துரிஞ்சிகுப்பம் ஊராட்சி
துரிஞ்சிகுப்பம்
THURINJIKUPPAM | |||
— ஊராட்சி — | |||
அமைவிடம் | 12°36′32″N 79°07′21″E / 12.6087837°N 79.1225444°ECoordinates: 12°36′32″N 79°07′21″E / 12.6087837°N 79.1225444°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திருவண்ணாமலை | ||
ஆளுநர் | [1] | ||
முதலமைச்சர் | [2] | ||
மாவட்ட ஆட்சியர் | டி. பாஸ்கர பாண்டியன், இ. ஆ. ப [3] | ||
ஊராட்சி மன்றத் தலைவர் | திருமதி.ஆர்த்திபாஸ்கரன் | ||
மக்களவைத் தொகுதி | ஆரணி | ||
மக்களவை உறுப்பினர் | |||
சட்டமன்றத் தொகுதி | போளூர்
- | ||
சட்டமன்ற உறுப்பினர் |
கிருஷ்ணமூர்த்தி (அதிமுக) | ||
மக்கள் தொகை • அடர்த்தி |
2,993 • 2,993/km2 (7,752/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
7.2 சதுர கிலோமீட்டர்கள் (2.8 sq mi) • 156 மீட்டர்கள் (512 அடி) | ||
குறியீடுகள்
|
துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி (Thurinjikuppam Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளுர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, போளூர் சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது [[1]]. இவற்றில் இருந்து 9 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.[6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2993 ஆகும். இவர்களில் பெண்கள் 1343 பேரும் ஆண்கள் 1404 பேரும் உள்ளனர். 2993 மக்கள்தொகை கொண்ட துரிஞ்சிகுப்பம் கிராமம், போளூர் வட்டம் மாவட்டத்தின் 36 வது அதிக மக்கள் தொகை கொண்ட கிராமமாகும், இது இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம் தின் போளூர் துணை மாவட்டத்தில் அமைந்துள்ளது. துரிஞ்சிகுப்பம் கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பளவு 7.2 கிமீ ஆகும், இது துணை மாவட்டத்தின் பரப்பளவில் 26 வது பெரிய கிராமமாகும். கிராமத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிமீ 2 க்கு 417 நபர்கள்.
கிராமத்தின் அருகிலுள்ள நகரம் போளூர்மற்றும் ஆரணி, துரிஞ்சிகுப்பம் கிராமத்திலிருந்து போளூருக்கும் தூரம் 14 கி.மீ, ஆரணிக்கும் 22 கி.மீ தொலைவிலும் மற்றும் கலசப்பாக்கத்திற்கு 26 கிமீ தொலைவிலும், மற்றும் கண்ணமங்கலத்திற்கு 22 கிமீ தொலைவிலும் உள்ளது. துரிஞ்சிகுப்பம் கிராமத்தின் அஞ்சல் குறியீடு 606907 ஆகும். இந்த கிராமம் துரிஞ்சிகுப்பம் பஞ்சாயத்தின் கீழ் வருகிறது. கிராமத்தின் மாவட்ட தலைமையகம் 44 கி.மீ தூரத்தில் உள்ள திருவண்ணாமலை ஆகும்.
அடிப்படை வசதிகள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
அடிப்படை வசதிகள் | எண்ணிக்கை |
---|---|
குடிநீர் இணைப்புகள் | 287 |
சிறு மின்விசைக் குழாய்கள் | 5 |
கைக்குழாய்கள் | 24 |
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் | 4 |
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் | |
உள்ளாட்சிக் கட்டடங்கள் | 17 |
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் | 5 |
ஊரணிகள் அல்லது குளங்கள் | 10 |
விளையாட்டு மையங்கள் | 1 |
சந்தைகள் | |
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் | 11 |
ஊராட்சிச் சாலைகள் | 7 |
பேருந்து நிலையங்கள் | |
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் | 3 |
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:
- சித்தேரி
- பெரியேரி
- கம்மனந்தல்
- வெள்ளைகவுண்டன்கொட்டாய்
- விளக்கனந்தல்
- துரிஞ்சிகுப்பம்
அமைவிடம்
இக்கிராமமானது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள, போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இதன் கிழக்கே ஆரணி 22 கி.மீ தொலைவிலும், வடக்கே வேலூர் 42 கி.மீ தொலைவிலும் மற்றும் கண்ணமங்கலம் 22 கி.மீ தொலைவிலும் , தெற்கே போளூர் 15 கி.மீ தொலைவிலும் மற்றும் மாவட்ட தலைமையிடமான திருவண்ணாமலை 54 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை 172 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, கிழக்கே கேளூர் ஊராட்சியும், மற்றும் விளாங்குப்பம் ஊராட்சியும்,தெற்கே ஆத்துவாம்பாடி ஊராட்சியும், மேற்கு மற்றும் வடக்கே ஜவ்வாது மலை தொடர்களாலும் இந்த துரிஞ்சிகுப்பம் ஊராட்சியின் எல்லைகளாக அமைந்துள்ளது.
