இலங்கை நாடு
- இது பழங்கால நாட்டைப் பற்றியது. தற்கால நாட்டைப் பற்றி அறிய இலங்கை என்ற கட்டுரையை நோக்குக.
இலங்கை நாடு (Lanka kingdom) /ˈləŋkɑː/ வங்காள விரிகுடாவில், கடலால் சூழப்பட்ட தீவு நாடாகும். இராமாயணக் காவியத்தின் படி, பண்டைய இலங்கைத் தீவின் திரிகூடமலையில் பெரும் கோட்டைக்களைக் கட்டிக் கொண்டு, இராவணன் தன் தம்பியர்களான கும்பகர்ணன், வீடணன் மற்றும் தன் மூத்த மகன் இந்திரஜித் ஆகியவர்களுடன் இலங்கையை ஆண்டான். சீதையை கடத்திச் சென்ற இராவணனின் கோட்டைகளை அனுமன் எரித்தான். இராமன், இலங்கைக்கு சேது பாலம் அமைத்து, இராவணன் முதலியவர்களை வென்று சீதையை மீட்டு, வீடணனுக்கு இலங்கையின் மன்னராக பட்டம் கட்டினார்.[1][2][3]
மகாபாரதக் குறிப்புகள்
மகாபாரத காவியத்தின் சபா பருவத்தில், தருமரின் இராசசூய வேள்வியின் பொருட்டு, பாண்டவர்களில் இளையவனான சகாதேவன், பரத கண்டத்தின் தெற்குப் பகுதி நாடுகளின் மீது படையெடுத்துச் செல்லும் போது இலங்கை நாட்டிற்கும் சென்றதாக கூறப்பட்டுள்ளது. மகாபாரத வன பருவத்தின் போது, தருமருக்கு இராமாயண வரலாறுகள் கூறப்படுகிறது. அர்ஜீனன் அல்லி ராணி என்ற இலங்கை அரசியை திருமணம் செய்ததாக மரபு வழிக் கதைகள் கூறுகின்றன.
இலங்கை நாட்டின் ஆட்சியாளர்கள்
இராமாயண காவியத்தின்படி, தேவ சிற்பி விசுவகர்மாவால், தேவர்களுக்காக நிறுவப்பட்ட இலங்கையை, அசுர சகோதரர்களான மால்யவான், சுமாலி மற்றும் மாலி கைப்பற்றி ஆண்டனர். பின்னர் தேவ லோகத்தைக் கைப்பற்றச் செல்லும் போது திருமாலால் விரட்டப்பட்டனர். பின்னர் குபேரன் இலங்கையை கைப்பற்றி யட்சர்களின் இராச்சியத்தை நிறுவினார். குபேரனின் ஒன்று விட்ட தம்பியான இராவணன், குபேரனை வென்று இலங்கையை கைப்பற்றி இராக்கதர்களின் நாட்டை ஆண்டார். இராவணின் மறைவிற்குப் பின்னர் இலங்கையை வீடணன் ஆண்டார்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Mahabharata of Krishna Dwaipayana Vyasa, translated from Sanskrit into English by Kisari Mohan Ganguli
- Sri Lanka Reference – Country Information, History and Maps பரணிடப்பட்டது 2004-10-11 at the வந்தவழி இயந்திரம்
- Etymology of Lanka from Tamilnet