அன்னை வேளாங்கண்ணி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அன்னை வேளாங்கண்ணி
இயக்கம்கே. தங்கப்பன்
தயாரிப்புகே. தங்கப்பன்
இசைஜி. தேவராஜன்
நடிப்புஜெயலலிதா
ஜெமினி கணேசன்
பத்மினி
ஒளிப்பதிவுஜி. கே. ராமு
படத்தொகுப்புஎன். எம். சங்கர்
விநியோகம்கிரி மூவீஸ்
வெளியீடுஆகத்து 15, 1971
நீளம்3687 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்னை வேளாங்கண்ணி (Annai Velankanni) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. தங்கப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெயலலிதா, ஜெமினி கணேசன், பத்மினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படமானது 1971 ஆம் ஆண்டில் தெலுங்கில் 'மேரி மாதா', 1977 ஆண்டில் மலையாளத்தில் 'வேளாங்கண்ணி மாதாவு' மற்றும் 1979 ஆண்டில் இந்தி மொழியில் 'மாதா வேளாங்கண்ணி' எனும் பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. கமல்ஹாசன் இத்திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தது மட்டுமல்லாமல் உதவி திரைப்பட இயக்குனர் மற்றும் உதவி நடன இயக்குநராகவும் பணியாற்றினார்.[1]

நடிகர்கள்

பாடல்கள்

இப்படத்திற்கு ஜி. தேவராஜன் இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கண்ணதாசன், வாலி, மற்றும் அய்யாசாமி ஆகியோர் எழுதியிருந்தனர்.[2]

எண் பாடல் பாடகர்(கள்) நீளம் (நி:நொ)
1 "தேவமைந்தன் போகின்றான்" டி. எம். சௌந்தரராஜன் 03:23
2 "கடல் அலை தாலாட்டும்" மாதுரி 04:01
3 "கருணைக் கடலே" பி. சுசீலா 03:40
4 "கருணை மழையே" பி. சுசீலா 03:39
5 "நீலக்கடலின் ஓரத்தில்" டி. எம். சௌந்தரராஜன், மாதுரி 03:22
6 "பேராவூரணி" டி. எம். சௌந்தரராஜன், மாதுரி 06:39
7 "தந்தனா தானா" மாதுரி 06:01
8 "வானமென்னும் வீதியிலே" கே. ஜே. யேசுதாஸ், மாதுரி 03:12

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்