com/books?id=HEIMAQAAIAAJ&q=%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87. பார்த்த நாள்: 17 September 2020. 
  10. "Unmaiye Un Vilai Enna ? (Celluloid)" இம் மூலத்தில் இருந்து 19 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20190119065710/http://movies.syzygy.in/censor/unmaiye-un-vilai-enna-celluloid. 
  11. "Unmaiye Un Vilai Enna (EMI) [1976-EPRip-WAV"] இம் மூலத்தில் இருந்து 27 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20231027061435/https://www.tamilflac.com/product/unmaiye-un-vilai-enna-emi-1976-eprip-wav/. 
  12. "Unmaye Un Vilai Enna (1976)" இம் மூலத்தில் இருந்து 27 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20231027061227/https://screen4screen.com/movies/unmaye-un-vilai-enna. 
"https://tamilar.wiki/index.php?title=உண்மையே_உன்_விலையென்ன&oldid=30974" இருந்து மீள்விக்கப்பட்டது