மாறனலங்காரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மாறனலங்காரம் ஓர் அணியிலக்கண நூல். இஃது உரைதருநூல்களில் ஒன்று. இது திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய நம்மாழ்வாரைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். பாண்டி நாட்டுச் சிற்றரசர் வழிவந்தவர் நம்மாழ்வார். பேரரசர்களுடைய பெயரைச் சிற்றரசர்களும் சூட்டிக்கொள்ளும் அக்கால வழக்கத்துக்கு அமைய நம்மாழ்வாரும் பாண்டிய மன்னர்களைக் குறிக்கும் மாறன் என்ற பெயராலும் அறியப்பட்டவர். இதனால் இப் பெயரைத் தழுவி இந்நூலுக்கு மாறனலங்காரம் எனப் பெயரிடப்பட்டது[1].

அணியிலக்கணத்தைத் தனிநூலாகச் செய்த முதல் நூல் தண்டியலங்காரம். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த தண்டி என்பவர் வடமொழியில் இயற்றிய அலங்கார நூலைப் பின்பற்றித் தமிழ்நூல் தண்டியலங்காரம் 12-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. அதன் விரிவாக மாறன் அலங்காரம் எழுதப்பட்டது. இதில் மாறன் என்னும் சொல் நம்மாழ்வாரைக் குறிக்கும். [2]

அமைப்பு

இந்நூல் சிறப்புப் பாயிரம் தவிர்ந்த 326 பாடல்களைக் கொண்டது. இவை பொதுப் பாயிரப் பகுதியிலும்,

  1. பொதுவியல்,
  2. பொருளணியியல்
  3. சொல்லணியியல்,
  4. எச்சவியல்

எனும் நான்கு இயல்களுள் அடங்குகின்றன. இது 64 செய்யுள் அணிகள் பற்றிக் கூறுகின்றது.

மாறனலங்காரம் காட்டும் அணிகள்

மாறனலங்காரத்தில் 64 அணிகள் சொல்லப்படுகின்றன. எனினும் அதன் உட்பிரிவுகளைக் கணக்கிடும்போது அவை 323 அணிகளாக விரிகின்றன.

  • மாறனலங்காரம் கூறும் அணிகள் - அகரவரிசை
  1. அசங்கதி 2
  2. அதிகம் 1
  3. அதிசயம் 8
  4. அபநுதி 4
  5. அற்புதம் 2
  6. ஆசி 2
  7. ஆர்வமொழி 1
  8. இணை எதுகை 2
  9. இலேசம் 1
  10. இறைச்சிப் பொருள் 1
  11. உதாத்தம் 9
  12. உபாயம் 1
  13. உருவகம் 26
  14. உல்லேகம் 4
  15. உவமை 46
  16. உள்ளுறை 5
  1. உறுசுவை 1
  2. ஏகாவளி 1
  3. ஏது 24
  4. ஒட்டு 6
  5. ஒப்புமை 2
  6. காரண மாலை 1
  7. காரியமாலை 1
  8. காவியதிங்கம் 1
  9. சங்கரம் 1
  10. சங்கீரணம் 1
  11. சந்தயம் 3
  12. சமாயுதம் 1
  13. சமுச்சயம் 2
  14. சிலேடை 18
  15. சுவை 18
  16. தடுமாறுத்தி 1
  1. தற்குணம் 1
  2. தற்குறிப்பேற்றம் 2
  3. தற்பவம் 1
  4. தன்மை 12
  5. திட்டாந்தம் 1
  6. தீபகம் 18
  7. நிந்தாதுதி 1
  8. நிரனிறை 13
  9. நெடுமொழி 1
  10. பரிகரம் 4
  11. பரிசங்கை 2
  12. பரியாயம் 1
  13. பரிவர்த்தனை 1
  14. பாவிகம் 1
  15. பிரத்தியனீகம் 1
  16. பிரதீபம் 1
  1. பிறவணி 1
  2. பின்வருநிலை 3
  3. புகழ்வதின் இகழ்தல் 1
  4. புணர்நிலை 2
  5. பொருள் மொழி 1
  6. மாறுபடு புகழ்நிலை 1
  7. முன்னவிலக்கு 21
  8. வகைமுதலடுக்கு 1
  9. விசேடம் 6
  10. விதர்சன் 2
  11. விநோத்தி 1
  12. விபாவணை 4
  13. விரோதம் 7
  14. விற்பூட்டு 1
  15. வேற்றுப்பொருள் வைப்பு 8
  16. வேற்றுமை 5

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
  • இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.

குறிப்புகள்

  1. இளங்குமரன், 2009. பக். 343.
  2. மாறன், வகுணாபரணன், சடகோபன், நாவீறன் என்பன நம்மாழ்வாரைக் குறிக்கும் பெயர்கள்.

இவற்றையும் பார்க்கவும்

தமிழ் இலக்கணப் பட்டியல்

"https://tamilar.wiki/index.php?title=மாறனலங்காரம்&oldid=13366" இருந்து மீள்விக்கப்பட்டது