வி. எம். ஏழுமலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வி. எம். ஏழுமலை (V. M. Ezhumalai) ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். 1939 ஆம் ஆண்டிலிருந்து 1960 வரை பல படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்துள்ளார். தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து வந்தவர் பின்னர் திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானார். இவரது உடல் மொழி, வாய் மொழி இரண்டிலும் நகைச்சுவை இருக்கும். தனக்கென ஒரு தனிப்பாணி வகுத்து அதன் படி அங்க சேஷ்டைகளின் மூலம் பார்ப்பவர்களைக் குலுங்கக் குலுங்க சிரிக்க வைப்பார்.

திரையுலகுக்கு வந்த சிறிது காலம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் நடிகராகப் பணியாற்றினார். அப்போது இவருடன் ஏனைய நகைச்சுவை நடிகர்களான காளி என். ரத்தினம், ஏ. கருணாநிதி போன்றோரும் அந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

திகம்பர சாமியார் திரைப்படத்தில்
வி. எம். ஏழுமலை

நடித்த திரைப்படங்கள்

வரிசை
எண்
திரைப்படம் கதாபாத்திரம் வெளியான நாள்
1 வள்ளாள மகாராஜா 1937
2 சிரிக்காதே 23.12.1939
3 ராஜயோகம் 21.09.1940
4 தயாளன் 20.12.1941
5 நாடகமேடை 19.04.1942
6 திவான் பகதூர் 28.10.1943
7 பர்மா ராணி 1945
8 சண்பகவல்லி 20.02.1948
9 காமவல்லி 20.03.1948
10 வாழ்க்கை அசம்பாவிதம் 22.12.1949
11 திகம்பர சாமியார் சுந்தரம் பிள்ளை 31.08.1950
12 தேவகி வைத்தியர் 21.06.1951
13 ஜமீன்தார் 30.08.1952
14 மதன மோகினி 14.03.1953
15 பொன்னி சொக்கன் 26.06.1953
16 நால்வர் 05.11.1953
17 நல்லகாலம் 19.05.1954
18 மாங்கல்யம் 22.05.1954
19 மலைக்கள்ளன் சடையன் 22.07.1954
20 கூண்டுக்கிளி 26.08.1954
21 மிஸ்ஸியம்மா பள்ளிக்கூட வாத்தியார், வைத்தியர் 14.01.1955
22 பெண்ணரசி 07.04.1955
23 குணசுந்தரி 02.12.1955
24 நான் பெற்ற செல்வம் பொய்யாமொழி 14.01.1956
25 மக்களைப் பெற்ற மகராசி 22.02.1957
26 மாயாபஜார் சின்னமாயா 27.03.1957
27 நல்ல இடத்து சம்பந்தம் 14.02.1958
28 கடன் வாங்கி கல்யாணம் 17.09.1958
29 அதிசய திருடன் 12.12.1958
30 கலைவாணன் மாரி 09.04.1959
31 எல்லோரும் வாழவேண்டும் 14.04.1962

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=வி._எம்._ஏழுமலை&oldid=23781" இருந்து மீள்விக்கப்பட்டது