டி. கே. ராமமூர்த்தி
டி. கே. இராமமூர்த்தி | |
---|---|
T. K. Ramamoorthy | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசாமி இராமமூர்த்தி |
பிறப்பு | 15 மே 1922 |
பிறப்பிடம் | திருச்சிராப்பள்ளி, சென்னை மாகாணம் |
இறப்பு | 17 ஏப்ரல் 2013 | (அகவை 90)
தொழில்(கள்) | இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | விசைப்பலகை இசைக்கருவி ஆர்மோனியம் வயலின் |
இசைத்துறையில் | 1950கள்-1970கள் |
டி. கே. இராமமூர்த்தி எனப் புகழ்பெற்ற திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசாமி இராமமூர்த்தி (Trichirappalli Krishnasamy Ramamoorthy, 15 மே 1922 - 17 ஏப்ரல் 2013) தென்னிந்திய தமிழ் இசையமைப்பாளரும் வயலின் கலைஞரும் ஆவார். இவரும் எம். எஸ். விஸ்வநாதனும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி என்ற இணையாக பல திரைப்படங்களுக்கு 1950/1960 காலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக 1966 இல் வெளிவந்த சாது மிரண்டால் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இசையமைத்த திரைப்படங்கள்
19 படங்களுக்கு தனியாக இசையமைத்துள்ளார்:
- சாது மிரண்டால்
- தேன் மழை
- மறக்க முடியுமா
- நான்
- மூன்றெழுத்து
- தங்கச் சுரங்கம்
- காதல் ஜோதி
- ஆலயம்
- சோப்பு சீப்பு கண்ணாடி
- சங்கமம்
- சக்தி லீலை
- அவளுக்கு ஆயிரம் கண்கள்
எம். எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து இசையமைத்தவை
எம். எஸ். விசுவநாதனுடன் இணைந்து சுமார் 700க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இறுதியாக விசுவநாதனுடன் இணைந்து பணியாற்றினார்.
விரிவான தரவுகளுக்கு -
மறைவு
இவர் மூச்சுத்திணறல் காரணமாக 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் நாள் காலமானார்.[1]
மேற்கோள்கள்
- ↑ "மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி காலமானார்...!!" இம் மூலத்தில் இருந்து 2013-05-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130514015438/http://tamil.yahoo.com/%E0%AE%AE-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%AE-030500080.html.