போக்குவரத்து
பேருந்து மற்றும் சாலை போக்குவரத்து
- இங்கிருந்து கேளூர், வடமாதிமங்கலம் வழியாக ஆரணி, சென்னை வரை சாலை வசதிகள் உள்ளது.
- கட்டிப்பூண்டி,குன்னத்தூர்,போளூர் வழியாக திருவண்ணாமலை வரை சாலை வசதி உள்ளது.
- அதுபோல விளாங்குப்பம், சந்தவாசல் வழியாக கண்ணமங்கலம் மற்றும் வேலூருக்கும் சாலை வசதிகள் உள்ளது.
- ஆரணியிலிருந்து (தடம் எண்: 6A LSS), கேளூர்,வடமாதிமங்கலம் ரயில் நிலையம், களம்பூர் வழியாக ஒரு நகரப்பேருந்து சேவைகள் உள்ளது.
- அவலூர்பேட்டையிலிருந்து தேவிகாபுரம், போளூர்,குன்னத்தூர், கட்டிப்பூண்டி வழியாக ஒரு நகர பேருந்தும்(தடம் எண்: P2 LSS) குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து சேவைகள் உள்ளது
- இங்கிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் கூட்டு சாலை கேளூர் சந்தைமேடு எனுமிடத்தில் அமைந்துள்ளது. இந்த கூட்டு சாலைக்கு செல்ல 24 மணி நேரமும் ஆட்டோ வசதியும், குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து வசதிகளும் உள்ளன. NH 234 உடன் இந்த கூட்டு சாலை இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை சித்தூர் முதல் கடலூர் வரை (திருவண்ணாமலை - போளூர்- ஆரணி- வேலூர் சாலை) செல்லும் சாலை ஆகும்.
இரயில் போக்குவரத்து
இக்கிராமத்திலிருந்து 8 கி.மீ தொலைவில், ஆரணி சாலையில், வடமாதிமங்கலம் என்னும் இடத்தில் இரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அந்த இரயில் நிலையத்திலிருந்து வேலூர், திருப்பதி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி, திருச்சி போன்ற இடங்களுக்கு ரயில் சேவை உள்ளது.
பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள்
இந்த ஊராட்சியில் மொத்தம் 4 பள்ளிக்கூடங்கள் மற்றும் 4 அங்கன்வாடி மையங்கள் உள்ளன.
- அரசினர் தொடக்கப்பள்ளி, சித்தேரி
- அரசினர் தொடக்கப்பள்ளி, கம்மனந்தல்
- அரசினர் தொடக்கப்பள்ளி, துரிஞ்சிகுப்பம்
- அரசினர் உயர்நிலைப்பள்ளி துரிஞ்சிகுப்பம்
கோவில்கள்
- இங்கு மிக பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி அம்மன் கோயில் (ஓம் சக்தி அம்மன் கோயில்) ஒன்று உள்ளது. இந்த கோயிலில் வருடம் தோறும் ஆடி மாதம் ஆடி பெருக்கு தினத்தில் காலையில் 108 பால் குடம் எடுத்து ஊர்வலமாக சுற்றி வந்து திரளான பக்தர்கள் அம்மனுக்கு பாலபிசேகம் செய்வார்கள்.
- தண்டு மாரியம்மன் கோயில்
- தண்டாயுதபாணி கோவில்
- ராதா ருக்மணி கோயில்
- மாரியம்மன் கோயில்
- கொழப்பலூர் மாரியம்மன் கோயில்
- பாஞ்சாலி அம்மன் கோயில்
- வினாயகர் கோயில்,துரிஞ்சிகுப்பம்
9. மூர்வள்ளியம்மன் கோயில்
10. பெரியாண்டவர் கோயில்
11. காளியம்மன் கோவில்
12. குட்டக்கரையான் மற்றும் படவேட்டம்மன் கோயில்
13. முனீஸ்வரன் கோயில்
14. முண்டக கன்னியம்மன் கோயில்
மலைகள்
இக்கிராமமானது மூன்று புறமும் சூழப்பட்ட ஜவ்வாது மலைகளின் நடுவே அமைந்துள்ளது.[சான்று தேவை]
சுற்றுலா தலங்கள் மற்றும் சிறப்புகள்
- ஆதிபராசக்தி கோயில்
- ஜவ்வாது மலைத்தொடர்
- குதிபாறை நீர்வீழ்ச்சி
- தென்மேற்கு மலை உச்சியில் உள்ள கோட்டை
- பெரியேரி ஏரி
சான்றுகள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "போளுர் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.