மு. க. தமிழரசு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மு. க. தமிழரசு
இயற்பெயர்/
அறியும் பெயர்
மு. க. தமிழரசு
பிறப்புபெயர் முத்துவேல் கருணாநிதி தமிழரசு & (மு. க. தமிழரசு)
பிறந்தஇடம் கோபாலபுரம், சென்னை
பணி தயாரிப்பாளர்
இலக்கிய இயக்கம் திமுக
பெற்றோர் கருணாநிதி தயாளு அம்மாள்
துணைவர் மோகனா
பிள்ளைகள் அருள்நிதி, பூங்குழலி

மு. க. தமிழரசு (English: M. K. Tamilarasu) என்பவர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாவது மகனாவார்.[1] தனது மோகனா மூவீஸ் நிறுவனத்தின் மூலம் திரைப்பட விநியோகமும், மனை வணிகமும் செய்து வருகிறார்.

குடும்பம்

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி-தயாளு அம்மாள் தம்பதியருக்கு நான்காவது மகனாக பிறந்தார்.[2]இவருடன் பிறந்தவர்கள் மு. க. அழகிரி மற்றும் மு. க. ஸ்டாலின் என இரண்டு மூத்த சகோதர்களும் மு.க.செல்வி என்ற மூத்த சகோதரியும் இவருக்குள்ளனர். மு. க. தமிழரசு அவர்களுக்கு மோகனா என்ற மனைவியும் அருள்நிதி என்ற மகனும், பூங்குழலி என்ற மகளும் உள்ளனர். இவரின் மருமகள் கீர்த்தனா மற்றும் மருமகன் விஸ்வநாதன் ஆவார்கள்.[3][4]

தயாரித்த திரைப்படங்கள்

தனது மோகனா மூவீஸ் மூலம் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள்.

ஆண்டு திரைப்படம் நடிகர்கள் குறிப்பு
2010 வம்சம் அருள்நிதி, சுனைனா பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)
2011 மௌன குரு அருள்நிதி, இனியா
2014 ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் அருள்நிதி, பிந்து மாதவி
2015 டிமாண்டி காலனி அருள்நிதி

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மு._க._தமிழரசு&oldid=27488" இருந்து மீள்விக்கப்பட்டது