வடலியடைப்பு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வடலியடைப்பு[1], இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊர்.[2] வல்லை-தெல்லிப்பழை-அராலி வீதியில் சித்தங்கேணிக்கும் பண்டத்தரிப்புக்கும் இடையில் அமைந்துள்ள இந்த ஊர் பண்டத்தரிப்புச் சந்தியிலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாண நகரில் இருந்து இவ்வூரின் தொலைவு ஏறத்தாழ 15 கிலோமீட்டர். வடலியடைப்புக்கு வடக்கில் பண்டத்தரிப்பு, சில்லாலை ஆகிய ஊர்களும், தெற்கில் சித்தங்கேணி, பண்ணாகம், சங்கானை என்பனவும், மேற்கில் பனிப்புலமும், கிழக்கில் பிரான்பத்தையும் அமைந்துள்ளது.

நிறுவனங்கள்

இவ்வூரில், வடலியடைப்பு புதறானை சித்தி விநாயகர் கோயில், புற்றடி ஆதிசிவன் ஆலயம், வடலியடைப்பு பாரத்தனை ஐயனார் கோயில் என்னும் இந்துக்கோயில்கள் உள்ளன. வடலியடைப்பில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் சைவப்பிரகாச வித்தியாலயம் என்னும் பாடசலை ஒன்றும் உள்ளது.[3]

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=வடலியடைப்பு&oldid=40080" இருந்து மீள்விக்கப்பட்டது