வாழ்க ஜனநாயகம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வாழ்க ஜனநாயகம்
இயக்கம்இ. ராமதாஸ்
தயாரிப்புஜே. ஏ. முகமது அலி
கதைஜான் அமிர்தராஜ்
ஈ. இராமதாஸ் (வசனம்)
இசைபாடல்கள்
மன்சூர் அலி கான்
பின்னணி இசை
எஸ். பி. வெங்கடேஷ்
நடிப்பு
ஒளிப்பதிவுதங்கர் பச்சான்
படத்தொகுப்புகே. எம். பி. குமார்
கலையகம்ராஜ் கென்னடி பிலிம்ஸ்
வெளியீடுமார்ச்சு 7, 1996 (1996-03-07)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாழ்க ஜனநாயகம் (Vaazhga Jananayagam) 1996 ஆம் ஆண்டு மன்சூர் அலி கான் மற்றும் பிரகதி நடிப்பில், ஈ. இராமதாஸ் இயக்கத்தில், ஜே. ஏ. முகமது அலி தயாரிப்பில், மன்சூர் அலி கான் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2].

கதைச்சுருக்கம்

பகத்சிங் (மன்சூர் அலி கான்) பழைய பொருட்களை வாங்கி விற்கும் கடை நடத்திவருகிறான். அவன் கடைக்கு அருகில் பழக்கடை நடத்தி வருபவள் அஞ்சலை (பிரகதி).

காவல்துறை அதிகாரி சிவசங்கர் (மகாநதி சங்கர்) அந்த நகரத்திற்கு மாற்றலாகி வருகிறார். சந்தையில் கடை நடத்தும் அனைத்து வியாபாரிகளும் தனக்குப் பணம் தரவேண்டுமென்று நிர்பந்திக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அஞ்சலைக்கும் சிவசங்கருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. பகத்சிங் தலையிட்டு சிவசங்கரை அவமானப்படுத்தும்விதமாக பேசுகிறான். அஞ்சலையிடம் தவறாக நடக்க முயலும் சிவசங்கரிடமிருந்து அவளைக் காப்பாற்றித் திருமணம் செய்கிறான் பகத்சிங்.

தன் கடைக்கு முன் கொலை செய்யப்படும் பத்திரிகையாளர் கொலைவழக்கில் சாட்சி சொல்லும் பகத்சிங்கை மிரட்ட ஆட்களுடன் வரும் ஜிந்தாவை (ரவீந்திர பாபு), பகத்சிங் அடித்ததால் படுகாயமடைகிறான் ஜிந்தா. இதை அறியும் அமைச்சர் சிசுபாலன் (ஜான் அமிர்தராஜ்) ஜிந்தாவிற்குப் பதிலாக அவனைப்போல் தனக்கு உறுதுணையாக இருக்குமாறு பகத்சிங்கிடம் கேட்கிறார். அதற்கு பகத்சிங் மறுக்கவே காவலர்கள் அவனைக் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து அடிக்கின்றனர்.

பகத்சிங்கின் கடந்த காலம்: தன் தாயுடன் வசிக்கும் பட்டதாரியான பகத்சிங் வேலை தேடி அலைகிறான். அவனுக்கு வேலைவாங்கித் தருவதாகக்கூறி லஞ்சம் கேட்கும் சிசுபாலனின் உதவியாளர் ராமானுஜனிடம் (டி. எஸ். ராகவேந்திரா) தங்கள் வீட்டை விற்றுப் பணம் தருகின்றனர். ஆனால் அவனுக்கு வேலைவாங்கித் தராமல் ஏமாற்றிவிடுகின்றனர். இந்த அதிர்ச்சியில் பகத்சிங்கின் தாய் மரணமடைகிறாள்.

பகத்சிங் தன் எதிரிகளை எப்படிப் பழிவாங்கினான் என்பது மீதிக்கதை.

நடிகர்கள்

இசை

படத்தின் பாடல்களை எழுதி இசையமைத்தவர் மன்சூர் அலி கான்.

வ.எண் பாடல் காலநீளம்
1 அம்மா வாங்க 3:38
2 கோடம்பாக்கம் 3:29
3 சைதாப்பேட்டை சிங்காரி 4:54
4 ஆடு மச்சி கோபாலு 3:33
5 அடி பூங்குயிலே 2:57
6 மழை பேஞ்சி 3:44
7 ஏபிசிடி 4:22
8 வாங்கோ வாங்கோ 3:56

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வாழ்க_ஜனநாயகம்&oldid=37533" இருந்து மீள்விக்கப்பட்டது