வசூல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வசூல்
இயக்கம்வி. ரிஷிராஜ்
தயாரிப்புவி. ரிஷிராஜ்
கதைவி. ரிஷிராஜ்
இசைவிஜய் சங்கர்
நடிப்பு
ஒளிப்பதிவுசே. ராஜ்குமார்
படத்தொகுப்புவி. ஏ. சண்முகம்
கலையகம்ரோஷன் பிலிம் இன்டர்நேஷனல்
வெளியீடுசெப்டம்பர் 12, 2008 (2008-09-12)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வசூல் (Vasool) 2008 ஆம் ஆண்டு வி. ரிஷிராஜ் நடித்து இயக்கி தயாரித்த தமிழ் திரைப்படம். ஹேமந்த் குமார் மற்றும் கிரண் ராத்தோட் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர். விஜய் சங்கர் இசையமைத்தார். இப்படம் தெலுங்கில் வசூல் ராணி என்ற பெயரில் மொழிமாற்றப்பட்டு வெளியானது.[1][2][3][4]

கதைச்சுருக்கம்

ஜீவா (ஹேமந்த் குமார்) நடிகை கிரணின் (கிரண் ராத்தோட்) நிதி ஆலோசகராக இருக்கிறான். ஜீவாவும் கிரணும் காதலிக்கின்றனர். கிரணைக் காதலிக்கும் ஜீவா அதற்காக தன் கிராமத்தைவிட்டு வந்து கிரணின் நிதி ஆலோசகராகப் பணியாற்றுகிறான். ஜீவாவின் நண்பன் ஜிந்தா (ரிஷிராஜ்). தன் நண்பன் ஜீவாவுக்காக எதையும் செய்பவன். கிரண் தன்னுடைய திரைப்படத் தொழில் பாதிக்கும் என்பதால் தங்கள் காதலை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஜீவாவிடம் கேட்டுக்கொள்வதால் அவன் யாரிடமும் தன் காதலி பற்றி சொல்லாமல் இருக்கிறான். ஜிந்தா பலமுறை கேட்டும் தன் காதலி குறித்து சொல்வதைத் தவிர்க்கிறான்.

ஜீவா காதலிப்பது கிரண் என்று ஜிந்தாவிற்குத் தெரியவரும்போது ஜிந்தா அதிர்ச்சியடைகிறான். கிரண் பணம், புகழுக்காக எதையும் செய்யத் தயங்காதவள், எனவே அவளை மறந்துவிடுமாறு ஜிந்தா எச்சரிக்கிறான். முதலில் அதை நம்பாத ஜீவா, கிரணிடம் அதுகுறித்துக் கேட்கும்போது, அவள் தனக்கு வாழ்க்கையில் பணமும் புகழுமே முக்கியம் என்று கூறுவதைக் கேட்டு மனமுடைகிறான். கிரணை நம்பி ஏமாந்த ஜீவா மதுவிற்கு அடிமையாகிறான். தன் நண்பனுக்காக ஜிந்தா என்ன செய்தான்? அதன்பின் என்ன நடந்தது என்பது மீதிக்கதை.

நடிகர்கள்

  • ஹேமந்த் குமார் - ஜீவா
  • கிரண் ரத்தோட் - கிரண்
  • வி. ரிஷிராஜ் - ஜிந்தா
  • பெசன்ட் ரவி - தண்டல் கோவிந்தன்
  • மகாநதி சங்கர் - மும்பை காசி
  • அலெக்ஸ் - கீதாவின் தந்தை
  • பல்லவி
  • பாத்திமா பாபு - அங்கயற்கண்ணி
  • கே. ஆர். வத்சலா
  • ரிஷி கபூர்
  • தாதா முத்துக்குமார் - சேவல்
  • லாவண்யா - கீதா
  • சபர்ணா ஆனந்த் - மல்லிகா
  • அஸ்வதா
  • வசந்த் ராமன்
  • காதல் சரவணன்
  • சுஜா வருணி

இசை

படத்தின் இசையமைப்பாளர் விஜய் சங்கர். பாடலாசிரியர்கள் சினேகன், விவேகா, ஜி.பி. மற்றும் விஜய்சங்கர்.[5][6][7]

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 ஜிண்டுக்கு ஜிந்தா திப்பு 4:52
2 வந்தான் பாரு பலராமன் 1:15
3 பருகிய மனது பாப் ஷாலினி, பிரசன்னா 5:28
4 சிங்கப்பூர் சிலோனு அனந்து 5:02
5 காதலே கார்த்திக் 5:31
6 திருடிடும் பயலோ பாப் ஷாலினி 4:02
7 மஸ்து மஸ்து பார்கவி 4:52

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வசூல்&oldid=37309" இருந்து மீள்விக்கப்பட்டது