மலேசியத் தமிழ்த் திரைப்படத்துறை
மலேசியத் தமிழ்த் திரைப்படத்துறை | |
---|---|
கொலிசியம் திரையரங்கம் கோலாலம்பூர் | |
திரைகளின் எண்ணிக்கை | 639 (2011)[1] |
• தனிநபருக்கு | 2.4 per 100,000 (2011)[1] |
முதன்மை வழங்குநர்கள் | லோட்டஸ் ஐந்து ஸ்டார் சினிமாஸ் ஆஸ்ட்ரோ ஷா தயங்கன் உங்குல் எஸ்.டி.என் பி.டி.[2] |
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2009)[3] | |
புனைவு | 26 |
அசைவூட்டம் | 1 |
ஆவணப்படம் | - |
Number of admissions (2011)[4] | |
மொத்தம் | 59,500,000 |
தேசியத் திரைப்படங்கள் | 13,130,000 (22.1%) |
நிகர நுழைவு வருமானம் (2011)[4] | |
மொத்தம் | மலேசிய ரிங்கிட் 602 மில்லியன் |
தேசியத் திரைப்படங்கள் | மலேசிய ரிங்கிட் 125 மில்லியன் (20.7%) |
மலேசியத் தமிழ்த் திரைப்படத்துறை (Malaysian Tamil cinema) என்பது மலேசியா நாட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். இது மலேசியா நாட்டில் வளர்ந்து வரும் ஒரு திரைப்படத்துறை ஆகும். 2018 ஆம் ஆண்டு வெளியான 'வெடிகுண்டு பாசாங்கே' என்ற திரைப்படம் அதிக வசூல் செய்த மலேசிய தமிழ்த் திரைப்படம் ஆகும்.[5]
தமிழர் உலகெங்கும் பரவி வாழ்வதால் தங்களின் தாயகத்திற்கு வெளியிலிருந்தும் தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆதரவு வழங்குகின்றனர். இதனால் தாயகத்திற்கு வெளியிலான தமிழ்த்திரைத்துறை வளர்கிறது. குறிப்பாக, தமிழர் அதிகமாக வாழும் தெற்காசியாவில் தமிழ்த் திரைப்படத்துறை சிறந்த வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.[6][7][8] துடிப்பான திரைப்படத் தயாரிப்பாளர்கள், சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் திரைப்படங்களைத் தயாரித்து, தமிழ்த் திரைத் துறையில் முத்திரை பதிக்கின்றனர்.[9]
வரலாறு
மலேசியாவின் முதல் தமிழ் திரைப்படம் 'ரதா பேய்' என்ற படம் ஆகும். இந்த திரைப்படம் 1968 ஆம் ஆண்டு சென்னையில் உருவாக்கப்பட்டு, சனவரி 14, 1969 ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு ஜி. கே. வெங்கடேசு என்பவர் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்துறை கோலாலம்பூர், பினாங்கு மற்றும் ஜொகூர் பாரு போன்ற பிரதேசங்களை மையமாகக் கொண்டு குறைவான தொழிலார்களை வைத்து குறைந்தளவான தரமான திரைப்படங்களை தயாரிக்கிறது. பல நேரங்களில் தமிழகத் திரைப்படத்துறைக்கு எதிரான கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது.
