ரட்சகன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரட்சகன்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பிரவீன்காந்த்
தயாரிப்புகே. டி. குஞ்சுமோன்
கதைகிரேசி மோகன்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புநாகர்ஜுனா
சுஷ்மிதா சென்
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
வடிவேல்
ஒளிப்பதிவுஅஜெயன் வின்சண்ட்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
வெளியீடுஅக்டோபர் 30, 1997 (1997-10-30)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இரட்சகன் (Ratchagan) 1997 ஆம் ஆண்டு இந்தியத் தமிழில் வெளிவந்த காதல் அதிரடி திரைப்படமாகும். கே. டி. குஞ்சுமோன் தயாரிப்பில், பிரவீன் காந்தின் அறிமுக இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் இசை, பின்னணி இசை ஆகியவற்றிற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலமாக நாகார்ஜுனா, சுஷ்மிதா சென் ஆகியோர் தமிழில் அறிமுகமானார்கள். ரகுவரன், எஸ். பி. பாலசுப்பிரமணியம், வடிவேலு கிரீஷ் கர்னாட் ஆகியோர் துணை வேடங்களில் நடிந்திருந்தனர். இத்திரைப்படம் 1997 அக்டோபர் 30 அன்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் வெளிவந்த நேரத்தில் மிகவும் விலையுயர்ந்த இந்தியப் படமாக இருந்தது. சுஷ்மிதா சென் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த முதலும் கடைசியுமான தமிழ்த் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.[1]

வகை

காதல்படம் / மசாலாப்படம்

பாடல்கள்

இத்திரைப்படத்தின் எட்டு பாடல்களுக்கும், ஒரு தலைப்பு பாடலுக்கும் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.[2] 1997இல் இத்திரைப்படத்தின் இசை உரிமையை டி- சீரியசு வாங்கியது.[3]

தமிழ்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "சோனியா சோனியா"  வைரமுத்துஉதித் நாராயண், பி. உன்னிகிருஷ்ணன், ஹரிணி 5:35
2. "லவ் அட்டேக்"  வாலிகோபால் இராவ், கவிதா பத்வால் 5:01
3. "சந்திரனை தொட்டது யார்"  வைரமுத்துஹரிஹரன், சுஜாதா மோகன் 6:46
4. "கனவா இல்லை காற்றா"  வைரமுத்துஸ்ரீநிவாஸ் 4:34
5. "லக்கி லக்கி"  வைரமுத்துஎஸ். பி. பாலசுப்பிரமணியம், சுக்விந்தர் சிங், சுவர்ணலதா 6:06
6. "நெஞ்சே நெஞ்சே"  வைரமுத்துகே. ஜே. யேசுதாஸ், சாதனா சர்கம் 6:56
7. "போகும் வழியெல்லாம்"  வைரமுத்துகே. எஸ். சித்ரா 4:13
8. "மெர்க்குரி பூக்கள்"  வாலிஅனுபமா, சுவர்ணலதா 5:23
9. "தலைப்பு இசை" (இசைக்கருவி)-- 3:42
மொத்த நீளம்:
48:16

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ரட்சகன்&oldid=36973" இருந்து மீள்விக்கப்பட்டது