ரங்கஸ்தலம்
ரங்கஸ்தலம் Rangasthalam | |
---|---|
இயக்கம் | சுகுமார் |
தயாரிப்பு | நவீன் எர்னேனி ஒய். ரவிசங்கர் மோகன் சிருகர் |
கதை | சுகுமார் |
இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
நடிப்பு | ராம் சரண் சமந்தா ருத் பிரபு ஆதி அனுசியா பரதவாஜ் ஜெகபதி பாபு |
ஒளிப்பதிவு | ஆர். ரத்னவேலு |
படத்தொகுப்பு | நவீன் நூலி |
கலையகம் | மைத்ரி மூவி மேக்கர்ஸ் |
விநியோகம் | கொனிடெலா புரோடக்சன் கம்பெனி |
வெளியீடு | 30 மார்ச்சு 2018 |
ஓட்டம் | 179 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
மொத்த வருவாய் | ₹ 111.8 Cr (5 நாட்கள்)[1] |
ரங்கஸ்தலம் (Rangasthalam (English: lit. Stage) என்பது ஒரு இந்திய தெலுங்கு காலகட்ட அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். இதை சுகுமார் இயக்கியுள்ளார். படத்தை யூ. நவீன், வி. ரவிசங்கர் மற்றும் சி. வி. மோகன் ஆகியோர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற பதாகையின்கீழ் தயாரித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் ராம் சரண், சமந்தா ருத் பிரபு ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களிலும் ஆதி, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கான இசையை தேவி ஸ்ரீ பிரசாத் அமைத்துள்ளார். இந்த படமானது அதிகாரப்பூர்வமாக பெப்ரவரி மாதம் சிரஞ்சீவியால் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. அதன் படப்பிடிப்பு 2017 ஏப்ரல் முதல் தொடங்கியது.[2] 2018 மார்ச்சில் உலகளாவிய அளவில் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டது.
கதை
ஆந்திரத்தில் ரங்கஸ்தலம் என்ற விவசாய கிராமத்தில் கதை நடக்கிறது. அங்கே தனது டீசல் மோட்டாரைக் கொண்டு விவசாய நிலத்துக்குத் தண்ணீர் இறைத்துக்கொடுப்பதை ஒரு தொழிலாகச் செய்கிறார் சிட்டிபாபு (ராம் சரண்). அவருக்கு சரிவரக் காதுகேளாது என்பதால் கிராமத்து மக்கள் இவரை ‘சவுண்ட் இன்ஜினீயர்’ என்று பாசத்துடன் அழைக்கிறார்கள். இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த ராமலட்சுமியை (சமந்தா) கண்டதும் காதல்கொள்கிறார்.
சிட்டியின் சகோதரர் குமார் பாபு (ஆதி) துபாயிலிருந்து திருப்புகிறார். அவர் ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் படித்த இளைஞர். அந்தக் கிராமத்தின் ஊராட்சி மன்றத் தேர்தலில் யாரையும் போட்டியிட விடாமல் தந்திரமாகத் தன்னையே அன்னபோஸ்ட்டாக தேர்ந்தெடுக்கச் செய்து 30 வருடங்களாகத் தலைவர் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறார் பனீந்திர பூபதி (ஜெகபதிபாபு). மேலும் கிராமக் கூட்டுறவு சங்கக் கடன் என்ற போர்வையிலும் கந்துவட்டி கொடுத்தும் விவசாயிகளை மறைமுகமாக உறிஞ்சிக்கொண்டிருக்கிறார். இதை அறிந்துகொள்ளும் குமார் பாபு, கிராமவாசிகள் கடனிலிருந்து விடுபட உண்மையை உணர்த்தி அவர்களைப் பஞ்சாயத்து தலைவருக்கு எதிராகத் திருப்புகிறார். இதற்கிடையில் சிட்டிபாபு தன் காதலி மகாலட்சுமிக்கு கூட்டுறவுக் கடன் வாங்கித் தர முயலும் விவகாரத்தில் வில்லனின் ஆட்களுடன் ஏற்படும் உரசல் மோதலாகி சிறைக்குச் செல்கிறார்.
தம்பி சிறைக்குச் செல்ல காரணமாக இருந்த ஜெகபதிக்கு எதிராக பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் குமார் பாபு, பிராகாஷ்ராஜ் உதவியுடன் வெல்கிறார். ஆனால் குமார் பாபு கொல்லப்படுகிறார். சகோதரன் சாவுக்குக் காரணமான வில்லனை சிட்டிமாபு எப்படி பழிவாங்குகிறார் என்பதுவே கதை.
பாத்திரங்கள்
- ராம் சரண் (சிட்டிபாபு)
- சமந்தா ருத் பிரபு (ரமலட்சுமி)
- பேபி அண்ணி (சிட்டிபாபுவின் தங்கை)
- ஜெகபதி பாபு (ரங்கஸ்தலம் ஊராட்சித் தலைவரான பனீந்திர பூபதி)
- ஆதி (சிட்டிபாபுவின் அண்ணன், குமார் பாபு)
- அனசுயா பரத்வாஜ் (ரங்கம்மா)
- பிரகாஷ் ராஜ் (தக்ஷின் மூர்த்தி, உள்ளூர் ச.ம.உ)
- மகேஷ் அச்சந்தா (சிட்டிபாபுவின் நெருங்கிய உதவியாளர்)
- நரேஷ் (சிட்டிபாபுவின் தந்தை, கோடீஸவர ராவ்)
- ரோகினா (சிட்டிபாபுவின் தாய்)
- பிரம்மாஜி (பிடிஓ தேர்தல் குழு)
- பூஜிதா பொன்னதா (குமார் பாபுமீது காதல் கொண்ட பத்மா)
- ராஜேஷ் திவாகர் (கூட்டுறவு சங்கச் செயலாளர்)
- கீதுப் ஸ்ரீனு (ஒரு விவசாயி)
- சீஷு (விவசாயி)
- பூஜா ஹெக்டே (கௌரவ வேடம்)
- ராஜீவ் கனகாலா (ரங்கமாவின் கணவராக கௌரவ வேடம்)
- பத்மஜா (தக்ஷிமா மூர்த்தியின் மனைவி)
மேற்கோள்கள்
- ↑ http://andhraboxoffice.com/info.aspx?id=4210&cid=6&fid=5860
- ↑ "Chiranjeevi launches Ram Charan-Sukumar's 'RC11'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/chiranjeevilaunches-ram-charan-sukumars-rc11/articleshow/56871543.cms. பார்த்த நாள்: 1 May 2017.