நாகலிங்கம் (திரைப்படம்)

நாகலிங்கம் என்பது 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பாபு கணேஷ் திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார். அத்துடன் இப்படத்தில் நடித்தும், இசைத்தும், நடன ஆசிரியராகவும் பணியாற்றினார். இத்திரைப்படத்தில் ரவளி, நீனா மற்றும் பப்லு பிரித்திவிராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் 23 ஜூன், 2000 இல் வெளிவந்தது.

நாகலிங்கம்
இயக்கம்பாபு கணேஷ்[1]
தயாரிப்புமரகதமணி
கதைபாபு கணேஷ்
இசைபாபு கணேஷ்
நடிப்புபாபு கணேஷ்
ரவளி
நீனா
பப்லு பிரித்திவிராஜ்
ஒளிப்பதிவுசி. ஹச். ராஜ்குமார்
படத்தொகுப்புபாபு கணேஷ்
கலையகம்பாலவிக்னேஷ் கிரியேசன்ஸ்
வெளியீடு23 சூன் 2000 (2000-06-23)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாகலிங்கம் ஒரு பக்திப் படமாகும். இந்த திரைப்படம் வெளியிடுவதற்கு முன்னர் பத்திரிகைகளுக்கு அளிக்கப்பட்ட அறிக்கைக்காக புகழ்பெற்றது. திரைப்படத்தின் காட்சிகளுக்கு ஏற்ற வாசனை திரையரங்குகளில் வெளியாகும் என்றும், இவ்வாறு வெளியிடப்படும் முதல் தமிழ்ப் படம் இது என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்த படம் 2000 ஜூனில் மோசமான விமர்சனங்களுடன் வெளியிடப்பட்டு, வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[2]

நடிகர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நாகலிங்கம்_(திரைப்படம்)&oldid=34625" இருந்து மீள்விக்கப்பட்டது