தொல்புரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தொல்புரம்
தொல்புரம் is located in Northern Province
தொல்புரம்
தொல்புரம்
ஆள்கூறுகள்: 9°45′27.489″N 79°57′0.9786″E / 9.75763583°N 79.950271833°E / 9.75763583; 79.950271833
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிசெ பிரிவுவலிகாமம் மேற்கு

தொல்புரம் (Tholpuram), இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமம் மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடங்கியுள்ள ஒரு ஊர் ஆகும்.[1] இவ்வூர் தொல்புரம் கிழக்கு, தொல்புரம் மத்தி, தொல்புரம் மேற்கு என மூன்று பிரிவுகளாக உள்ளது. யாழ்ப்பாணம்-மானிப்பாய்-காரைநகர் வீதியில் சித்தன்கேணி, சுழிபுரம் ஆகிய ஊர்களுக்கு இடையே அமைந்துள்ள இவ்வூர் யாழ்ப்பாண நகரில் இருந்து ஏறத்தாழ 15.5 கிமீ தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு வடக்கில் சுழிபுரம், ஆகிய ஊர்களும், கிழக்கில் சித்தன்கேணி, வட்டுக்கோட்டை ஆகிய ஊர்களும், தெற்கில் மூளாயும், மேற்கில் சுழிபுரமும் உள்ளன.

பண்டை நாளிலே தொல்புரம் என்பது சுழிபுரம், மாதகல், திருவடிநிலை, பொன்னாலை, சங்கானை, வட்டுக்கோட்டை, பண்டத்தரிப்பு, சங்கரத்தை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பெரும் பகுதியாக இருந்தது.[2]

வரலாறு

தொல்புரத்தின் குறிச்சிப்பெயர்களாக வழக்கம்பரை, வீராவத்தை, சத்தியக்காடு, காளாவிக்காடு, பத்தானைக்கேணி, இந்திராயன் வயல், மன்னன் தோட்டம், நாகதோட்டம், சித்திராயன் குடியிருப்பு என்பன அமைந்துள்ளன.[2]

வழக்கு+அம் +பரை =வழக்கம்பரை வழக்காடிய மன்று இருந்தவிடம் வழக்கம்பரை எனப்பெயர் பெற்றது. போர் வீரர்கள் வாழ்ந்த இடம் வீராவத்தை என பெயர் பெற்றது. விசாரணை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டு சத்தியம் கேட்கப்பட்ட இடம் சத்தியக்காடு எனவும், காவற்படையினர் வாழ்ந்த பகுதி (காலாற்படை+காடு) காலாவிக்காடு எனவும் வழங்கலாயிற்று. இங்கு பாணாவெட்டிக்குளம் (பாணன்+வெட்டு+குளம்), பத்தானைக்கேணி (பத்து+யானை+கேணி) என்பனவும் இப்பகுதிக்கு வரலாற்றுப்பழமையைக் கூறுகின்றன. யாழ்பாடி முதன் முதலாக வெட்டுவித்த குளமே 'பாணன் குளம்' என்கிறார் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை.[2]

பாடசாலைகள்

  • தொல்புரம் அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை
  • தொல்புரம் விக்கினேஸ்வரா பாடசாலை

கோவில்கள்

  • தொல்புரம் கொட்டடியம்பதி ஆதி முத்துமாாி அம்மன் கோயில்
  • தொல்புரம் பத்தானைக்கேணியடி ஞான வைரவர் கோயில்
  • தொல்புரம் பூதராசி அம்மன் கோயில்
  • வழக்கம்பரை அம்மன் கோயில்
  • தொல்புரம் துரையன்வளவுப் பிள்ளையார் கோயில்
  • தொல்புரம் மடத்தடிப் பிள்ளையார் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்

மேற்கோள்கள்

  1. Statistical Handbook 2014, Jaffna Secretariat 2014 (PDF). p. 5.
  2. 2.0 2.1 2.2 கலாநிதி இ. பாலசுந்தரம். ஈழத்து இடப்பெயர்வு ஆய்வு (யாழ்ப்பாண மாவட்டம் ).
"https://tamilar.wiki/index.php?title=தொல்புரம்&oldid=40003" இருந்து மீள்விக்கப்பட்டது