கல்யாணிக்கு கல்யாணம்
கல்யாணிக்குக் கல்யாணம் | |
---|---|
இயக்கம் | ஏ. எஸ். ஏ. சாமி |
தயாரிப்பு | ஏ. எம். சோமசுந்தரம் மனோகர் பிக்சர்ஸ் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | எஸ். எஸ். ஆர் பிரேம்நசீர் பாலைய்யா வி. கே. ராமசாமி வி. ஆர். ராஜகோபால் எம். என். ராஜம் மைனாவதி ஜி. சகுந்தலா ராஹினி |
வெளியீடு | ஏப்ரல் 23, 1959[1] |
ஓட்டம் | . |
நீளம் | 16858 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கல்யாணிக்குக் கல்யாணம், 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், பிரேம்நசீர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
கதை
படிப்பறிவில்லாத கல்யாணி தனது தாயார் மற்றும், இரு சகோதரர்களுடன் கிராமத்தில் வசித்து வருகிறாள்.அவளது மாமன் குமரேசன் பட்டப்படிப்பு படிக்கும் தனது மகன் சதாசிவத்திற்கு திருமணம் செய்து தர ஒப்புக்கொள்கிறார். படிப்பறிவில்லாத கல்யாணி தனக்கு வேண்டாம் என முதலில் மறுத்த சதாசிவம் பின்னர் அவளை நேரில் கண்டு சம்மதிக்கிறான். குமரேசன் இத்திருமணத்திற்காக வரதட்சணை கேட்கிறார். முன்னதாக கல்யாணியின் தந்தை தான் இறப்பதற்கு முன்னர் உள்ளூர் பண்ணையாரிடம் தனது மகளின் திருமணத்திற்காக சிறுது பணம் கொடுத்து வைத்திருந்தார். பண்ணையார் கல்யாணியை தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார். கல்யாணியின் சகோதரன் சுந்தரம் பண்ணையாரிடம் உள்ள தொகையை கேட்க பண்ணையார் அவரை ஏமாற்றுகிறார். பணமில்லாமல் வீடு திரும்ப மனமிலாத சுந்தரம் பணம் சம்பாதிக்க சென்னை செல்கிறார். அங்கே அவரது சுசீலா என்ற பணக்காரப் பெண் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். இதற்கிடையில் கல்யாணியின் தாயார் தனது வீட்டை அதே பண்ணையாரிடம் அடகு வைத்து அதில் கல்யாணியின் திருமணத்தை நடத்துகிறார்.
அந்த வீட்டில் கல்யாணிக்கு ஒரு சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுகிறது. ஒரு தீ விபத்தில் அவளது கண்பார்வை பறிபோகிறது. இதை கேட்ட அவளது தாயார் அதிர்ச்சியில் இறந்து போகிறார், அவளது கணவன் அவளை விட்டு மேற்படிப்பிற்காக வெளியூர் சென்று விடுகின்றான். தனது அண்ணன் சுந்தரமும் அவளை கைவிட்டுவிடுகிறார். இதற்கு பிறகு கல்யாணிக்கு என்ன நடக்கிறது என்பது படத்தின் மீதமுள்ள கதை உருவாக்குகிறது.[2]
பாடல்கள்
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கு. மா. பாலசுப்பிரமணியம், தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் இயற்றினார்கள். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், வி. ஆர். ராஜகோபாலன், எம். எல். வசந்தகுமாரி, பி. லீலா, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. ரத்னமாலா, கே. ஜமுனாராணி, பி. பி. ஸ்ரீநிவாஸ், பி. சுசீலா, கமலா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[3]