2005 ஆம் ஆண்டு வெளியான 'செம்மண் சாலை' என்ற திரைப்படம் கிட்டத்தட்ட முற்றிலும் தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் மலேசிய தமிழ்த் திரைப்படம் ஆகும்.[10][11][12] இதே ஆண்டில் வெளியான 'ஓப்ஸ் கோசா தபா' என்ற திரைப்படம் ஒரு திரைப்படத்திற்காக அதிக நடிகர்களைக் கொண்ட படமாக மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள்
மலேசியத் தமிழ்த் திரைப்படத்துறையினர்
நடிகர்கள்
- மலேசியா வாசுதேவன் (1962–2011)
- ஆர்.மோகன ராஜ்
- பால கணபதி வில்லியம்
- முகன் ராவ்
- ராஜ்குமார் கோபாலன்
- டெனஸ் குமார்
நடிகைகள்
- கலைமாமணி எகிவள்ளி
- ஜாஸ்மின் மைக்கேல்
- ஷாலினி பாலசுந்தரம்
- ஹானி சிவ்ராஜ் (1991-2014)
- ஷாஷா ஸ்ரீ
- நித்யா ஸ்ரீ
- 'புன்னகை பூ' கீதா
- புஷ்பா நாராயண்
- சங்கீதா கிருஷ்ணசாமி
- சுபா ஜெய் (1976-2014)
இயக்குநர்கள்
- கார்த்திக் ஷமலன்
- ரமேஷ் புஞ்சரட்னம்
- ஷாலினி பாலசுந்தரம்
- வி.நாகராஜ்
- பேரகாஸ் ராஜரம்
- பிரேம் நாத்
- பால கணபதி வில்லியம்
- ப்ரபூ அரிவா
- சுதேன் சிவகுரு
தமிழ்நாட்டில் மலேசியத் தமிழ்த் திரைப்பட விழா
மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள் ஆண்டுக்கொரு முறை தமிழ்நாட்டின் சென்னையில் திரையிடப்படுகின்றன. 2012 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் மலேசியாவில் தயாரான பத்து திரைப்படங்கள் திரையிடப்பட்டன.[13]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Table 8: Cinema Infrastructure - Capacity". UNESCO Institute for Statistics இம் மூலத்தில் இருந்து 24 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224225516/http://data.uis.unesco.org/?ReportId=5542. பார்த்த நாள்: 5 November 2013.
- ↑ "Table 6: Share of Top 3 distributors (Excel)". UNESCO Institute for Statistics இம் மூலத்தில் இருந்து 16 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130916061251/http://stats.uis.unesco.org/unesco/ReportFolders/ReportFolders.aspx. பார்த்த நாள்: 5 November 2013.
- ↑ "Table 1: Feature Film Production - Genre/Method of Shooting". UNESCO Institute for Statistics இம் மூலத்தில் இருந்து 24 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224225519/http://data.uis.unesco.org/?ReportId=5545. பார்த்த நாள்: 5 November 2013.
- ↑ 4.0 4.1 "Table 11: Exhibition - Admissions & Gross Box Office (GBO)". UNESCO Institute for Statistics இம் மூலத்தில் இருந்து 24 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224225511/http://data.uis.unesco.org/?ReportId=5538. பார்த்த நாள்: 5 November 2013.
- ↑ "Local Tamil film 'Vedigundu Pasangge' to show in Singapore and Sri Lanka". Malaysia. http://www.thesundaily.my/news/2018/06/10/local-tamil-film-vedigundu-pasangge-show-singapore-and-sri-lanka.
- ↑ "Archives - The Star Online." இம் மூலத்தில் இருந்து 20 ஜூலை 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180720022703/https://www.thestar.com.my/story/?file=%2F2011%2F4%2F16%2Fnation%2F8492067&sec=nation. பார்த்த நாள்: 19 July 2018.
- ↑ "How the director of local Tamil film 'Maindhan' beat the odds - News - The Star Online". http://www.thestar.com.my/Lifestyle/Entertainment/Movies/News/2014/09/18/Beating-the-odds/. பார்த்த நாள்: 19 July 2018.
- ↑ "Gotta say something ...: Local Tamil movies - why I don't feel like watching?". 18 June 2012. http://sashisez.blogspot.com/2012/06/local-tamil-moviestelemovies-why-i-dont.html. பார்த்த நாள்: 19 July 2018.
- ↑ தமிழ்த் திரைப்படத்துறை வளர்ந்து வருகின்றது. 29 திசம்பர் 2011[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Min, Lim Li (2005-04-05). "A lens on the Malaysian margins" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2005/04/05/arts/a-lens-on-the-malaysian-margins.html.
- ↑ "Deepak Kumaran talks about the success of Chemman Chaalai - News | The Star Online" இம் மூலத்தில் இருந்து 2018-03-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180311081138/https://www.thestar.com.my/lifestyle/entertainment/movies/news/2005/07/13/deepak-kumaran-talks-about-the-success-of-chemman-chaalai/.
- ↑ Guillen, Michael (2006-03-10). "The Evening Class: MALAYSIAN CINEMAS— Chemman Chaalai (The Gravel Road)". http://theeveningclass.blogspot.com/2006/03/malaysian-cinemas-chemman-chaalai.html.
- ↑ "சென்னையில் மலேசியத் தமிழ்ப் பட விழா" இம் மூலத்தில் இருந்து 2012-01-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120110105324/http://www.tamilkurinji.in/cinema_details.php?%2F%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2F%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%2F%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%2F%E0%AE%AA%E0%AE%9F%2F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%2F&id=21145.