மைநாக மலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மைநாக மலை, இராமாயணக் காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மலைகளுள் ஒன்றாகும். முன்னர் மலைகள் வானத்தில் பறக்கும் ஆற்றல் கொண்டிருந்தன. இதனால் வானில் உலாவும் தேவர்கள், பூதகணங்களான, கிண்ணரர்கள், கிம்புருசர்கள், யட்ச-யட்சினிகள் மீது மோதி பலத்த சேதம் விளைவித்தன. இதனால் கோபமடைந்த தேவர்களின் தலைவன் இந்திரன், மலைகளைப் பறக்க இயலாதபடி, அவற்றின் இறக்கைகளை வஜ்ஜிராயுதம் கொண்டு வெட்டி விட்டார். ஆனால் மைநாக மலை மட்டும் வாயு பகவானின் அருளால், பெருங்காற்றில் அடித்துச் செல்லப்பட்டு கடலில் விழுந்து இறக்கைகளுடன் தப்பியது. [1]

வாயு பகவான் அம்சமாகப் பிறந்த அனுமான், இராம தூதுவனாக, சீதையைக் கண்டுபிடிக்க, கடலைக் கடந்து வானம் மீது பறந்து சென்று இலங்கைக்குச் செல்கையில், கடலில் இருந்த மைநாக மலை வானில் பறந்து நின்று, அனுமாரிடம், மலையில் சிறிது நேரம் தங்கி களைப்பாறிச் செல்லும் படி கேட்டுக் கொண்டது. மைநாகமலையின் விருந்தோம்பலை ஏற்றதற்கு அடையாளமாக மைநாகமலையைத் தொட்டு ஆசிர்வதித்து, அனுமார் தொடர்ந்து இலங்கை நோக்கிப் பறந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மைநாக_மலை&oldid=38504" இருந்து மீள்விக்கப்பட்டது