மு. ச. செல்லச்சாமி
எம். எஸ். செல்லச்சாமி M. S. Sellasamy | |
---|---|
தபால், தந்தி பிரதி அமைச்சர் | |
பதவியில் 2007[1]–2010 | |
இலங்கை நாடாளுமன்றம் for கொழும்பு மாவட்டம் | |
பதவியில் 1989–1994 | |
இலங்கை நாடாளுமன்றம் for தேசியப் பட்டியல் | |
பதவியில் 2000–2001 | |
பதவியில் 2004–2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நவம்பர் 12, 1926 |
இறப்பு | ஆகத்து 1, 2020 பம்பலப்பிட்டி, கொழும்பு | (அகவை 93)
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய தேசிய முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் |
வேலை | தொழிற்சங்கவாதி |
எம். எஸ். செல்லச்சாமி என அழைக்கப்படும் முத்து சங்கரலிங்கம் செல்லச்சாமி (Muthu Sangaralingam Sellasamy, நவம்பர் 12, 1926[2] - ஆகத்து 1, 2020)[3] இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இலங்கை அமைச்சரும் ஆவார்.
அரசியலில்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செளமியமூர்த்தி தொண்டமானின் தலைமையில் தன்னை தொழிற்சங்கத் துறையில் ஈடுபடுத்திக்கொண்டார். தொழிலாளர் காங்கிரசில் 35 ஆண்டு காலமாக பொதுக் காரியதரிசியாக சேவை புரிந்தார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளராக சேவல் சின்னத்தில் மத்திய கொழும்பில் முதன் முதலில் போட்டியிட்டு 26,964 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார்.[4]
பின்னர் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார தேர்தல் முறையில் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் 1981 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கொழும்பு மாவட்ட அபிவிருத்தி சபையில் போக்குவரத்து அமைச்சராக நியமனம் பெற்றார்[2].
1989ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 36,820 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.[5] அன்றைய அரசாங்கத்தில் சிறு கைத்தொழில்துறை அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்றார். இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது. செல்லச்சாமி இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தைத் தொடங்கினார்[2].
1994 பொதுத்தேர்தலில் சந்திரிக்கா குமாரதுங்கவின் பொது சன ஐக்கிய முன்னணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 15,000 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.[6] அதன் பின்னர் மீண்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இணைந்து அதன் பிரதித் தலைவர் ஆனார். அக்கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்[2].
தேர்தல் வரலாறு
தேர்தல் | தொகுதி | கட்சி | வாக்குகள் | முடிவு |
---|---|---|---|---|
1977 நாடாளுமன்றத் தேர்தல்[4] | கொழும்பு மத்தி | இதொகா | தெரிவாகவில்லை | |
1989 நாடாளுமன்றத் தேர்தல்[5] | கொழும்பு மத்தி | இதொகா | தெரிவு | |
2001 நாடாளுமன்றத் தேர்தல் | கொழும்பு | ஐதேமு | தெரிவாகவில்லை |
மறைவு
எம். எஸ். செல்லச்சாமி 2020 ஆகத்து 1 இல் தனது 93-ஆவது அகவையில் கொழும்பு, பம்பலப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.[3]
மேற்கோள்கள்
- ↑ "Improvements planned for postal sector" இம் மூலத்தில் இருந்து 2012-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121021093628/http://www.dailynews.lk/2007/02/06/news24.asp.
- ↑ 2.0 2.1 2.2 2.3 அகவை 87 இல் காலடி எடுத்து வைக்கும் செயல் வீரர் எம்.எஸ்.செல்லச்சாமி, தினகரன் வாரமஞ்சரி, நவம்பர் 11, 2012
- ↑ 3.0 3.1 "M. S. Sellasamy passes away". Sunday Observer (Colombo). 2-08-2020. http://www.sundayobserver.lk/2020/08/02/news/m-s-sellasamy-passes-away. பார்த்த நாள்: 2-08-2020.
- ↑ 4.0 4.1 "Result of Parliamentary General Election 1977". Department of Elections, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 2011-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110717002624/http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF.
- ↑ 5.0 5.1 "1989 Sri Lankan parliamentary election Results". Election Commission of Sri Lanka. 1989. https://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1989.pdf.
- ↑ "1994 Sri Lankan parliamentary election Results". Election Commission of Sri Lanka. 1994. https://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1994.pdf.
- 1926 பிறப்புகள்
- 2020 இறப்புகள்
- இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
- இலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதிகள்
- இலங்கை தொழிற்சங்கவாதிகள்
- இலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்