லக்கி மேன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
லக்கி மேன்
இயக்கம்பிரதாப் போத்தன்
தயாரிப்புகே. பிரசாந்த்
கதைஇராஜகோபாலன் (உரையாடல்)
திரைக்கதைபிரதாப் போத்தன்
இசைஆதித்தியன்
நடிப்பு
ஒளிப்பதிவுஅரவிந்த் கமலநாதன்
படத்தொகுப்பு
கலையகம்பிரசாந்த் ஆர்ட் பிலிம்ஸ்
வெளியீடு14 ஏப்ரல் 1995
நாடுஇந்தியா
மொழிதமிழ்

லக்கி மேன் (Lucky Man) என்பது 1995 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் கற்பனை நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். பிரதாப் போத்தன் இயக்கிய இப்படத்தில் கார்த்திக், கவுண்டமணி, செந்தில், சங்கவி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருந்தனர். மஞ்சுளா விஜயகுமார், ராதாரவி, வினு சக்ரவர்த்தி, தியாகு ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவு செய்ய ஆதித்தியன் இசையமைத்தார். இப்படம் 1995 ஏப்பிரல் 14 அன்று வெளியிடப்பட்டது. இது 1994 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான யமலீலாவின் மறு ஆக்கம் ஆகும்.[1]

கதை

யமனின் பிரம்மச் சுவடி என்ற புத்தகமானது தற்செயலாக வானத்திலிருந்து பூமியில் விழுந்துவிடுகிறது. இந்த புத்தகத்தில்தான் மனிதனின் ஆயுள் எப்போது முடிகிறது அவன் உயிரை எப்போது எடுக்கவேண்டும் என்ற விவரங்கள் உள்ளன. இதைப் பார்த்துதான் எமனால் ஒரு உயிரை எடுக்க முடியும். ஒரு மாதத்திற்குள் புத்தகத்தைக் கண்டுபிடிக்க பிரம்மதேவர் யமனுக்கு கட்டளையிடுகிறார். புத்தகத்தை மனிதர்கள் பார்த்தால் அதனால் குழப்பம் ஏற்படும் என்று யமனின் கணக்குபிள்ளையான சித்ரகுப்தன் அஞ்சுகிறார். இருப்பினும், புத்தகத்தைப் பார்க்கும் நபரின் விவரங்கள் மட்டுமே புத்தகத்தில் தெரியும் என்று யமன் அவருக்கு உறுதியளிக்கிறார். கோபி என்ற இளைஞனின் கையில் அந்த புத்தகம் கிடைக்கிறது. புத்தகத்தைப் பயன்படுத்துவதன் மூலம் லாட்டரியின் முடிவை அவர்கள் முன்பே அறிந்துகொள்வதால் அவர்கள் பணக்காரர்களாகிறார்கள். கோபி புத்தகத்தைப் பயன்படுத்தி பணக்காரர் ஆகிறான். இதற்கிடையில், யமனும் சித்ரகுப்தனும் பூமிக்கு வந்து புத்தகத்தைத் தேடுகிறார்கள். பூமியில் உள்ள தற்போதைய நாகரிகத்தை அவர்கள் புரிந்து கொள்ளாததால் பல வேடிக்கைகள் ஏற்படுகின்றன. கோபியின் எதிரியான சிவராமன் கோபியின் வெற்றிக்கான ரகசியத்தை அறிய விரும்புகிறான். அதன்பிறகு கோபியிடமிருந்து புத்தகத்தை திருட திட்டமிட்டுகிறான். ஒரு நாள், கோபி தனது தாயார் இறப்பது குறித்து அந்த புத்தகத்தின் மூலம் அறிந்து கொள்கிறான். இப்போது, கோபி தனது தாயைக் காப்பாற்றி தனது காதலையும் வெல்ல விரும்புகிறான். அவன் இதில் வெற்றி பெறுகின்றானா இல்லையா, யமன் புத்தகத்தைக் கண்டுபிடித்தாரா என்பது மீதிக் கதை.

நடிகர்கள்

இசை

இப்படத்திற்கு ஆதித்தியன் இசையமைத்தார். பாடல் வரிகளை பிறைசூடன் எழுதினார்.[4]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "அம்மா 1000"  ஆதித்தயன், மனோ  
2. "அக்கும் பக்கும்"  சுரேஷ் பீட்டர்ஸ், சுஜாதா  
3. "அம்மம்மா ஆனந்தம்"  ஆதித்யன், சித்ரா  
4. "எம தர்மராஜா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா  
5. "பலான பார்ட்டி"  ஆதித்யன், சங்கீதா-சங்கீத சஜித்  
6. "யார் செய்த மாயம்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சங்கீதா-சங்கீத சஜித்  

வரவேற்பு

நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுதிய விமர்சனத்தில், " லக்கி மேன் ஒரு வித்தியாசமான கதையோடு உள்ளது. இது இனிமையான 2 1/2 மணிநேரத்துக்கு உதரவாதமான நகைச்சுவையைக் கொண்டுள்ளது ".[1] படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=லக்கி_மேன்&oldid=37238" இருந்து மீள்விக்கப்பட்டது