கிருஷ்ணா கிருஷ்ணா

கிருஷ்ணா கிருஷ்ணா (Krishna Krishna) ஒரு 2001 தமிழ் நகைச்சுவைத் திரைப்படம். இதை இயக்கியவர் எஸ். வி. சேகர். இதில் எஸ். வி. சேகர் மற்றும் சுகன்யா முக்கிய கதாபாத்திரத்திலும், வெண்ணிற ஆடை மூர்த்தி, சிறீமன், சின்னி ஜெயந்த், தியாகு, ரமேஷ் கண்ணா, மனோரமா மற்றும் கோவை சரளா துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதற்கு இசை அமைத்தவர் எஸ். ஏ. ராஜ்குமார். இது சூன் 8, 2001இல் வெளியிடப்பட்டது. இப் படத்தின் கதை எஸ். வி. சேகரின் "அதிர்ஷ்டக்காரன்" மேடை நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டது.[1][2]

கிருஷ்ணா கிருஷ்ணா
இயக்கம்எஸ். வி. சேகர்
தயாரிப்புமீடியா டிரீம்ஸ் லிமிடெட்.
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுகே. எஸ். செல்வராஜ்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்மீடியா டிரீம்ஸ் லிமிடெட்
வெளியீடுசூன் 8, 2001 (2001-06-08)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

இளைஞன் கோபாலகிருஷ்ணன் (எஸ். வி. சேகர்), விரைவில் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். ஆனால் அவனது தாய் 'புல்லட்' புஷ்பா (மனோரமா) தனக்கு பணக்கார மருமகள் தான் வரவேண்டும் என்று திருமணத்திற்காக வந்த வரன்களை நிராகரிக்கிறாள். இதற்கிடையில் பாமா (சுகன்யா) தன் திருமணத்திற்காக தந்தை தட்சிணாமூர்த்தி (வெண்ணிற ஆடை மூர்த்தி) கொண்டுவரும் பணக்கார வரன்களை வெறுக்கிறாள். ஒரு நாள், பாமா, கோபாலகிருஷ்ணனை பேருந்து நிறுத்தத்தில் சந்திக்கிறாள். முதல் பார்வையிலேயே காதல் வயப்படுகிறாள். முடிவில், இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். மேலும், பெற்றோருக்குத் தெரியாமல் காவல் நிலையத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்குப் பின்னர், 'புல்லட்' புஷ்பாவுக்கும், பாமாவிற்கும் அடிக்கடி சண்டை வருகிறது. பாமாவிற்கு 'பொய்' சொன்னால் பிடிப்பதில்லை. ஒரே நபர் நான்கு முறைக்கு மேல் அவளிடம் பொய் சொன்னால், பாமா அந்த நபரை மதிப்பதில்லை. விரைவில், அப்பாவியான கோபாலகிருஷ்ணன் கெட்ட பழக்கங்களைக் கொண்டுள்ளான் என பாமா சந்தேகிக்கிறாள். அதனால் அவனை விவாகரத்து செய்ய வேண்டும் என முடிவெடுக்கிறாள். பின்னர் நடக்கும் காட்சிகள் கதையின் முடிவாக அமைகிறது.

நடிப்பு

பாடல்கள்

இப் படத்திற்கு இசை அமைத்தவர் இசை அமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார். இந்த படத்தின் 5 பாடல்களை பிறைசூடன், காளிதாசன், கீர்த்தையா, கோவி கோவன் மற்றும் இயக்குநர் எஸ். வி. சேகர் ஆகியோர் எழுதினர்.[3]

எண் பாடல் பாடியவர்கள் காலம்
1 'ஆண்டவன் நமக்கு' ஹரிஷ் ராகவேந்திரா, அனுராதா சேகர் 4:54
2 'மூடு வந்தாச்சு' அனுராதா ஸ்ரீராம், கிருஷ்ணராஜ் 4:34
3 'நான் ஓரக்கண்ணால்' அனுராதா ஸ்ரீராம், எஸ். வி. சேகர் 3:32
4 'சொல்லியடி சொல்லியடி' மனோ, அனுராதா சேகர் 4:06
5 'தாலி வெச்சு' மனோ, சுவர்ணலதா (பின்னணிப் பாடகி), ஜெயஸ்ரீ, சுகன்யா 4:01

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கிருஷ்ணா_கிருஷ்ணா&oldid=32311" இருந்து மீள்விக்கப்பட்டது