நடிகர்கள் & படக்குழு
பிலிம் நியூஸ் ஆனந்தன் என்பாரது தகவல் தொகுப்பிலிருந்தும், பாட்டுப் புத்தகத்திலிருந்தும் பெறப்பட்டது.[1][2]
- நடிப்பு
- எஸ். எஸ். ராஜேந்திரன் - சதாசிவம்
- மைனாவதி - கல்யாணி
- பிரேம் நசீர் - சுந்தரம்
- எம். என். ராஜம் - சுசீலா
- கே. ஏ. தங்கவேலு - ராமச்சந்திரன்
- டி. எஸ். பாலையா - குமரேசன்
- வி. கே. ராமசாமி - பண்ணையார்
- ஜி. சகுந்தலா - கலைவாணி
- ராகினி - பரதம் பட்டம்மாள்
- வி. ஆர். ராஜகோபால் - ஜால்ரா" ஜம்புலிங்கம்
- எம். ஆர். சுவாமிநாதன் - வாகன ஓட்டுனர்
- மாஸ்டர் பாபுஜி - மணி
- ஏ. எம். மருதப்பா - தர்மலிங்கம் பிள்ளை
- கே. மாலதி - பாரவதி அம்மாள்
- லஷ்மி பிரபா - அன்னபூரணி
- எஸ். என். லட்சுமி - பாப்பம்மாள்
- படக்குழு
- தயாரிப்பு: எம். சோமசுந்தரம்
- இயக்குனர்: ஏ. எஸ். ஏ. சாமி
- திரைக்கதை & வசனம்: அரு. ராமநாதன்
- ஒளிப்பதிவு: பி. ராமசாமி
- படத்தொகுப்பு: ஏ. தங்கராஜன்
- கலை : டி. வி. எஸ். சர்மா
- நடனம்: பி. எஸ். கோபாலகிருஷ்ணன்
- புகைப்படம்: கே. விநாயகம்
- ஒலிப்பதிவு(பாடல்கள்): வி. ஸ்ரீனிவாசராகவன்
- ஒலிப்பதிவு(வசனங்கள்): வி. சி. சேகர்
- படப்பிடிப்பு தளம்: நெப்டியூன்
எண். | பாடல் | பாடகர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு |
---|---|---|---|---|
1 | தை பொறந்தா வழி பொறக்கும் | டி. எம். சௌந்தரராஜன், வி. ஆர். ராஜகோபாலன்,பி. லீலா, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. ரத்னமாலா, கே. ஜமுனாராணி, கமலா & குழுவினர் | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 03:20 |
2 | ஆனந்தம் இன்று ஆரம்பம் | எம். எல். வசந்தகுமாரி & பி. லீலா | 04:54 | |
3 | குட்டுகளை சொல்லணுமா | டி. எம். சௌந்தரராஜன், பி. லீலா, கே. ஜமுனாராணி & கமலா | ||
4 | வருஷத்திலே ஒரு நாளு தீபாவளி | டி. எம். சௌந்தரராஜன்,ஏ. பி. கோமளா & பி. லீலா | 03:25 | |
5 | உன்னை நினைக்கையிலே | டி. எம். சௌந்தரராஜன் | 02:28 | |
6 | இந்த மாநிலத்தைப் பாராய் மகனே | பி. பி. ஸ்ரீநிவாஸ் & பி. சுசீலா | 02:52 | |
7 | நீ அஞ்சி நடுங்காதேடோய் | ஏ. ஜி. ரத்னமாலா & ஏ. பி. கோமளா | கு. மா. பாலசுப்பிரமணியம் | |
8 | மன்னாதி மன்னரெல்லாம் | சீர்காழி கோவிந்தராஜன் & வி. ஆர். ராஜகோபாலன் | தஞ்சை ராமையாதாஸ் |
உசாத்துணை
- ↑ 1.0 1.1 சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-04-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170420005400/http://www.lakshmansruthi.com/cineprofiles/1959-cinedetails15.asp. பார்த்த நாள்: 2017-04-20.
- ↑ 2.0 2.1 Kalyanikku Kalyanam Song Book. Ideal Printers, 97, Broadway, Chennai-1.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 165 — 166.