சித்தன்கேணி

தமிழர்விக்கியிலிருந்து
(சித்தங்கேணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வரைபடத்தை ஏற்றுகிறது....
சித்தன்கேணி
Chittankeni

நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்

சித்தன்கேணி, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர். இது, சித்தன்கேணி கிராம அலுவலர் பிரிவுக்குள் அடங்குகின்றது.[1] இவ்வூரின் கிழக்கே சங்கானையும், தெற்கில் வட்டுக்கோட்டையும், மேற்கில் பண்ணாகம், தொல்புரம் ஆகிய ஊர்களும் உள்ளன. யாழ்ப்பாணம்-மானிப்பாய்-காரைநகர் வீதியும், வல்லை-தெல்லிப்பழை-அராலி வீதியும் இவ்வூரில் ஒன்றையொன்று வெட்டிச் செல்கின்றன. இச்சந்தி சித்தன்கேணிச் சந்தி எனப்படுகிறது.

பெயர்க்காரணம்

இவ்விடத்தின் சித்தன்கேணி என்ற பெயருக்கு காரணம் என கூறப்படும் வாய்வழிக்கதை: ஒரு காலத்தில் இவ்விடத்தில் பிரபலமான சித்தர்கள் ஒன்று கூடி வழிபாடுகளை நடத்தினரெனவும் அவர்கள் இறைவனை வழிபடும் நோக்குடன் கேணி ஒன்றை அமைத்தாகவும் அதன் காரணத்தாலேயே இவ்வூருக்கு இப்பெயர் அமைந்தாகவும் கூறப்படுவதுண்டு. சித்தர்கள் அமைத்து வழிபட்டதாக கூறப்படும் அந்த பழமை வாய்ந்த கேணி தற்போதும் காணப்படுகின்றது. அக் கேணிக்கருகில் ஒரு வைரவராலயமும் அமைத்து அப் பிரதேச மக்கள் வழிபாடுகளை நடத்தி வருவதுடன் பூசாரி என அழைக்கப்படும் அந்தணர்களால் முக்கால பூசை வழிபாடுகளும் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

நிறுவனங்கள்

சித்தன்கேணியில் இரண்டு அரசாங்கப் பாடசாலைகள் உள்ளன. இவற்றுள் பிளவத்தை அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை வகுப்புக்கள் உள்ளன. ஶ்ரீ கணேச வித்தியாலயத்தில் மாணவர்கள் 13 ஆம் ஆண்டுவரை கற்கலாம்.

மேலும் இவ்வூரில் பிரபலமான ஆலயங்களும் காணப்படுகின்றன. சித்தன்கேணி ஸ்ரீ சிவசிதம்பரேஸ்வரர் ஆலயம் மற்றும் சித்தன்கேணி ஸ்ரீ மகாகணபதிப் பிள்ளையார் ஆலயம் என்பன இங்கு அமைந்துள்ள பிரபல ஆலயங்களுள் குறிப்பிடத்தக்கவை.

மேற்கோள்கள்

  1. Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 26.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=சித்தன்கேணி&oldid=360998" இலிருந்து மீள்விக்கப்பட்டது